கல்லகபடம் அற்ற மகிழ்ச்சி எப்படி இருக்கும் என பார்க்க வேண்டுமா? தங்கள் இரவு உணவிற்கு ஓடிவரும் தங்க நிறத்திலான இந்த நாய் குட்டிகளை பாருங்கள் அவை ஒரே சமயத்தில் உங்களுக்கு பசியையும் மகிழ்ச்சியையும் ஏற்படுத்த தவறாது.

இந்த இரண்டு நாய் குட்டிகளும் பிறந்து 11 வாரத்திலிருந்து தங்கள் இரவு உணவிற்காக வளவளப்பான தரையில் வழுக்கியப்படி ஓடிவரும் அழகான காட்சி படம் பிடிக்கப்பட்டுள்ளது.

9 மாதங்கள் இவ்வாறு பதிவு செய்யப்படுள்ளது. இதில் மொத்தமாக 90 வினாடிகளில் குட்டியில் இருந்து நன்கு வளர்ந்த நாயாக மாறும் அற்புதம் நிகழ்கிறது.

இரண்டு நாய் குட்டிகளும் பிறந்து முதல் முதலாக எப்படி வெட்கத்துடன் தடுமாற்றத்துடன் உணவை நோக்கிவருகின்றன என்று இறுதியாக காட்டியிருக்கும் விதம் உண்மையிலேயே கண்கொள்ளா காட்சி.

கடந்த மூன்று நாட்களுக்கு முன்பு பதிவேற்றப்பட்ட இந்த காணொளியை இதுவரை 50 லட்சத்திற்கு மேற்பட்டவர்கள் பார்த்துள்ளார்கள். நீங்களும் மற்றவர்களுடன் இதை பகிர்ந்து, அவர்களின் மகிழ்ச்சியில் பங்கெடுத்துக்கொள்ளலாம்.

Share.
Leave A Reply

Exit mobile version