ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தனக்கு அறியக் கிடைத்தவுடனேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தான் கலந்துக்கொண்டிருந்த கூட்டத்தையும் இடை நிறுத்திவிட்டு உடனடியாக வைத்தியசாலைக்கு விரைந்து சென்றுள்ளார்.
நேற்று இரவு பிலியந்தலை பகுதியில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் மஹிந்த உரையாற்றிக்கொண்டிருந்த போது அவருக்கு அருகில் தொலைபேசி அழைப்புடன் சென்ற காமினி லொகுகே அவசரமாக மஹிந்தவிடம் தொலைபேசியை கொடுக்க தனது பேச்சை இடைநிறுத்திய மஹிந்த சுசில் இப்போ எங்கே இருக்கிறார்.
இப்போதே வருகின்றேன் என உடனடியாக மேடையிலிருந்து இரங்கி வைத்தியசாலைக்கு விரைந்து சென்றுள்ளார்.
கருணாவின் காலைவாரியது ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி
ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் தேசியப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் பதவிகளுக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ள 29 பேரின் பட்டியலில் கருணாவின் பெயர் இடம்பெறவில்லை.
முன்னதாக, அவரை மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிடுமாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி கேட்டிருந்தது.
ஆனால், அவர் மட்டக்களப்பில் ஒரு வேட்பாளராக தேர்தலைச் சந்திக்க மறுத்து விட்டார்.
இந்த நிலையில் அவருக்கு கடந்த முறையைப் போலவே தேசியப்பட்டியலில் இடமளிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.
தனக்கு தேசியப்பட்டியல் ஆசனம் வழங்குவதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச்செயலர் சுசில் பிரேம்ஜெயந்த் வாக்குறுதி அளித்திருப்பதாக கருணா கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தெரிவித்திருந்தார்.
எனினும், இன்று ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியால் வெளியிடப்பட்டுள்ள தேசியப்பட்டியலில் கருணாவின் பெயர் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.