யுத்தம் நடை­பெற்றுக் கொண்­டி­ருந்த இறுதி காலப்­ப­கு­தியில் இடம் பெற்ற கடத்­தல்­களும் காணாமல் போதல் சம்­ப­வங்­களும் ஏராளம்.

அவை படைத்­த­ரப்பால் செய்­யப்­பட்­டதா அல்­லது புலிகள் உள்­ளிட்ட ஆயுதக் குழுக்­களின் நட­வ­டிக்­கையா என்­பது தொடர்பில் விவா­தங்­களே இன்னும் தொடரும் நிலையில் தலைநகரில் இடம்­பெற்ற பாரிய கடத்­தல்கள் தொடர்பில் தற்­போது பல இர­க­சி­யங்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

பொலிஸ் மா அதிபர் என்.கே.இலங்­க­கோனின் நேரடி கட்­டுப்­பாட்டில் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு பொறுப்­பான சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் ரவி சென­வி­ரட்­னவின் ஆலோ­ச­னைக்கு அமைய புல­னாய்வுப் பிரிவின் பணிப்­பாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்­தி­யட்சர் நாக­ஹ­முல்­லவின் வழி­காட்­டலின் கீழ் புல­னாய்வு பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரனைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா தலை­மையில் முன்­னெ­டுக்­கப்­படும் இரு­வேறு விசா­ர­ணை­க­ளி­லேயே இந்த பிர­தான கடத்­தல்கள் தொடர்பில் தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

கொழும்பு, கொட்­டா­ஞ­்சேனை, தெஹி­வளை, வத்­தளை மற்றும் கட்­டு­நா­யக்க உள்­ளிட்ட பல பிர­தே­சங்­களில் பல்­வேறு உத்­தி­களை கையாண்டு இந்த கடத்­தல்கள் அரங்­கேற்­றப்­பட்­டுள்­ளமை உறு­தி­யா­கி­யுள்­ளது.

குறிப்­பாக தெஹி­வளையில் 2008.09.17 அன்று பெர்­னாண்டோ மாவத்­தையில் உள்ள அலி ஹாஜியார் அன்வரது வீட்டில் வைத்து அவரும் ரஜீவ நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன், தில­கேஸ்­வரன் ராம­லிங்கம், மொஹம்மட் திலான், மொஹம்மட் சாஜித் ஆகிய ஐந்து மாணவர்­களும் கடத்­தப்­பட்­டி­ருந்தனர்.

இத­னை­விட தலை­ந­கரின் பல்­வேறு பிர­தே­சங்­களில் வைத்தும் கடத்­தப்­பட்­ட­வர்­களின் எண்­ணிக்கை தற்­போதைய விசா­ர­ணை­க­ளுக்கு அமைய 11 ஆகும்.

கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த கஸ்­தூரி ஆரச்­சி­லாகே ஜோன் ரீட், மன்னார் அரிப்பு – கிழக்கு அரிப்பு பிரதேசத்தைச் சேர்ந்த அமலன் லியோன் மற்றும் ரொஷான் லியோன், கொட்­டாஞ்­சே­னையை சேர்ந்த அன்­டனி கஸ்­தூரி ஆரச்சி, திரு­கோ­ண­ம­லையை சேர்ந்த கன­க­ராஜா கஜன் ஆகி­யோரே கடத்­தப்­பட்­டுள்ள ஏனையவர்களாவர்.

இந் நிலையில் இந்த 11 பேர் தொடர்­பிலும் கொழும்பை அண்­மித்த பல்­வேறு பொலிஸ் நிலை­யங்­க­ளிலும் காணாமல் போனமை   தொடர்பில் முறைப்­பா­டுகள் உள்ள நிலையில் அவை அனைத்தும் தற்­போது குற்றப் புல­னாய்வு பிரி­வி­னா­லேயே விசா­ர­ணைக்கு உட்­ப­டுத்­தப்­பட்டு வரு­கி­றது.

