ilakkiyainfo

திருகோணமலை மைதானப் புதைகுழியில் இதுவரை 10 எலும்புக்கூடுகள் மீட்பு- (படங்கள்)

திருகோணமலை மக்கெய்சர் மைதானத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட புதைகுழி அகழ்வின் போது, ஆறு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதையடுத்து. இதுவரை மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை 10ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் 17ஆம் நாள் மக்கெய்சர் மைதானத்தில் கட்டுமானப் பணிகளுக்காக குழி தோண்டிய போது பகுதியில் மனிதஎச்சங்கள் கண்டெடுக்கப்பட்டன.

trinco-grave-2இதையடுத்து மனித எச்சங்கள் கண்டெடுக்கப்பட்ட பகுதியில் நிர்மாணப் பணிகள் மேற்கொள்வதற்கு தடைவிதிக்கப்பட்டு காவல்துறை பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்தது.

இந்தநிலையில், திருகோணமலை நீதிவான் டி.சரவணராஜா முன்னிலையில் கடந்த திங்கட்கிழமை தொடக்கம், இந்தப் புதைகுழி அகழ்வுப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

நேற்றுமுன்தினம் மேற்கொள்ளப்பட்ட அகழ்வின் போது, நான்கு மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டிருந்தன. நேற்று மேலும் ஆறு எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டன.

இந்த மனித எச்சங்கள் அனைத்தையும் சட்ட மருத்துவ அதிகாரியின் பாதுகாப்பில் வைக்குமாறு காவல்துறையினருக்கு நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

இன்று மீண்டும் அகழ்வுப் பணிகள் தொடரவுள்ளது.

Exit mobile version