ஐ.நாவே, இலங்கையில் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்து எனும் முழகத்துடன் நடைபெற்று வரும் கையெழுத்து இயக்கம் லட்சத்தினை எட்டியுள்ள நிலையில், இலக்கு பத்து இலட்சத்தினை எட்ட அனைவருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் அறைகூவல் விடுத்துள்ளது.

இலங்கையில் இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் பின் தற்போதைய ஆட்சிக்கு உயிர் கொடுக்கும் முகமாக ஐ.நா.மனித உரிமைகள் பேரவையின் அங்கத்துவ நாடுகள்,

ஒரு உள்நாட்டு பொறிமுறை அல்லது வெளிநாட்டுடன் இணைந்த ஒரு கலப்புப் பொறிமுறை மூலம் இவ் விசாரணையினை மேற்கொள்ளப் பரிந்துரைக்கும் ஆபத்து உள்ளதாக நாம் உணர்வதாக தெரிவித்துள்ள  நா.தமிழீழ அரசாங்கம், இந் நிலை ஏற்படின் எமக்கான பரிகாரநீதியினை பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்புகள் அருகி விடும் என நாம் அச்சத்தினை வெளிப்படுத்தியுள்ளது.

இதன் நிமித்தமாக ஐ.நா.மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் அறிக்கையில் நாம் விரும்பும் தாக்கத்தை ஏற்படுத்துமுகமாக   இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் முன் நிறுத்துமாறு கோரும் ஒரு மில்லியன் கையெழுத்துடன் பங்கெடுக்க பொது மக்கள், பொது அமைப்புக்கள், இளையோர்கள்,   சமூக-அரசியல் ஆர்வலர்கள், கல்வியாளர்கள், கலைஞர்கள் என அனைவருக்கும் அறைகூவல் விடுக்கப்பட்டுள்ளது.

www.tgte-icc.org எனும் இணையத்மூலமும் கையெழுத்து இயக்கத்தில் பங்கெடுக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளதோடு, இக் கையெழுத்து இயக்கத்துக்கான தொடர்பான படிவங்களை ஒப்பங்களுடன், ஜுலை 10 ம் திகதிக்கு முன்னராக குறித்த TGTE 875 Avenue of the Americas, Suite 906,New York, NY 10001, USA இந்த முகவரிக்கு கிடைக்குமாறு ஆவன செய்யுமாறும் வேண்டிக் கொள்ளப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version