கொழும்பு பிர­தான நீதிவான் நீதி­மன்றில் 5 மாண­வர்கள் தொடர்­பான ஆட் கொணர்வு மனுவும் கோட்டை பிரதான நீதிவான் முன்­னி­லையில் கடற்­ப­டையின் முன்னாள் தள­பதி அட்­மிரல் வசந்த கரன்­னா­கொட கொடுத்த முறை­ப்பா­டொன்­றி­னூ­டாக அம்­ப­ல­மான (5 மாண­வர்கள் உட்­பட) 11 பேரின் தொடர்­பிலும் வெவ்­வேறு வழக்­குகள் நிலு­வையில் உள்­ளன.

இது தொடர்பில் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டு­வரும் குற்றப் புல­னாய்வு பிரிவின் கூட்டுக் கொள்­கைகள் தொடர்­பி­லான விசா­ரணை பிரிவின் பொறுப்­ப­தி­காரி நிஸாந்த டீ சில்வா இந்த காணாமல் போதல் அல்­லது கடத்தல் தொடர்பில் பல்­வேறு அதிர்ச்சித் தக­வல்­களை வெளிப்ப­டுத்திக் கொண்­டுள்ளார்.

k.v.thavaraja-380-seithy

கே.வி.தவ­ராசா

பிர­தா­ன­மாக ஐந்து மாண­வர்கள் உள்­ளிட்ட பாதிக்­கப்­பட்ட 11 பேரின் உற­வி­னர்கள் சார்­பிலும் இடம் பெறும் ஆட் கொணர்வு மனுவில் சிரேஷ்ட சட்­டத்­த­ர­ணி­க­ளான கே.வி.தவ­ராசா மற்றும் ஜே.சீ.வெல அமுன ஆகி­யோரும் கோட்டை நீதி மன்றில் இடம்­பெறும் வழக்கில் சட்­டத்­த­ரணி அச்­சலா சென­வி­ரட்­னவும் ஆஜ­ராகி தொடர்ச்­சி­யாக இந்த கடத்­தல்கள் தொடர்பில் நீதிக்­காக போராடி வரு­கின்­றனர்.

ஏற்­க­னவே இந்த கடத்­தல்­க­ளுடன் கடற்­ப­டையின் பிர­தான குழு­வொன்று தொடர்­பு­பட்­டுள்­ளமை தொடர்பில் கடந்த நாட்­களில் “கடற்­ப­டையின் கப்பக் குழு” என்ற தலைப்பில் விரி­வாக எழு­தி­யி­ருந்தோம்.

இந்த நிலையில் இம்­முறை அந்த கடத்தல் தொடர்­பான சாட்­சி­யங்­க­ளையும் சில இர­க­சிய தடுப்­ப­ு முகாம்கள் தொடர்­பிலும் நாம் வெளிப்­ப­டுத்­த­வுள்ளோம்.

5 மாண­வர்கள் உள்­ளிட்ட தலை­ந­கரில் கடத்­தப்­பட்ட11 பேர் தொடர்­பிலும் கடற்­ப­டையைச் சேர்ந்த லெப்­டினன் கொமண்டர் தர அதி­கா­ரி­க­ளான ரண­சிங்க சுமித் ரண­சிங்க, ஹெட்டி ஆராச்சி பிரசாத், தேவி சம்பத் என அறியப்படும் சம்பத் முன­சிங்க ஆகியோர் புல­னாய்வுப் பிரிவின் கூட்டு கொள்­ளைகள் தொடர்­பி­லான விசாரணை பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்டு சந்­தேக நபர்­க­ளாக பெய­ரி­டப்­பட்­டுள்­ளனர்.

vasantha-karunnagoda

இவர்­களில் சம்பத் முன­சிங்க என்ற லெப்­டினன் கொமாண்டர் முன்னாள் கடற்­படைத் தள­பதி கரன்னாகொடவின் பாது­காப்பு பிரிவில் கட­மை­யாற்­றி­யுள்­ள­துடன் ஏனைய இரு­வரும் கடற்­ப­டையின் முன்னாள் ஊடகப் பேச்­சாளர் தஸ­நா­யக்­கவின் கட்­டுப்­பாட்­டி­லி­ருந்த விஷேட புல­னாய்வுப் பிரிவில் கட­மை­யாற்­றி­ய­வர்­க­ளாவர்.

புல­னாய்வுப் பிரி­வி­னரின் தக­வல்­களின் படி 2008 ஆகஸ்ட் மாதம் முதல் 2009 ஏப்ரல் மாதம் வரை­யி­லான காலப்­ப­கு­திக்குள் இந்த 11 பேரும் கடற்­ப­டை­யி­னரால் கொழும்பு வைத்­திய வீதியில் உள்ள கடற்­படை பரா­கி­ரம நிறு­வ­னத்தில் உள்ள ‘பிட்டு பம்பு’ எனும் பெயரால் அழைக்­கப்­படும் தடுப்பு அறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்­த­தாக வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

அத்­துடன் இக்­கா­லப்­ப­கு­தியில் கஸ்­தூரி ஆராச்­சி­லாகே அண்­டனீ, கஸ்­தூரி ஆராச்­சி­லாகே ஜோன் ரீட், ரஜீவ் நாக­நாதன், பிரதீப் விஸ்­வ­நாதன் , தில­கேஷ்­வரம் ராம­லிங்கம் உள்­ளிட்­ட­வர்­களின் உற­வி­னர்­க­ளிடம் ஒரு கோடி ரூபா­வுக்கும் மேல் கப்பம் கோரப்­பட்­டுள்­ளது.

இதில் கொட்­டாஞ்­சே­னையைச் சேர்ந்த ஜோன் ரீட் தொடர்பில் சம்அன் திஹார என்­ப­வ­ரி­ட­மி­ருந்து , தாரம்­மலை, கட­ஹ­பொல பிர­தே­சத்தில் வைத்து 5 இலட்சம் ரூபா கப்பம் பெறப்­பட்­டுள்­ள­மையும் மாணவர் கடத்தல் தொடர்பில் கோரப்­பட்ட ஒரு கோடி ரூபா கப்பம் தொகை­யை தெஹி­வ­ளையைச் சேர்ந்த அலி அன்வர் ஊடாக கொடுக்க நட­வ­டிக்கை எடுக்­கப்­பட்டு பின் அவ­ருக்கு காணாமல் போயுள்­ளமை குறித்து தற்­போதும் புல­னாய்வுப் பிரிவு தமது விசா­ரணை­களில் அவ­தானம் செலுத்­து­கின்­றது.

இந்­நி­லையில் இவ்­வாறு கடத்­தப்­பட்ட 11பேரும் லெப்­டினன் கொமாண்­டர்­க­ளான தற்­போது கைதி­யா­கி­யுள்ள சம்பத் முன­சிங்க மற்றும் ஹெட்டி ஆராச்சி ஆகி­யோரின் உத்­த­ர­வு­க­ளுக்கு அமைய வைத்­திய வீதியின் ‘பிட்டு பம்பு’ தடுப்பு அறை முகாமில் வைக்­கப்­பட்­ட­தாக சாதா­ரண கடற்­படை சிப்­பாய்­க­ளான அளுத்­கெ­தர உபுல்பண்டார, லக்ஷ்மன் உதய குமார, இம்­பு­லான லிய­னகே, உபுல் சமிந்த, கே.பி.என்.பி.விக்­ர­ம­சூ­ரிய ஆகியோர் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு வாக்கு மூல­ம­ளித்­துள்­ளனர்.

இந் நிலையில் இவ்­வாறு ‘பிட்டு பம்பு’ தடுப்­ப­றையில் இருந்­த­வர்கள் பின்னர் திரு­கோ­ண­மலை கடற்­படைத் தளத்தில் உள்ள சமுத்­தி­ர­வியல் விஞ்­ஞான பீட வளா­கத்தில் உள்ள ‘கன்சைட்’ என்ற இர­க­சிய தடுப்பு முகா­முக்கு மாற்­றப்­பட்­டுள்­ளனர்.

