தனக்கு பிறந்த குழந்தையை ஏற்க மறுத்த 30 வயதுடைய பெண்ணொருவரை, மானிப்பாயிலுள்ள காப்பகம் ஒன்றில் தடுத்து வைக்குமாறு யாழ். சிறுவர் நீதவான் நீதிமன்ற நீதவான் பொ.சிவகுமார் வியாழக்கிழமை (03) உத்தரவிட்டார்.

யாழ். போதனா வைத்தியசாலையில் நிறைமாதக் கர்ப்பிணியாக அனுமதிக்கப்பட்ட பெண்ணொருவர், கடந்த முதலாம் திகதி ஆண் குழந்தையொன்றை பிரசவித்தார்.

திருமணமாகாத நிலையில் தான் அந்த குழந்தையை பிரசவித்ததால், சமூகத்தின் தனக்கு கெட்ட பெயர் ஏற்படும் என்றும் அதனால் அக்குழந்தையை தன்னால் ஏற்றுக்கொள்ள முடியாதென்றும் அப்பெண், தனது குழந்தையை பெற்றுக்கொள்ள மறுத்துள்ளார்.

இதனால், குழப்பமடைந்த வைத்தியசாலை நிர்வாகம், இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தின் கவனத்துக்கு கொண்டுசென்றது.

அப்பெண்ணிடம் நேற்று புதன்கிழமை (03) விசாரணை நடத்திய பொலிஸார், பின்னர் அவரை யாழ். சிறுவர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தினர்.

இதன்போது, குழந்தையின் பாதுகாப்பு கருதி குழந்தையையும் அப்பெண்ணையும் கொழும்புத்துறையிலுள்ள காப்பகத்தில் எதிர்வரும் 24ஆம் திகதி வரை தடுத்து வைக்குமாறு பொலிஸாருக்கு நீதவான் உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply

Exit mobile version