துய­ருவோர் பேறு­பெற்றோர் ஏனெனில் அவர்கள் ஆறுதல் பெறு­வார்கள்” அவ்­வா­றி­ருந்­த­போதும் முதல் துய­ரத்தில் சித­றிய நெஞ்­சத்­துடன் வெளியான கண்­ணீரின் ஈரம் காய்­வ­தற்குள் அடுத்­த­டுத்து இழப்­புக்கள். தோல்­விகள். வலி­களைத் தாண்டி வாழ்க்­கை­யையே வெறு­க்கும­ள­விற்குச் செல்­கிறார் தாயொ­ருவர்.

ஆம், மூன்று பிள்­ளைகள் இறந்­த­பின்னும் கண­வ­னுக்­கா­கவும் மக­ளுக்­கா­கவும் வாழத்­து­டித்த எனக்கு பட்­ட­க­டனை அடைக்­கவோ பசிக்கு ஒரு­வேளை சாப்­பாடு வழங்­கவோ வழி தெரி­யாமல் தவிக்கும் நான் மர­ணத்தை அழைத்தாலும் அது கூட இந்த ஏழைத்­தாயை ஏற்க மறுக்­கி­றது.

கண்­ணீ­ருடன் கத­று­கிறார் ஞான­பாலன் விஜ­ய­ராணி என்ற 53 வய­து­டைய அவ­லத்தாய்.

இலங்கை வர­லாற்றில் மூன்று தசாப்­தங்­க­ளாக இன­ரீ­தி­யாக ஆரம்­பிக்­கப்­பட்ட முரண்­பா­டுகள் பிர­தேச ரீதி­யா­கவும் உரிமைப் போராட்­ட­மா­கவும் மிளிர்ந்­தது சக­ல­ருக்கும் தெரியும்.

இருந்­தாலும் பெற்றோர் பல கன­வு­களை சுமந்து பிள்­ளை­களைப் பெற்று தமக்­கான இறுதிக் காலத்தை பிள்­ளை­க­ளுடன் கழிக்­க­வேண்டும். என்ற எதிர்­பார்ப்­புடன் ஆரம்­ப­மான குடும்­பம் தான் இந்த ஞானபாலன் விஜ­ய­ராணி குடும்பம்.

எங்­க­ளுக்கு சொந்த வீடு இல்லை என்­றாலும் என்ர கணவர் கூலி வேலை செய்து கொண்டு வரும் பணத்தில் நான்கு பிள்­ளை­க­ளையும் நன்­றாக வளர்த்தேன்.

என்ர பிள்­ளை­ய­ளுக்­கென்று பார்த்து பார்த்து ஒவ்­வொரு விட­யத்­தையும் செய்து வந்த நான் 1995ஆம் ஆண்டு வலி­காமம் பிரச்­சினை தொடங்கும் போது எல்­லாப்­பிள்­ளை­யலும் இளம் பருவம் வச்­சி­ருந்தா எங்க போறாங்­களோ தெரி­யாது என்­றிட்டு 2000ஆம் ஆண்டு மேசன் வேலை ஒப்­பந்தம் எடுத்து அனுப்பி­னார்கள்.

அங்க பிள்ளை வேலைக்கு போற­நேரம் 2000.05.10ஆம் திகதி ஷெல்­வி­ழுந்து இறந்­திட்டார். அவர் இறக்கும் போது (வயது 26) அதன்­பி­றகு என்ர இரண்­டா­வது மகன் கூலி­வேலை செய்து இர­வில மேசன் வேலை­யையும் செய்து கண­வற்ற உழைப்­போட நல்லா இருந்தம்.

ஆனால்  யார்  கண்­பட்­டதோ  தெரி­யாது மூத்­தவர் செத்து 6 மாதத்­தில இரண்­டா­வது மகன் 2000.12.19 ஆம் திகதி அவன்ர 19ஆவது வயது  பிறந்­த­நா­ளன்று கொடி­காமச் சந்­தைக்கு மீன் வாங்கப் போன பிள்ளையை  மாலை­வரை காணேல்ல  என்று தேடிப்­போக சந்­தை­யில இருந்­தவை சொல்­லிச்­சினம் சந்­தைக்க நின்ற கன­பெ­டி­யள ஆமி பிடிச்சு ஏத்­திற்று போனது.

