தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி வரும் நாடாளுமன்றத் தேர்தலில், கொழும்பு மாவட்டத்தில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனுவைத் தாக்கல் செய்துள்ளார்.

ஆனந்த சங்கரியை முதன்மை வேட்பாளராக கொண்டு, கொழும்பு மாவட்டத்தில் தமிழர் விடுதலைக் கூட்டணி 22 வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.

கடந்த 2004ஆம், 2010ஆம் ஆண்டுகளில் நடந்த நாடாளுமன்றத் தேர்தல்களில் ஆனந்தசங்கரி, யாழ்ப்பாண மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

anandasangari-colombo-nominationகடந்த 2013ஆம் ஆண்டு நடந்த வடக்கு மாகாணசபைத் தேர்தலில் கிளிநொச்சி மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டுத் தோல்வி கண்டார்.

இந்தநிலையில், இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராக தனித்து போட்டியிடப் போவதாக அறிவித்த அவர், யாழ். மாவட்டத்தில் போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

எனினும், முன்னாள் நீதிபதி விக்னராஜா தலைமையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் தமது கட்சியின் வேட்பாளர்களை நிறுத்தியுள்ள ஆனந்தசங்கரி கொழும்பு மாவட்டச்செயலகத்தில் போட்டியிடுவதற்காக இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.

கொழும்பு மாவட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போட்டியிடாத சூழலைப் பயன்படுத்தி அவர் அங்கு இம்முறை களமிறங்கியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply

Exit mobile version