‘கன்சைட்’ தடுப்பு முகாம் திரு­கோ­ண­மலை கடற்­படை தளத்தில் நிலத்­துக்கு கீழ் அமைக்­கப்­பட்­டி­ருந்த இர­க­சிய தடுப்பு சிறை­யாகும்.

இந்த ‘கன்சைட்’ தடுப்பு முகா­மா­னது அப்­போது திரு­கோ­ண­மலை கடற்­ப­டைத்­த­ளத்தின் கட்­டளை தள­ப­தி­யான கஸ்­ஸப கோத்­த­பாய போலின் கட்­டு­ப்பாட்டு பிர­தே­சத்­துக்­குள்­ளேயே இருந்­துள்­ளது.

அத்­துடன் இந்த கன்சைட் இர­க­சிய சிறை லெப்­டினன் கொமாண்­ட­ரான ரண­சிங்­கவின் நேரடி கட்டுபாட்டிலிருந்துள்­ளது.

லெப்டின் கொமாண்டர் ரண­சிங்க கடற்­ப­டையின் புல­னாய்வு பிரிவில் மிக முக்­கி­யமானவ­ராக அப்­போது திருக்கோ­ண­மலை கடற்­படை தளத்தில் கருத்­தப்­பட்­டுள்ளார்.

இந் நிலையில் கடத்­தப்­பட்ட11 பேரும் 2009 ஏப்ரல் மாதம் ­முதல் ஜூன் மாதம் வரை இந்த கன்ஸைட் முகாமில் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­மைக்­கான சாட்­சி­யங்கள் குற்றப் புல­னாய்வுப் பிரி­வுக்கு கிடைத்­துள்­ளன.

இவ்­வா­றான பின்­ன­ணி­யிலே லெட்­டினன் கொமாண்­டர்­க­ளான முனசிக, எட்டி ஆராச்சி மற்றும் கன்சைட் தடுப்பு முகாமின் பொறுப்­பாளர் ரண­சிங்க ஆகியோர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

திரு­கோ­ண­மலை கடற்­படை தளத்தின் அப்­போ­தைய கட்­டளைத் தள­ப­தி­யான கொமாண்டர் கஸ்ஸப் கோத்­தபாய போல் உள்­ளிட்ட 22 காட்­சிகள் ஊடா­கவே 11பேரின் கடத்தல் மற்றும் “பிட்டு பம்பு” ‘கன்சைட்’ ஆகிய இர­க­சிய தடுப்பு முகாம்கள் தொடர்­பான தக­வல்­க­ளையும் புல­னாய்வுப் பிரி­வினர் வெளிப்­ப­டுத்திக் கொண்­டுள்­ளனர்.

குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரிவின் கூட்டுக் கொள்ளை தொடர்­பி­லான விசா­ரணைப் பிரிவின் பொறுப்­ப­தி­காரி, பொலிஸ் பரி­சோ­தகர் திஸாந்த டீ சில்வா, பொலிஸ் பரி­சோ­தகர் இலங்­க­சிங்க, பொலிஸ் சார்­ஜன்­க­ளான 17456 கரு­ணா­ரத்ன, 14209 மென்டிஸ், குற்­றப்­ப­திவுப் பிரிவின் சார்ஜன் 29458 உதேனி பண்­டார, பொலிஸ் காண்ஸ்­ட­பில்­க­ளான 35021 கன்னங்­கர, 40039 குமார, 37611 ராஜ­பக் ஷ ஆகியோர் அடங்­கிய குழுவே இந்த விசா­ர­ணை­களை முன்­னெ­டுக்­கின்­றது.

