மட்டக்களப்பில் போட்டியிடவுள்ள கூட்டமைப்பின் எட்டாவது வேட்பாளர் யார்?

அடுத்தமாதம் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடும் எட்டாவது வேட்பாளர் யார் என்பது இன்னமும் முடிவாகவில்லை என்று தெரியவருகிறது.

வடக்கு, கிழக்கின் ஐந்து தேர்தல் மாவட்டங்களிலும், நாளை பிற்பகல் 2 மணியளவில் ஒரே நேரத்தில் வேட்பாளர் பட்டியலைச் சமர்ப்பிக்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.

இந்தநிலையில், மட்டக்களப்பு மாவட்ட வேட்பாளர் பட்டியலில், தமிழரசுக் கட்சி சார்பில் 5 பேரும், ஈபிஆர்எல்எவ், புளொட், ரெலோ சார்பில் தலா ஒருவரையும் நிறுத்துவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ரெலோ சார்பில் மாகாணசபை உறுப்பினர் கோவிந்தன் கருணாகரம், ஈ.பி.ஆர்.எல்.எவ். சார்பில் ஆர்.துரைரெட்ணம், புளொட் சார்பில், தனியார் கல்வி நிறுவன ஆசிரியரான அமல் மாஸ்டர் எனப்படும், வியாகுலேந்திரனும் போட்டியிடவுள்ளனர்.

தமிழரசுக் கட்சியின் சார்பில், கலைக்கப்பட்ட நாடாளுமன்றத்தின் உறுப்பினர்களாக இருந்த பொன் செல்வராசா, சீ.யோகேஸ்வரன், பா.அரியநேத்திரன் ஆகியோருடன் இரண்டு புதிய முகங்கள் களமிறக்கப்படவுள்ளனர்.

புதிய வேட்பாளர்களாக களமிறக்கப்படவுள்ள இருவரில், மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் பிரதிக் கல்விப் பணிப்பாளர் ஜீ.சிறீநேசனும் ஒருவர் என்பது உறுதியாகியுள்ளது.

எனினும், தமிழரசுக் கட்சியின் சார்பில் நிறுத்தப்படவுள்ள ஐந்தாவது வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னமும் முடிவாகவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ariyaratnamஇந்த மூவரும்   (சீ.யோகேஸ்வரன், பொன் செல்வராசா,  பா.அரியநேத்திரன் தொடர்ச்சியாக ஏன் தேர்தலில் போட்டியிடுகிறார்கள்??

மகிந்த ராஜபக்கச தொடர்ச்சியாக   பதிவியில்  இருக்கவேண்டும்  என்ற  நப்பாசையில்தான் ஜனாதிபதி  தேர்தலை  நடத்தி,  கடைசியில்  ஆட்சியையும் பறிகொடுத்து,  பதவியிலிருந்தும்    விலகினார்.

ஆனால  பாருங்கோ … மகிந்தவின்  ஆட்சியை   அகற்றுவதற்கு  தமிழர்களின் வாக்குகளை  பயன்படுத்திய   கூட்டமைப்பினர்கள் (கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள்)   தாங்கள் மட்டும் தொடர்ச்சியாக பதவி வகிக்கவேண்டும்  என்பதற்காக   மீண்டும் மீண்டும்  தேர்தலில்  போட்டியிடுகிறார்கள்.  இது என்ன நியாயம்?

மகிந்த ராஜபக்ச  மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடாது என்று நினைக்கும்  தமிழ் மக்கள் மீண்டும், மீண்டும்  பதவி ஆசைபிடித்து  தேர்தலில்  நிற்கும்  தமிழ் தேசிய   கூட்டமைப்பினரையும்   தமிழ்  மக்கள்  நிராகரிக்கவேண்டும்.

புதியவர்களுக்கு இடமளிக்கவேண்டும்.

இவர்களை விட்டால்  வேறு யாரும்  இல்லையா? அல்லது இவர்களுக்கு அப்படி என்னதான் தகுதியிருக்கிறது?

ஒருவர் ஒருமுறை அல்லது  இரண்டு  தடவை பதவி வகித்து  மூன்று தலைமுறைக்கு  பணம், பொருள், சொத்து, பத்துக்களை  சேர்த்தது போதாதா?

மற்றவர்களுக்கு அந்த ஆசையில்லையா?

இவர்கள்  பதவியில்  இருந்த காலங்களில்  தமிழர்களுக்கு எதை செய்தார்கள்? எதை பெற்றுக்கொடுத்தார்கள்?

திரும்ப, திரும்ப  தமிழர்கள் இவர்களுக்கு வாக்களித்து  பாராளுமன்ற பதவிகளை பெற்றுக்கொடுப்பதன் மூலம் எதை  சாதிக்கப்போகிறார்கள்?

இந்த  போலித் தமிழ்  தேசியவாத அரசியல்வாதிகளால்..  தமிழ் தேசியம் வெற்றிபெற்றதா? ஆகக்குறைந்தது  தமிழாகள்  தங்களுடைய  அடிப்படை  தேவைகளையாவது   இவர்கள்  மூலம்  பெற்றுக்கொள்ள  முடிந்ததா?

இவர்களை மீண்டும், மீண்டும்  பதவியில்  அமர்த்துவதன்  மூலம்.  “இருப்பதும் இல்லாமல் போகும், கிடைப்பதும் கிடைக்காமல் போகும், நடப்பதும் நடக்காமல் போகும்.” இதுதான் நடக்கும்.

அன்பான தமிழ் மக்களே!! வரும் பொதுதேர்தலில்  நீங்கள்  இவர்களுக்கு  வாக்கு போடும் அதேநேரம்,   மாலையும் ஒன்றை வாங்கி கொண்டு வந்து போட்டுவிடுங்கள்.

சிங்களவர்கள் ஆட்சியை மாற்றுகிறார்கள். ஆட்களையும் மாற்றுகிறார்கள். ஆனால்.. தமிழர்கள் தான்  தொடடர்ச்சியாக  ஒரே  பேர்வழிகளை   பதவியில்  வைத்திருக்க  ஆசைப்படுபவர்கள்.

தமிழ் அரசியல்வாதிகளும் தாங்கள் தான் தொடர்ச்சியாக பதவியில் இருக்கவேண்டும் என்று விரும்புபவர்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version