பீஜிங்: இளைஞர் ஒருவர் தனது செல்ல நாயின் காலில் ஆப்பிள் வாட்சை கட்டி அதை இணையத்தில் பகிர்ந்ததால் அவரது தந்தை கடும் விமர்சனத்திற்கு ஆளாகியுள்ளார்.
சீனாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் வாங் ஜியாலின். சிறிது நாட்களுக்கு முன்பு இவரது 27 வயது மகன் வாங் சிகாங் ஒரு புகைப்படத்தை சமூகவலைதளத்தில் பகிர்ந்தார்.
அந்த படத்தில் நாய் ஒன்றின் இரண்டு கால்களில் சுமார் 12 லட்சம் மதிப்புள்ள ஆப்பிள் வாட்ச் கட்டப்பட்டிருந்தது. மேலும் உங்களிடம் இந்த வாட்ச் உள்ளதா என்றும் கேட்கப்பட்டிருந்தது.
இது சீனாவில் பணக்காரர்களுக்கும், ஏழைகளுக்கும் இடையே நிலவும் வேறுபாட்டை காட்டுவதாக இணையத்திலும், ஊடகங்களிலும் கடும் விமர்சனத்திற்கு ஆளானது.
இந்த விமர்சனத்திற்கு பதில் அளித்துள்ள அவரது தந்தை, தனது மகனை கண்டிக்காமல் ”பல ஆண்டுகள் மேற்கத்திய நாடுகளில் படித்ததால் அவனது சிந்தனை பாழடைந்து விட்டது” என கூறியுள்ளார்.
இதில் முக்கியமான விஷயம் ஆப்பிள் வாட்சை கட்டியிருந்த நாய்க்கு என தனியாக சமூகவலைதளத்தில் கணக்கு வைத்துள்ளார் வாங் சிகாங்.
மேலும் இந்த கணக்கை 8 லட்சம் பேர் பின் தொடர்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.