புங்குடுதீவு மாணவியின் கொலையுடன் தொடர்புடையவர் எனும் சந்தேகத்தில் நயினாதீவை சேர்ந்த நபர் ஒருவரை நேற்று குற்ற புலனாய்வு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.
நாயினதீவை சேர்ந்த 24 வயதுடைய நபர் ஒருவரையே இவ்வாறு குற்ற புலனாய்வு பிரிவு பொலிசார் கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.லெனின் குமார் முன்னிலையில் முற்படுத்தி பொலிஸ் காவலில் வைத்து விசாரிக்க பொலிசார் அனுமதி பெற்றுள்ளனர்.
தற்போது கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் காவலில் வைத்து பொலிசார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றார்கள்.
கடந்த மே மாதம் 13 ஆம் திகதி பாடசாலைக்கு சென்ற மாணவி கடத்தப்பட்டு வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டு இருந்தார்.
அந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனும் சந்தேகத்தில் ஏற்கனவே ஒன்பது நபர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இந் நிலையில் நேற்று பத்தாவது சந்தேக நபராக நயினாதீவை சேர்ந்த நபர் ஒருவரையும் பொலிசார் கைது செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
வித்தியா படுகொலை: 10 ஆயிரம் ரூபாய் ஒப்பந்தக்கொலை வெளியாகும் திடுக்கிடும் தகவல்கள்