இந்­நி­லையில் கோட்டை நீதி­வா­னிடம் பெற்றுக் கொண்ட விஷேட சோதனை அனு­ம­திகள் ஊடாக பொலிஸ் பரி­சோ­தகர் நிஸாந்த டீ சில்வா தலை­மை­யி­லான குழு­வினர் கொழும்பு வைத்­திய வீதியில் தடுப்பு முகா­மாக பயன்­ப­டுத்­தப்­பட்­டுள்ள பிட்டு பம்பு மற்றும் திரு­கோ­ண­மலை கடற்­படை தளத்தில் உள்ள கன்சைட் நிலத்­தடி இர­க­சிய தடுப்பு முகா­மையும் சென்று சோதனை செய்­துள்­ளனர். அது தொடர்­பி­லான முழு­மை­யான அறிக்கை ஒன்று நீதி­மன்­றுக்கும் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது.

அதன்­படி குறித்த 11 பேரும் கடத்­தப்­பட்­டுள்­ள­தா­கவும் அவர்கள் திரு­கோ­ண­மலை கன்சைட் இர­க­சிய முகாமில் இறு­தி­யாக தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­துள்­ள­மைக்­கான ஆதா­ரங்கள் உள்­ள­தாகவும் குறிப்­பிடும் பொலிஸார் எந்தவொரு சந்­தர்ப்­பத்­திலும் அவர்கள் பொலிஸ் நிலையம் ஒன்­றுக்கோ நீதி­மன்றம் முன்­னி­லை­யிலோ ஆஜர்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­க­வில்லை என்­கின்­றனர்.

நிலத்துக்குகிழ் சித்திரவதை கூடம்

கடந்த ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முதல் 23ஆம் திக­தி­வரை செல்­லு­ப­டி­யாகும் வரையில் நீதி­மன்ற ஊடாக பெற்றுக் கொண்ட விஷேட சோதனை அனு­ம­தியை வைத்துக் கொண்டு 2015.04.21 முதல் 2015.04.28 வரை இந்த இர­க­சிய முகாம்கள் தொடர்­பி­லான விசா­ர­ணைகள் புல­னாய்வுப் பிரி­வி­னரால் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ள­துடன் தற்­போது கன்சைட் முகாம் சீல் வைக்­கப்­பட்­டுள்­ளது.

கடற்­ப­டையின் தலை­மை­களை இது தொடர்பில் புல­னாய்வுப் பிரி­வினர் தெளி­வு­ப­டுத்­திய பின்னர் திரு­கோ­ண­மலை கடற்­படை தளத்தின் புல­னாய்வு அதி­கா­ரி­யான லெப்­டினன் கொமாண்டர், ஏ.பீ.ஐ.கே கரு­ணா­ரத்­னவின் உத­வியும் இந்த சோத­னை­களின் போது பெற்றுக் கொள்­ளப்­பட்­டுள்­ளது.

பிர­தா­ன­மாக 22 சாட்­சி­யா­ளர்­களும் நேர­டி­யாக “பிட்டு பம்பு” மற்றும் கன்சைட் இர­க­சிய முகாம்கள் தொடர்பில் சாட்­சியம் அளித்­துள்ள நிலையில் சோத­னை­களின் போதும் அதன் பின்­னரும் சாட்­சி­யா­ளர்­களால் புல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு வழங்­கப்­பட்­டுள்ள வாக்கு மூலங்­களும் மன்­றுக்கு அறிக்­கை­யி­டப்­பட்­டுள்­ளன. அதன் சாராம்­சத்­தையும் நாம் இங்கு தரு­கிறோம்.

1. கொமாண்டர் கஸ்­ஸப கோத்த­பாய போல் மேலுள்ள பெயர் மற்றும் பத­வியைக் கொண்­டவர் இலங்கைக் கடற்­ப­டையின் தலை­மை­ய­கத்தில் தற்­போது விநி­யோகப் பிரிவு பணிப்­பா­ள­ரா­க­வுள்ளார். அப்­போது இ/கை கடற்­ப­டையின் இறங்­கு­து­றை­யான “ டொக் யார்ட்” நிறு­வ­னத்தின் கட்­டளை அதி­கா­ரி­யாக இவர் சேவை­யாற்­றி­யுள்ளார்.

