யாழ்.குடாநாட்டில் பல்வேறு கொள்ளை மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 7 பேர் இன்றைய தினம்(வியாழக்கிழமை) அதிகாலை மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடமிருந்து பெருமளவு பணம், நகை, வாள், தொலைபேசிகள் உள்ளிட்ட பெறுமதியான பொருட்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் பல்கலைக்கழக மாணவன் ஒருவன் மீது வாள் வெட்டு நடத்தப்பட்டதில் குறித்த மாணவனின் கை துண்டாடப்பட்ட நிலையில் குறித்த மாணவன் தற்போது வரையில் கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றான்.

இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பில் ராஜ்குமார் கபிலராஜ் (வயது 24) என்ற இராணுவ சிப்பாய் ஒருவர் நேற்றைய தினம்(புதன்கிழமை) மானிப்பாய் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த நபர் வழங்கிய தகவல் அடிப்படையில் இன்றைய தினம் கிளிநொச்சி- சாந்தபுரம் மற்றும் உருத்திரபுரம் பகுதிகளைச் சேர்ந்த 7 சந்தேகநபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

இன்றைய தினம் அதிகாலை திடீர் சுற்றிவளைப்பு ஒன்றின் மூலமே இவர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவித்திருக்கும் பொலிஸார், இவர்களிடமிருந்து நகைகள், 4 மோட்டார் சைக்கிள்கள், தொலைபேசிகள், ஐபாட்கள், 6 லட்சத்து 96 ஆயிரம் ரூபா பணம் மற்றும் வாள் ஒன்றும் மீட்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இந்த கும்பல் யாழ்.குடாநாட்டில் பல கொள்ளை மற்றும் வாள்வெட்டு சம்பவங்களுடன் தொடர்புடையவை எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

manipay-robbery3

Share.
Leave A Reply

Exit mobile version