“கொழும்பானுகள்” உங்களை ஆளவந்தால் உங்கள் துன்பங்கள், துயரங்கள் உங்களைவிட்டு பறந்தே போய்விடும. உங்களோடு உற்றார்.., உறவினராக, உற்ற நண்பர்களாக, உயிர் சொந்தங்களாக, அயலவராக வாழ்ந்தவர்கள்.. இவர்கள்??
உங்கள் இன்பத்திலும், துன்பத்திலும் இரண்டறக்கலந்து உயிர் மூச்சாக வாழ்நதவர்கள்… இவர்கள்? இவர்களுக்கு இல்லாத உரிமையா?
இதே உங்களிடமிருக்கும் ஒரேயொரு சொத்தான உங்கள் பொன்னான “வாக்கை” வாங்க வருகிறார்கள். வழங்குவீாகளா?
பாவம் இவர்கள்!! . பணமிருக்கு, பங்களா இருக்கு.. படித்திருக்கிறார்கள். ஆனால்….இவர்களிடம் பாராளுமன்ற பதவியில்லையே?
பாராளுமன்ற பதவியை பணம் கொடுத்தா வாங்கமுடியும்?
“பாராளுமன்ற பதவி அவர்களுக்கு கிடைக்கவேண்டுமெனில்… அது உங்கள் கையில் தான் இருக்கிறது”.
நீங்கள் செய்யவேண்டியது இதுதான். நீங்கள் வைத்திருக்கும் உங்கள் பொன்னான “வாக்கை” கொழும்பானுகளுக்கு அளித்து, முடிந்தால் ஒரு மாலையும் வாங்கி போட்டு, கும்பிட்டு வாழ்த்தி அனுப்பி வையுங்கள்.
உங்களிடம் வரும்போது வேட்டியும், சால்வையும் அணிந்து வருவார்கள். கொழும்பில் நிற்கும்போது கோட்டும் சூட்டு அணிந்து நிற்பார்கள் என்பதை உங்களுக்கு நினைவு படுத்தி வைக்க விரும்புகின்றோம்.
குடத்தனையில் சுமந்திரனின் புதிய அலுவலம் திறப்பு: முதலமைச்சர், மாவை விஜயம்(படங்கள்)
வடமராட்சி குடத்தனைப் பகுதியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனின் புதிய அலுவலகத்தின் செயற்பாடுகள் நேற்று முன்தினம் திங்கட்கிழமை வைபவ ரீதியாக பால்காய்ச்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது.