கனடா நாட்டில் உள்ள மலைத்தொடர் ஒன்றில் , மனிதனுடைய முகம்போல காட்சியளிக்கும் ஒரு கல்பாறை உள்ளது. இதனை Hank Gus என்னும் நபர் கவனித்துள்ளார்.
அவர் விமானத்தில் பயணித்தவேளை கீழ் உள்ள அழகான மலைத்தொடர்களை புகைப்படம் எடுத்துள்ளார். அதேவேளை அதில் மனிதனுடைய முகம் இருப்பது போன்று ஒரு பெரும் பாறை இருப்பதையும் அவர் கவனித்துள்ளார்..
கடந்த 2 வருடங்களாக அந்த மலை இருக்கும் இடத்தை தேடி அலைந்த Hank Gus , இறுதியாக அமைந்துள்ள இடத்தை கண்டுபிடித்து.
பின்னர் வாடகைக்கு ஒரு சிறிய விமானத்தை அமர்த்தி அதன் அருகே சென்று புகைப்படம் எடுத்துள்ளார். இதுவரை எவரும் இந்த மலையின் இப்பகுதியை புகைப்படம் எடுத்ததே இல்லையென்கிறார்கள்.