அந்தக் காலப்­ப­கு­தியில் தனக்குக் கீழ் லெப்­டினன் கொமாண்டர் ரண­சிங்க எனும் அதி­காரி இருந்­த­தா­கவும் அந்த அதி­காரி விஷேட உளவுப் பிரிவை மேற்­பார்வை செய்­த­தா­கவும் குறிப்­பிட்­டுள்ளார்.

கடல் மற்றும் சமுத்­தி­ர­வியல் விஞ்­ஞான பீட வளா­கத்தில் “கன்ஸைட்” எனும் பெயரால் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும் இடத்தில் நிலத்­துக்கு கீழ் சிறைக்­கூ­டங்­களை நடத்திச் செல்­வ­தா­கவும் அந்தப் பிர­தே­சத்­திற்கு அனு­ம­தி­ய­ளிக்­கப்­பட்­ட­வர்­க­ளுக்கு மட்­டுமே செல்ல முடி­யு­மா­க­வி­ருந்­த­தா­கவும் கடற்­படை அல்­லாத நபர்கள் இருவர் அந்த இடத்தில் இருப்­பதை தான் அவ­தா­னித்­துள்­ள­தா­கவும் அவர்கள் 25 – 30 வய­து­க­ளுக்­கி­டைப்­பட்­ட­வர்கள் எனவும் குறிப்­பி­டு­வ­துடன் அந்த “கன்ஸைட்” நிலத்­தடி சிறைக் கூடம் அமைந்­துள்ள பிர­தே­சத்­தையும் அடை­யாளம் காட்­டு­கிறார்.

2. ரண­துங்க முதி­யன்­ச­லாகே புன்­சி­பண்டா ரண­துங்க

இந்த சாட்­சி­யாளர் 1998.01.21 அன்று இலங்கை கடற்­ப­டையில் சேர்ந்­த­துடன் 2006.07.30 அன்று கடற்­ப­டையின் உளவுப் பிரிவில் சேர்க்­கப்­பட்­டுள்ளார்.

2008.08.30 அன்­றி­லி­ருந்து 2009 ஆம் ஆண்டின் நடுப்­ப­குதி வரை இலங்கை கடற்­ப­டையின் இறங்­கு­துறை நிறு­வ­னத்தின் கிழக்கு உளவுப் பிரிவின் கீழ் சேவை ஆற்­றி­யுள்ளார்.

இவர் குற்­றப்­பு­ல­னாய்வுப் பிரி­வி­ன­ருக்கு வழங்­கி­யுள்ள வாக்கு மூலத்­திற்­க­மைய முகாமில் “கன்ஸைட்” எனும் பெயரில் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­படும் இடத்தில் நிலத்­தடி சிறைக் கூடங்கள் இருந்த பிர­தே­சத்தை அடை­யாளம் காட்­டி­னார் “­கன்ஸைட்” என்ற இடத்­திற்கு உள்­நு­ழையும் பிர­தே­சத்தில் 14 அடி வரையில் நீண்ட தக­ரத்­தி­லான கதவு ஒன்று இருந்த இடத்­தையும் அவர் காட்­டினார் எனினும் அதனை தற்­போது காண முடி­ய­வில்லை.

அதற்கு வலது புறத்தில் அமைக்­கப்­பட்­டி­ருந்த இரு அறை­க­ளையும் அவர் காட்­டினார். அதற்கு இரும்புக் கம்­பி­களைக் கொண்டு கத­வுகள் போடப்­பட்­டி­ருந்­தன.

அந்த அறைகள் கடற்­படை வீரர்­களால் “டெங்­ஜன” என அடை­யா­ளப்­ப­டுத்­தப்­ப­டு­வ­தா­கவும் அதில் ஒரு அறையில் இருவர் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த­தா­கவும் குறிப்­பிட்டார்.

