வாட்ஸ்அப், ஃபேஸ்புக்கிற்கு அனுமதி மறுத்த கணவரைக் கொலை செய்த பெங்களூரு பெண்!

பெங்களூரு: வாட்ஸ் அப் மற்றும் ஃபேஸ்புக்கை பார்க்க அனுமதி மறுத்த கணவரை அடித்துக் கொன்றதாக பெங்களூரு பெண் திடுக்கிடும் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

கடந்த மாதம்  நடந்த பெங்களூருவைச் சேர்ந்த  கம்ப்யூட்டர் என்ஜினீயர் கொலை வழக்கில், அவரின் மனைவி உள்பட 3 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் வெளியாகி உள்ளன.

ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பண்டகிண்ட கோட்டப்பள்ளி கிராமத்தைச்  சேர்ந்தவர் கேசவரெட்டி.

32 வயதான இவர் பெங்களூருவில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக வேலை பார்த்து வந்தார்.

இவரது மனைவி ஷில்பா. இவர்களுக்கு திருமணமாகி 6 வருடங்கள் ஆகின்றன. இவர்களுக்குக் குழந்தைகள் இல்லை. பெங்களூரு பானசவாடியில் வாடகை வீட்டில் தனது மனைவியுடன் வசித்து வந்தார்.

இந்நிலையில் கடந்த 6 ஆம் தேதி முதல் கேசவரெட்டி வீட்டிற்கு வரவில்லை. இதனால் அவரின் குடும்பத்தினர் கேசவரெட்டியைத்  தேடி வந்தனர்.

இதற்கிடையே கடந்த  9 ஆம் தேதி காலையில், கோலார் மாவட்டம் சீனிவாசபூர் தாலுகா காடிரோலகத்த கிராமம் அருகே உள்ள ஏரிக்கரையில் ரத்தக்காயங்களுடன் கேசவரெட்டி கொலை செய்யப்பட்டு பிணமாகக் கிடந்தார்.

இதுகுறித்த தகவல் அறிந்த கவுனிப்பள்ளி போலீசார், வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

ஆனால் கொலை குறித்த துப்பு எதுவும் கிடைக்காமல் இருந்தது. இந்த நிலையில் கொலை செய்யப்பட்ட கேசவரெட்டியின் சகோதரர் போலீஸிடம்  ” ஷில்பா,  தனக்கு போன் செய்து கேசவரெட்டி ஊருக்குப்  புறப்பட்டு வந்தார்.

அவர் பாதுகாப்பாக வந்துவிட்டாரா? என்று கேட்டதாகத்  தெரிவித்தார். மேலும் வழக்கமாக ஷில்பா இதுபோல் என்னிடம் கேட்பதில்லை” என்று தெரிவித்தார்.

ஆனால் கேசவரெட்டியின் உறவினர்கள் ஷில்பாவு க்கும் வாசுதேவுக்கும் கள்ளத்தொடர்பு இருந்தது. அதன் காரணமாகவே கேசவரெட்டி கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்று கூறியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து போலீசார்,  ஷில்பாவின் செல்போன் பதிவுகளை ஆய்வு செய்தனர். அப்போது கொலை நடந்த இரவு அதாவது கடந்த 6 ஆம் தேதி ஷில்பா, அவரது தந்தை ராமச்சந்திரா ரெட்டி, உறவினர் வாசுதேவ் ஆகியோரின் செல்போன்கள் கேசவரெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்த சீனிவாசப்பூரில் உள்ள செல்போன் டவர் எல்லைக்குள் இருந்தது தெரிய வந்தது.

எனவே கேசவ ரெட்டி கொலையில் ஷில்பாவுக்கு தொடர்பு இருப்பதை போலீசார் உறுதி செய்தனர். அதனைத் தொடர்ந்து போலீசார், ஷில்பாவிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். அப்போது ஷில்பா தனது கணவரைக் கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

அதனைத் தொடர்ந்து கொலை தொடர்பாக ஷில்பா, அவரது தந்தை ராமச்சந்திரா ரெட்டி, உறவினர் வாசுதேவ் ஆகிய 3 பேரையும் கவுனிப்பள்ளி போலீசார் கைது செய்தனர்.

கைதான ஷில்பா உள்ளிட்ட 3 பேரையும் போலீசார்  விசாரணைக்காகத் தங்கள் காவலில் எடுத்தனர். போலீசார் ஷில்பா உள்பட கைதான 3 பேர்களிடமும் விசாரணை நடத்தினர். அப்போது திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின.

bengaluru shilpaகைதான ஷில்பா போலீசில் அளித்துள்ள பரபரப்பு வாக்குமூலத்தில்,

“எனது கணவர் கேசவரெட்டிக்கு பணம் மீது அதிக மோகம் இருந்தது. இதனால் அவர் வட்டிக்குப்  பணம் கொடுத்து வந்தார்.

என்னை வீட்டில் இருந்து வெளியே விடாமல், வீட்டிற்குள்ளே சிறைவைத்திருந்தார். மேலும் அவர் எந்த நேரத்தில் வீட்டிற்கு வந்தாலும், என்னுடன் செக்ஸ் அனுபவிக்க  கட்டாயப்படுத்தி வந்தார்.

அதுமட்டுமல்லாமல் நான் யாரிடமாவது பேசினால், அவர்களுடன் எனக்கு தொடர்பு இருப்பதாகக்  கூறி ‘சைக்கோ‘ போல் கொடுமைப்படுத்தி வந்தார்.

அதேபோல் செல்போனில் டுவிட்டர், ஃபேஸ்புக், வாட்ஸ் அப் பயன்படுத்தவும் என்னை அனுமதிப்பதில்லை.

எனது தந்தை வீட்டில் என்னுடன் வளர்ந்தவர் வாசுதேவா ரெட்டி. இவரும் நானும், அக்காள், தம்பி போல் பழகி வந்தோம். அதனால் அவர் எனது வீட்டிற்கு அடிக்கடி வந்து சென்றார்.

ஆனால் எனது கணவர், எனக்கும், வாசுதேவா ரெட்டிக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாகச்  சந்தேகப்பட்டார்.

பாலியல் தொல்லை, நடத்தையில் சந்தேகம் என பல்வேறு கொடுமைகளை செய்து வந்தார். இந்த கொடுமை நாளுக்கு நாள் அதிகரிக்கத் தொடங்கியது. இதனால் கணவர் கேசவரெட்டி மீது எனக்கு வெறுப்பு அதிகரித்தது. அதனால் கணவரைக்  கொலை செய்ய திட்டமிட்டேன்.

அதன்படி கடந்த 6 ஆம் தேதி இரவு வீட்டிற்கு வந்த கேசவரெட்டிக்கு பாலில் அளவுக்கு அதிகமாக தூக்கமாத்திரை கலந்துகொடுத்தேன். அந்தப்  பாலை குடித்ததும் அவர் தூங்கிவிட்டார்.

அப்போது நான் இரும்பு கம்பியால் கேசவரெட்டியின் தலையில் அடித்துக் கொன்றேன். அதன்பிறகு எனது தந்தை ராமச்சந்திரா ரெட்டி, உறவினர் வாசுதேவ் உதவியுடன் கணவரின் உடலை, காடிரோலகத்த கிராமம் அருகே உள்ள ஏரிக்கரையில் வீசினேன்” என்று கூறியிருக்கிறார்.

Share.
Leave A Reply

Exit mobile version