அதில உங்­கட மக­னையும் பிடிச்­சதை கண்ட நாங்கள் என்று ஆனால் நாங்கள் அந்த நேரம் முதல் ஒவ்­வொரு ஆமிக்­காம்­பாக போய் தேடினம் எந்த ஒரு இடத்­தி­லையும் நாங்கள் பிடிக்­கேல்ல என்று சொன்னார்கள்.

ஆனால் பிடிச்ச ஆட்­கள்ள இருந்து தம்பி வந்­த­வர்கள் சொன்னார்கள் இரா­ணுவம் அவரை படு­கொலை செய்து விட்­டது என்று.

என்ர இரண்டு பிள்­ளை­களும் செத்­திட்­டினம். மூத்­த­வற்ற பிரே­தத்தை என்­றாலும் பார்த்தன். இரண்டாவது மகன்ர பிரே­தத்தை கூட அவர்கள் தர­வில்லை. (ஆனால் இரு­வரும் அகா­ல­ம­ரணம் அடைந்து விட்­டார்கள் என்று மரண அத்­தாட்சி பத்­திரம் இருக்கு)

மூன்­றா­வது மகன் இவர்கள் இரு­வ­ருக்கும் முதலே இறந்­திட்டார். காரணம் பிரச்­சினை கூடி 1998இல் நாலு­பக்­கமும் தென்­ம­ராட்­சி­யில ஷெல்­லுகள் விழ காய்ச்சல் காய காய பனடோல் கூட இல்­லாத நேரத்­தில மல்­லிய அவிச்சு குடுத்து வச்­சி­ருந்தன்.

பிள்­ளைக்கு வலிப்பு வந்து செத்­து­போனார். சாகும்­போது இளை­ய­வ­னுக்கு 15வயது. மூன்று பிள்ளையலையும் சாகக் குடுத்­திட்டு என்­னத்­துக்கு நாங்கள் உயி­ரோட இருக்­க­வேண்டும்.

என்று பல­முறை யோசிப்பம் நானும் கண­வரும். ஆனால் மூன்று சகோ­த­ரத்­தையும் சாகக் குடுத்­திட்டு என்ர பொம்­பி­ளப்­பிள்ளை தனி­ம­ரமா நிற்­குதே என்று நானும் மனு­சனும் கூலி­வேலை செய்து பொம்பிளப்­பிள்ளையை படிப்பிச்சு நல்ல நிலைக்கு கொண்­டு­வ­ர­வேண்டும் என பாடு­பட்டம்.

முடி­யேல்ல காரணம் மூன்று பிள்­ளை­களின் மர­ணத்­தோட கண­வரும் மர­ணப்­ப­டுக்­கைக்கு போற அள­விற்கு அவ­ருக்கு புற்­றுநோய் வந்­திட்­டுது.

இதால நான் தெரிந்த இடத்­தில மகளை கட்டிக் கொடுத்­து­விட்டேன். மகளை கட்டிக் கொடுக்கும் போது எங்கட கையில எது­வுமே இல்லை. வெறும் பெண்ணை கட்டிக் கொடுத்தோம்.

மூன்று பிள்­ளை­க­ளையும் சாகக் கொடுத்­த­னாங்கள்  ஒரு பிள்­ளை­யா­வது வாழ வைக்­க­வேண்டும் என்று தினம் தினம் போரா­டினோம்.

அவாவின் திரு­ம­ண­வாழ்வு பொரு­ளா­தாரம் இல்­லா­விட்­டாலும் நல்ல மகிழ்­வாக அமைந்­தது. அவாக்கு 12, 8, 5 வய­தில மூன்று மகள்மார் இருக்­கினம்.

அந்த மூவ­ரையும் நான் என்ர மகன்மார் என நினைத்தே பார்த்து பார்த்து வளர்ப்பேன். அவளும் தன்ர சகோ­த­ரம்தான் தனக்கு வந்து பிறந்­த­தென்று தினம் தினம் கூறி கவ­லையை ஆழ்த்­துவாள்.

