வல்வெட்டித்துறை, ஊறணி பகுதியில் காதலியின் கழுத்தை வெட்டிய குற்றச்சாட்டில் காதலனான 20 வயதுடைய இளைஞனை புதன்கிழமை (03) கைது செய்துள்ளதாக வல்வெட்டித்துறைப் பொலிஸார் தெரிவித்தனர்.

தன்னைக் காதலித்த பெண் தன்னை ஏமாற்றியதாகக்கூறி கடந்த 25ஆம் திகதி யுவதியின் வீட்டுக்குச் சென்ற இளைஞன், யுவதியின் கழுத்தை வெட்டியதுடன், தன்னையும் வாளால் வெட்டிக் காயப்படுத்தியுள்ளார்.

படுகாயமடைந்த இருவரும் யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தனர்.

இளைஞன் சிகிச்சை பெற்று இன்று புதன்கிழமை (03) வீடு திரும்பியதை அடுத்து, அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் கூறினர்.

திருட்டுச் சந்தேகத்தில் கணவன், மனைவி கைது
03-05-2015
thirudan_police12

யாழ்.காரைநகர் பிரதான வீதியிலுள்ள வீடொன்றில் பணம் மற்றும் நகையை திருடிய சந்தேகத்தின் பேரில் கணவன், மனைவியான இருவர், செவ்வாய்க்கிழமை (02) கைது செய்யப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த வீட்டுக்குள் கடந்த மே மாதம் 31ஆம் திகதி உள்நுழைந்து 50 ஆயிரம் ரூபாய் பணம் மற்றும் 2 பவுண் நகை என்பன திருடப்பட்டிருந்தது. இந்தத் திருட்டுச் சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளர் ஊர்காவற்றுறை பொலிஸ் நிலையத்தில் திங்கட்கிழமை (01) முறைப்பாடு பதிவு செய்தார்.

முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு, அதேயிடத்தைச் சேர்ந்த கணவன், மனைவியான குறித்த இருவரையும் பொலிஸார் கைது செய்யப்பட்டனர்.

Share.
Leave A Reply

Exit mobile version