கனடாவில் விமானம் ஒன்று தரையிறங்கும் போது திடீரென்று ஓடுபாதையை விட்டு புல்வெளியில் பாய்ந்து விபத்துக்குள்ளானது.

வெஸ்ட் ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான விமானம் ஒன்று, டொரண்டோவில் இருந்து மான்டிரியல் விமானநிலையத்திற்கு வந்தது.

இவ்விமானத்தில் 50க்கும் மேற்பட்ட பயணிகள் பயணம் செய்தனர். இந்நிலையில் ஓடுபாதையில் தரை இறங்க வேண்டிய விமானம் திடீரென்று தடம் மாறி விமான நிலைய புல்வெளியில் பாய்ந்தது.

அதிர்ஷ்டவசமாக பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறங்கினர். நள்ளிரவு பெய்த மழையின் காரணமாக விமான ஓடுபாதை ஈரமாக இருந்ததே விமானம் தடம் மாற காரணம் என்று வெஸ்ட் ஜெட் ஏர்லைன்ஸ் நிறுவனம் கூறியுள்ளது.

plane-runway-maggie_2

Share.
Leave A Reply

Exit mobile version