அண்ணன், தம்பி இருவரையும் ஒரே நேரத்தில் காதலித்து அவர்களுக்கிடையில் பெரும் சண்டையை ஏற்படுத்தியுள்ளார் கொடிகாமத்தைச் சேர்ந்த 20 வயதான யுவதி. கைதடிப் பகுதியைச் சேர்ந்த டிப்பர் சாரதியான ஒருவருக்கும் குறித்த யுவதிக்கும் இடையில் காதல் ஏற்பட்டுள்ளது.
வன்னிப் பகுதியின் பல இடங்களுக்கும் யுவதி குறித்த காதலனுடன் டிப்பரில் சென்று வந்ததாகவும் யுவதியின் அயல் பகுதியைச் சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
இதே வேளை தனது மூத்த அண்ணனின் திருமணம் முடிவடைந்த பின்னர் யுவதியைத் திருமணம் செய்வதாக டிப்பர் சாரதியான காதலன் தெரிவித்துள்ளனான்.
இதனையடுத்து அண்ணனின் தொலைபேசி இலக்கத்தை காதலனிடம் இருந்து எவ்வாறோ பெற்ற யுவதி, காதலனின் அண்ணனைத் தொடர்பு கொண்டு அவனுக்கு ’லவ் இருக்கின்றதா’ என அவனிடமே கேட்ட போது அண்ணன் குழப்பமடைந்துள்ளான்.
அதன் பின்னர் குறித்த யுவதி அவனுடன் தொடர்பு கொள்ளவில்லை எனத் தெரிகின்றது, அந்த இலக்கத்தைக் குறித்துக் கொண்ட அண்ணன், பல நாட்களின் பின்னர் வேறு இலக்கத்தில் இருந்து குறித்த யுவதியை தொடர்பு கொண்டு தன்னைப் பற்றிப் புகழ்ந்தும் தனக்கு சொந்தமாக ஆட்டோ மற்றும் மோட்டார் சைக்கிள்கள் இருக்கின்றது எனவும் தான் இ்ன்னும் சில நாட்களில் ஐரோப்பிய நாடு ஒன்றுக்கு செல்லவுள்ளதாகவும் கதைத்து யுவதியை தன்வழிக்கு கொண்டு வந்துள்ளான்.
இதே வேளை குறித்த யுவதி தனது தம்பியின் காதலி என்பது அண்ணனுக்கு தெரியவில்லை. அதே நேரம் யுவதிக்கும் தனது காதலின் அண்ணன் தான் அது என வேறு இலக்கத்தில் இருந்து கதைத்ததால் தெரியாது போயுள்ளது.
காதலனின் அண்ணனுடன் ஏற்பட்ட தொலைபேசித் தொடர்பின் பின்னர் வற்றாப்பளை கோவில் உற்சவத்தின் போது அங்கு தனது காதலனின் அண்ணன் எனத் தெரியாது அவனைச் சந்தித்து கதைத்த பின்னர் தனது காதலனின் தொடர்பைத் துண்டித்துக் கொள்ள முயன்றுள்ளாள்.
இதன் பின்னர் காதலி தனது காதலை மறுப்பது ஏன் என காதலன் மேற்கொண்ட தீவிர புலனாய்வு விசாரணையின் போது தனது அண்ணனின் காதல் லீலை வெளிவந்தது.
இதனையடுத்து கடும் போதையில் வீட்டுக்குச் சென்ற தம்பி அண்ணனை கடுமையாகத் தாக்கியதுடன் கோடரி எடுத்து வெட்டுவதற்கு துரத்தியுள்ளான்.
தனது தம்பி எதற்காகத் தாக்குகின்றான் எனத் தெரியாது அண்ணனும் தப்பி ஓடியுள்ளான். இதன் பின்னர் குடும்பத்தினர் மேற்கொண்ட விசாரணைகளில் இருவரின் குட்டும் வெளி வந்தது.
இதே வேளை நேற்று முன்தினம் யுவதியின் வீ்ட்டுக்கு வந்த இரு சகோதரர்களது பெற்றோரும் உறவினரும் யுவதியின் குடும்பத்துடன் வாய்ச் சண்டையில் ஈடுபட்ட அதே வேளை யுவதியையும் தாக்குவதற்கு துரத்தியதாகத் தெரியவருகின்றது.
அத்துடன் யுவதியைக் காதலித்த தம்பி அதே தினம் இரவு வந்து யுவதியைத் தாக்கியதுடன் அவளது தலை முடியை வெட்ட முற்பட்டதாகவும் தெரியவருகின்றது,
இச் சம்பவத்தையடுத்து யுவதியின் அயலவர்கள் சேர்ந்து காதலனை துரத்திவிட்டு இனிமேல் இவ்வாறான செயற்பாடு தமது இடத்தில் மேற்கொண்டால் பொலிசாரிடம் அறிவிப்பதாக தெரிவித்து எச்சரித்து அனுப்பியுள்ளனர்,
மேற்படிச் சம்பவங்களை அடுத்து யுவதி தனது வீட்டில் இருந்து மாயமாகியுள்ளார். யுவதியின் பெற்றோர் பாதுகாப்புக் கருதி அந்த யுவதியை வன்னிப் பகுதிக்கு அனுப்பி வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.