எல்­லோ­ரையும் சாகக் குடுத்­திட்டு இருக்க வீடு இல்­லாம திரிஞ்ச நேரம் வறணி வாழைத்­தோட்ட சேச்சிற்கு முன்ன ஒரு வீட்­டில இருக்­கிறம்.

அந்த காணி சேச்­சிற்­குத்தான் சொந்தம். ஆனாலும் எங்­கட நிலை­மையை அறிந்து எங்­க­ளுக்கு அந்தக் காணி­யில வாடகை ஒன்றும் இல்­லாமல் இருக்­கத்­தந்­தி­ருக்­கி­றார்கள்.

என்ர கணவர் புற்று நோயால நீண்­ட­காலம் பாதிக்­கப்­பட்டு வந்­தவர். அவ­ருக்கு மருத்­துவச் செல­வுக்கு போக்­கு­வ­ரத்­திற்கு   என்­றெல்லாம் செல­வுகள் வரவர என்ர மக­ளின்ர ஒவ்­வொரு நகை­யையும் அடைவு­வைச்சு  அப்­பா­வை­யா­வது   இறுதி நேரத்தில்  காப்­பாற்றுவம்  என்று  எவ்­வ­ளவோ போராட்டம்.

அதுவும் முடி­ய­வில்லை. எங்கே நாங்கள் நிம்­ம­தி­யாக இருந்து விடு­வோமோ என நினைச்சே நாளுக்கு நாள் தண்­டிக்­கப்­பட்டு வந்தோம்.

கடை­சி­யில 2013 ஆம் ஆண்டு நான்­கா­வது உயி­ராக அவ­ரையும் பறி­கொ­டுத்து விட்டோம். ஒரே வீட்டுக்கு 4 பேரை சாகக் குடுத்­திட்டம்.

இருக்­கிற மூன்று பேரப்­பிள்­ளை­க­ளை­யா­வது படிப்­பிச்சு நல்ல நிலைக்கு கொண்டு வருவம் என்று நானும் மகளும் மரு­ம­கனும் 2013இல் இருந்து போராட ஆரம்­பிச்சம். ஆனால் எங்­கட போராட்டம் கானல் நீரா­கவே மாறி வரு­கி­றது.

எங்­கட மரு­மகன் 1988இல் இந்­தி­ய­னாமி பிரச்­சி­னைக்கு அவ­ரைப்­பி­டிச்சு கட்­டிப்போட்டு அடிச்­சவை. கன­நா­ளாக அவரை அப்­படி சித்­தி­ர­வதை படுத்தி விடு­தலை செய்­தார்கள்.

அதன்பின் அவர் நன்­றாக வேலை செய்து அவற்ற குடும்­பத்­தையும் பார்த்து எங்­கட குடும்­பத்­தையும் பார்த்து வந்­தவர்.

அவற்ற சகோ­த­ரியும் யுத்­தத்­தால இளம் வய­தி­லேயே வித­வை­யாக்­கப்­பட்டு இருக்­கிறா. இவ்­வாறு தினம் தினம் கஷ்­டப்­பட்டு இரண்டு குடும்­பத்­தையும் பார்த்து வந்த மரு­ம­க­னுக்கு பழைய நோ இப்ப பாதிப்பை ஏற்­ப­டுத்தி எழும்ப முடி­யாம, நடக்க முடி­யாம இருக்­கிறார்.

கிழ­மைல இரண்டு நாளைக்கு வேலைக்கு போவார். மீதி 5 நாளும் வீட்­டில தான் இந்த நிலை­மைல நானும் அவர்­க­ளுடன் இருக்­கிறன்.

அவர் (மரு­மகன்) வேலைக்கு போனால் ஒரு நாளைக்கு 1000 ரூபா கிடைக்கும். கிழ­மையில 2ஆயிரம் ரூபா எடுத்து மூன்று பிள்­ளையும் படிப்­பிச்சு நாங்கள் மூவரும் சாப்­பிட எவ்­வாறு காசு காணும்.

