தி.மு.க. தலைவர் கருணாநிதியின் பேரனும் மு.க.தமிழரசு – மோகனாம்பாள் ஆகியோரின் மகனுமான நடிகர் அருள்நிதிக்கும் நீதிபதி என்.கண்ணதாசன் – எஸ்.கே.கீதா ஆகியோரின் மகள் கீர்த்தனாவுக்கும் இன்று காலை சென்னை அண்ணாஅறிவாலயம் கலைஞர் அரங்கில் திருமணம் நடைபெற்றது.
தி.மு.க.தலைவர் கருணாநிதி முன்னிலையில் பொதுச்செயலாளர் க.அன்பழகன் தலைமை தாங்கிஅருள்நிதி – கீர்த்தனா திருமணத்தை நடத்தி வைத்தார்.
மணமக்கள் அருள்நிதி– கீர்த்தனா ஆகியோர் கருணாநிதி கால்களில் விழுந்து வணங்கினார்கள். அவர்கள்மீது மலர் தூவி கருணாநிதி வாழ்த்தினார்.
விழாவில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி, ஆ.ராசா, ஜெகத்ரட்சகன், துரைமுருகன், ஐ.பெரியசாமி, பொன்முடி, எ.வ.வேலு, தா.மோ.அன்பரசன், ஜெ.அன்பழகன் உள்ளிட்ட ஏராளமான கட்சி பிரமுகர்கள்பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்கள்பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார்கள்.
நேற்றிரவுநடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் கவர்னர் ரோசையா, பாமக நிறுவனர் டாக்டர்ராமதாஸ், திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி, த.மா.கா தலைவர் ஜி.கே.வாசன்உள்ளிட்ட அரசியல் தலைவர்களும், ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து, சிவகுமார், விஷால், விவேக், குஷ்பு உள்ளிட்ட திரையுலக பிரமுகர்களும் கலந்துகொண்டுமணமக்களை வாழ்த்தினர்.
பட்டத்து யானை உருவான விதம்