சென்னையில் மெட்ரோ ரயிலில் பயணி ஒருவரை தாம் அடித்ததாக கூறுவதை திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

சென்னை மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்பட்ட நிலையில் நேற்று மு.க.ஸ்டாலின் அதில் பயணம் செய்தார். அப்போது பயணி ஒருவரை ஸ்டாலின் கன்னத்தில் அறைந்ததாக கூறப்பட்டது.

இக்காணொளியும் இணையத்தில் வெளியாகியுள்ளது.

தமிழக முதல்வர் ஜெயலலிதாவும் இன்று வெளியிட்ட அறிக்கையில் பயணியை அறைந்த ஸ்டாலினுக்கு கண்டனம் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலளித்துள்ள மு.க.ஸ்டாலின், தாம் பயணியை ஒருபோதும் அடிக்கவில்லை என்று தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version