அடைவு வச்ச நகை என் கண்­முன்­னால ஆட்­க­ளின்ர உயிர் போன­மா­திரி ஏலத்­தில போட்­டுது. என்ர கணவர் செத்­த­போது ஆஸ்­பத்­தி­ரி­யால பிரேதம் கொண்­டு­வந்­த­தில இருந்து செத்­த­வீடு எல்­லாத்­திற்கும் சேர்த்து ஒரு இலட்சம் செல­வா­னது.

அது கூட கடன்­பட்டு செத்­த­வீடு செய்து முடிச்­சாச்சு. பட்ட கடனை அடைக்­கி­ரத்­திற்கு தினம் தினம் நான் போராடி வரு­கின்றன். கடன் தந்­த­வர்கள் நிற்க விட்­டிட்டு கேள்வி கேட்­கி­றார்கள். அதை பார்த்தே நானும் மகளும் பிள்­ளை­யலும் நாளுக்கு நாள் அணு அணு­வாக சாக­டிக்­கப்­ப­டு­கிறோம்.

யாழ். ஆயர் இந்த காணி­யில நாங்கள் இருக்­கட்டும் என்று கைப்­பட கடிதம் தந்­தவர். அந்த கடி­தத்தை வச்சு நான் இந்­திய வீட்­டுத்­திட்­டத்­திற்கு பதிஞ்­சனான். திட்டம் கிடைத்து விட்­ட­தாக கடிதம் வந்­தது.

காசுக்கு போனால் உங்­கட பெயரில் உறுதி இல்லை. கடி­தத்­தை வச்சு வீட்­டுத்­திட்டம் தரே­லாது என்று சொல்­லி­விட்­டார்கள்.

நாங்கள் இப்ப இருக்­கிற வீடு சுத்­த­வர சிவ­ரெல்லாம் வெடிப்பு. லைற் இல்லை. பிள்­ளையள் லாம்­பில படிப்­பினம்.

லாம்­புக்கு எண்ணெய் வாங்க காசு இல்லை என்றால் வீட்டில் ஏழு­ம­ணி­யோட விளக்கும் அணைக்­கப்பட்டு விடும். தெரு­ வெளிச்­சத்தை நம்­பியே எங்­கட இரவு வாழ்க்கை போகுது. இத­னால பிள்­ளை­யளின்ர கல்வி பாதிக்­குது.

வளர்ற பிள்­ளை­ய­ளுக்கு ஒழுங்­கான சாப்­பாடு இல்லை. குந்தி இருக்க இட­மில்லை. மரு­ம­க­னுக்கு குடிக்­கிற மருந்­துக்கு ஒரு மாப்­போத்தல் வாங்கக் கூட காசு இல்லை.

எனக்கு இப்ப 53 வயது. என்ர மக­ளுக்கு 30வயது. வாழ வழி­கேட்டு போகாத இட­மில்லை. குடுக்­காத கடிதம் இல்லை. பதியாத நிறுவனமில்லை. பேசாத மனிதரில்லை.

என்ன செய்வது விதியை நோவதா? அல்லது விதித்தவனை நோவதா? என்று தெரியாமல் வாழ்ந்து வருகிறேன். என்ர நிலையை உணர்ந்து யாராவது உதவி செய்ய நினைத்தால் என்ர குடும்பத்திற்கு வாழ்வாதார உதவி செய்யுங்கள். ஒரு வேளை கஞ்சியையோ கூழையோ குடிக்க வழிவகை செய்யுங்கோ.

தானதருமங்கள் எத்தனையோ எங்கெங்கோ எத்தனையோ தனவந்தர்கள் முன்றியடிக்கிறார்கள். வலிகளால் வதங்கி வாழ்க்கையே முடியாதா என்ற நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கும் இவர்களின் வயிற்றுப் பசியை போக்கினால் இப்பிறப்பில் நாம் செய்யும் அதியுச்ச தானமாகவும் தருமமாகவும் அமையுமல்லவா!

சிந்துஜா பிரசாத்

Share.
Leave A Reply

Exit mobile version