டெல்லி: இன்டர்நெட்டில் இன்று எல்லாமே நடக்கிறது.. நல்லதும் நடக்கிறது. பொல்லாததும் நடக்கிறது. பலர் இதில் பயன் பெறுகிறார்கள். பலர் சிக்கி சிதைகிறார்கள்.

இன்டர்நெட்டில் வீடியோ சாட் மிகப் பிரபலம். ஆனால் இந்த வீடியோ சாட் எந்த அளவுக்குப் பாதுகாப்பானது.. நமது வெப் காம் பாதுகாப்பானதா.. அதில் நாம் மட்டுமே தனிப்பட்ட முறையில் பேசிக் கொள்கிறோமா என்று யாரும் யோசித்துப் பார்ப்பதில்லை. அதிலும் ஹேக்கர்கள் புகுந்து விளையாடுகிறார்கள்.

எனவே பிரைவேட் வீடியோ சாட் என்ற பெயரில் இருந்தாலும் அதுவும் அம்பலமாகும் அபாயம் அதிகமாகவே உள்ளது. ஹேக்கர்கள் நினைத்தால் எந்த மாதிரியான வீடியோ சாட்டையும் ஹேக் செய்து தூக்கி எடுக்க முடியும்.

இப்படிப்பட்ட சிக்கலில் சிக்கிக் கொண்டால் என்னாகும்.. எப்படியெல்லாம் நம் மானம் போகும்.. அதை இந்த சம்பவம் விளக்குகிறது. ஒரு இளம் பெண் தனது காதலருடன் வீடியோ சாட்டை ஆரம்பிக்கிறார். காதலர் சற்று கோபமாக இருக்கிறார். இதனால் அவரை சாந்தப்படுத்தும் வகையில் பேசுகிறார்.

அப்போது அந்த காதலர், என்னை கூல் செய்ய வேண்டும் என்றால் நான் சொல்வதைக் கேட்க வேண்டும் என்கிறார். காதலியும் சரி என்கிறார். உன் டிரஸ்ஸைக் கழட்டு என்கிறார் காதலர். இதைக் கேட்டு அதிர்ச்சி அடையும் காதலி என்ன இது என்று கேட்கிறார்.

இருந்தாலும், காதலருக்காக டிரஸ்ஸைக் கழட்டுகிறார். மேலாடையைக் கழட்டிய காதலியிடம், கீழே உள்ளதையும் கழட்டச் சொல்கிறார் காதலர். காதலியோ வெகுவாக தயங்குகிறார்.

இருந்தாலும் காதலருக்காக அதையும் செய்யத் துணிகிறார்.. நிற்க.. இதுவரை நடந்ததெல்லாம் உண்மைச் சம்பவம் அல்ல. ஒரு விழிப்புணர்வுக்காக உருவாக்கப்பட்ட செட்டப் தான்.

இந்த வீடியோவின் இறுதியில், உங்களது தனிப்பட்ட வீடியோ சாட்டை எப்படியெல்லாம் தவறாகப் பயன்படுத்தலாம், கவனமாக இருக்க வேண்டும் பெண்களே என்ற எச்சரிக்கை வாசகத்துடன் முடிகிறது.

குறிப்பாக காதலர் சொல்லி விட்டார், கணவர் சொல்லி விட்டார் என்பதற்காக கேமரா முன்பு ஆடைகளை அவிழ்ப்பது, இன்ன பிற தனிப்பட்ட விஷயங்களில் ஈடுபடுவது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்த படம் நமக்கு உணர்த்துகிறது. இன்டிவைரல் வெளியிட்டுள்ள இந்த விழிப்புணர்வு வீடியோ தற்போது யுடூயூபில் வைரல் ஆகியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version