பல திறமைகளைக் கொண்ட ஜிவி பிரகாஷ் ஒரு ஐட்டம் என்று கிண்டலடித்தார் இயக்குநர் பார்த்திபன். கேமியோ பிலிம்ஸ் சிஜே ஜெயகுமார் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் குமார், கயல் ஆனந்தி, மனிஷா யாதவ், சிம்ரன் , விடிவி கணேஷ் ஆகியோர் நடித்துள்ள த்ரிஷா இல்லனா நயன்தாரா திரைப்படத்தின் ட்ரைலர் இன்று வெளியிடப்பட்டது.
தயாரிப்பாளர் சங்க தலைவர் கலைபுலி எஸ் தாணு, இயக்குனர்கள் ஏஆர் முருகதாஸ், பார்த்திபன், விஜய், கொம்பன் இயக்குனர் முத்தையா , பாடலாசிரியர் நா.முத்துகுமார். தயாரிப்பாளர்கள் கேஇ ஞானவேல் ராஜா, திருக்குமரன் எண்டர்டெய்ன்மென்ட் சிவி குமார், 2டி எண்டர்டெய்ன்மென்ட் ராஜசேகர் ஆகியோர் இவ்விழாவில் பங்கேற்று சிறப்பித்தனர்.
06-1436178953-trisha-illana-nayanthara3-600
தாணு
படத்தை பற்றி தயாரிப்பாளர் சங்க தலைவர் தாணு கூறும்பொழுது, “இயக்குனர் ஆதிக் மிகவும் திறமைசாலி, த்ரிஷா இல்லனா நயன்தாரா கதையை சில வருடங்களுக்கு முன் என்னிடம் கூறினார். அப்பொழுது என் நிறுவனத்தின் கீழ் சில படங்கள் தயாரித்து வந்ததால் என்னால் இப்படத்தை தயாரிக்க இயலவில்லை. இப்படத்தை சிஜெ ஜெயகுமார் தயாரிக்க முடிவு செய்தது மிக நேர்த்தியானது, என்றார்.
பார்த்திபன்
பங்கேற்கும் நிகழ்ச்சியை மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆழ்த்தும் வகையில் ஒரு குட்டி கதையுடன் ஆரம்பித்த இயக்குனர் பார்த்திபன் கூறுகையில், “ஜிவி பிரகாஷை இப்படி பார்க்க மிக ஆச்சர்யமாய் உள்ளது. பல ஐட்டங்களை உள்ளடக்கியிருக்கும் ஜிவி பிரகாஷ் ஒரு ‘Item'” என்று கிண்டல் செய்தார்.
இயக்குநர் விஜய்
” நடிப்பு, இசை என ஜிவி பிரகாஷ் மிகவும் பக்குவம் பெற்றுவிட்டார். இரண்டிற்கும் நேரத்தை சரியாக கடைப்பிடிக்கிறார் அவருக்கு என் வாழ்த்துக்கள்,” என வாழ்த்தினார் இயக்குனர் விஜய்.
ஏஆர் முருகதாஸ்
இயக்குனர் முருகதாஸ் பேசுகையில் “வெவ்வேறு துறைகளை கடந்து செல்லும் ஜிவி பிரகாஷுக்கு எனது வாழ்த்துக்கள். முதலில் என்னுடைய தயாரிப்பில்தான் அவரை கதாநாயகனாக அறிமுகப்படுத்த எண்ணினேன். எனினும் என் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ் கண்டிப்பாக நடிப்பார்,” எனக் கூறினார்.
ஞானவேல்ராஜா
டார்லிங் படத்தில் கதாநாயகனாய் அறிமுகம் செய்ததற்கும், இப்பொழுது ‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ படத்தை ஸ்டுடியோ க்ரீன் வெளியிடுவதும் பெரு மகிழ்ச்சியாக இருக்கிறது எனக் கூறினார் தயாரிப்பாளர் கேஈ ஞானவேல் ராஜா தயாரிப்பாளர்கள் சிவி குமார், ராஜசேகர், இயக்குனர் முத்தையா மற்றும் பாடலாசிரியர் த்ரிஷா இல்லனா நயன்தாரா குழுவினருக்கு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர்

தந்தைக்கு கவுரவம்
படத்தின் டிரைலரை இயக்குனர் முருகதாஸ் வெளியிட இயக்குனர் ஆதிக்கின் அப்பா ரவி கந்தசாமி பெற்றுக் கொண்டார். பல வருடங்கள் உதவி இயக்குனராய் பணிபுரிந்து இப்படத்தில் இணை இயக்குனராய் பணி புரிந்திருக்கும் ரவி கந்தசாமியை கௌரவப் படுத்தும் வகையில் நடந்த இந்நிகழ்வு நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் நெகிழ செய்தது. படத்தின் கதாநாயகனும், இசையமைப்பாளருமான ஜிவி பிரகாஷ் குமார் டீசர் வெளியீட்டு விழாவை சிறப்பித்த அனைத்து விருந்தினர்களுக்கும் நன்றி தெரிவித்தார்.

Share.
Leave A Reply

Exit mobile version