கலிபோர்னியா: நாய்களுக்கும் மனிதர்களுக்குமான உறவு முழுக்க முழுக்க அன்பினால் மட்டுமேயானதென்று தெளிவாகப் புரிகிறது. 46 லட்சம் பேரை நெகிழ வைத்த இந்த யூ-டியூப் வீடியோவை பார்த்த பிறகு.
’ஆஸ்பெர்கர்’ என்பது ஒரு வகையான ஆட்டிசம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்களை மருத்துவ உலகம் ’ஆஸ்பெர்கர்ஸ்’ என்று அழைக்கிறது.
சரியாகப் பேச முடியாது, சமூகத்துடன் எந்த வகையிலும் தொடர்பு கொள்ள முடியாது, எல்லா தவறுக்கும் தான் மட்டும் தான் காரணம் என்று தோன்றி தன்னைத்தானே தண்டித்துக் கொள்ளவும் தூண்டும் இந்த வகை ஆட்டிசத்தால் ’ஆஸ்பெர்கர்ஸ்’ அடையும் வலியும், தனிமை உணர்வும் வார்த்தைகளால் விவரிக்க முடியாதது.
இதுபோன்ற ஒரு ஆஸ்பெர்கர்தான் ’டேனியல் ஜேகப்ஸ்’, அவர் வளர்க்கும் நாயின் பெயர் சாம்சன். கடந்த ஜூன் 1-ம் தேதி இவர் யூ-டியூபில் ஒரு வீடியோவை அப்லோட் செய்தார்.
ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட ஒரு பெண்ணின் வலியையும், ஒரு வளர்ப்பு நாயின் அன்பையும், ஒரு சேர உணர்த்தும் இந்த வீடியோவைப் பார்த்து நெகிழாமல் இருக்க முடியுமா என்ன?