கனடாவில் 10 மாத குழந்தை ஒன்று தனது தாயுடன் பிறந்த இரட்டையரை பார்த்து குழம்பி போன வீடியோவை யூ டியூபில் லட்சக்கணக்கானோர் பார்த்து வருகின்றனர்.

லிதுவேனியாவில் பிறந்த பெலிக்ஸ் என்ற அந்த 10 மாத குழந்தையை, கனடாவில் உள்ள உறவினர்களை பார்க்க பெற்றோர்கள் அழைத்து சென்றனர்.

அந்நாட்டின் தலைநகர் மோன்ட்ரியலில் பெலிக்ஸ் கண்ட காட்சி அவனுக்கு குழப்பத்தை தந்தது. தனது தாயை போன்ற மற்றொரு உருவத்தை கண்டு அவன் குழம்பி போகும் காட்சிகள் வீடியோவாக பதிவு செய்யப்பட்டு, அது யூ டியூபில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.

அந்த வீடியோவில் தாயையும், சிற்றன்னையையும் அவன் பார்த்து பார்த்து குழப்படையும் காட்சி தெளிவாக தெரிகிறது.

மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்தும் இந்த வீடியோவை இதுவரை 36 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.

Share.
Leave A Reply

Exit mobile version