அதற்கு முன்னால் குளி­ய­ல­றை­யையும் மல­சல கூடத்­தையும் சுட்டிக் காட்­டிய நிலையில் அவை தடுப்புக் கைதி­களின் குளியல் மல­சல கூட தேவை­க­ளுக்­காகப் பயன்­ப­டுத்­தப்­பட்­ட­தாகக் குறிப்­பிட்டார்.

அதற்கு முன்னாள் இருந்த ஆல­ம­ரத்தின் கீழ் கைதி­களின் பாது­காப்­பிற்­காக இருந்த கடற்­படை சிப்­பாய்­க­ளுக்கு தங்­கி­யி­ருக்க பச்­சை­நிற கூடா­ர­மொன்று அமைக்­கப்­பட்­டி­ருந்­த­தாகக் குறிப்­பிட்டு அந்த இடத்­தையும் சுட்டிக் காட்டினார்.

நுழை­வா­யி­லி­லி­ருந்து அந்த ஆல­மரம் வரையில் வெளியே தெரி­யா­த­வாறு தக­ரத்தால் மறைக்­கப்­பட்­டி­ருந்­த­தாகக் குறிப்­பிட்டு அப்­பி­ர­தே­சத்­தையும் சுட்­டிக்­காட்டி நின்றார்.

எனினும் அந்த வேலியை தற்­போது காண­மு­டி­ய­வில்லை. அவ்­வாறு மறைக்கப் பட்­டி­ருந்த பிர­தே­சத்தில் ஆல­ம­ரத்­திற்கு கீழ் அமைக்­கப்­பட்­டி­ருந்த படி­களைக் கொண்ட நிலத்­தடி சிறைக் கூடங்கள் இரண்­டையும் அவர் அடை­யாளம் காட்­டினார்.

அதில் வலது பக்­க­முள்ள அறையில் ரஜீவ் நாக­நாதன், ஜோன் ரீட், அலி அன்வர் ஆகிய மூவர் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்­த­தா­கவும் குறிப்­பிட்­டி­ருந்தார்.

3. விமலரத்ன சிறி செனவிரத்ன

இந்த சாட்சியாளர் குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு வழங்கிய வாக்கு மூலத்தின் பிரகாரம் 2008.03.27 அன்றிலிருந்து 2009.04.25 அன்று வரையில் இலங்கை கடற்படையின் இறங்குதுறையில் கிழக்கு உளவுப் பிரிவுக்குட்பட்டு சேவை செய்த காலப்பகுதியில் “கன்ஸைட்” நிலத்தடி சிறைக்கூடம் அமைந்திருந்த பிரதேசம் அப்போது தகரத்தினால் மறைக்கப்பட்டி ருந்த இடத்தை அடையாளம் காட்டி னார்.

அதனுள் அமைந்திருந்த நிலத்தடி சிறைக் கூடத்தைக் காட்டினார். தான் ஒரு நாள் லெப்டினன் கொமாண்டர் சி.கே.வெலகெதரவுடன் அந்த இடத்துக்குச் சென்ற போது 25 – 30 வயதுக்கிடைப்பட்ட 2 சிவிலியன்கள் அந்த இடத்தில் இருந்ததாகவும் அதில் ஒருவரின் தலையில் காயமொன்று இருந்ததாகவும் அந்த இடத்தையும் குறிப்பிட்டு காட்டினார்.

4. ஜெய்னுலாப்தீன் ஸரீப்தீன் பிரதான நிருவாக சிற்றூழியர்

இந்த சாட்சியாளர் 2005 ஆம் ஆண்டிலிருந்து 2012 ஜனவரி மாதம் வரை இலங்கை கடற்படை இறங்குதுறை அல்லது டொக் யார்ட் நிறுவனத்தின் கிழக்கு உளவுப் பிரிவுக்குட்பட்டு சேவையாற்றியுள்ளார் இவர் “கன்ஸைட்” என அடையாளப்படுத்தப்படும் இடத்தை அடையாளம் காட்டினார். தான் அந்த இடத்தின் நுழைவாயிலில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த ஆயுதத்துடன் கூடிய

கடற்படையினரை சோதனை செய்ய 4 மணி நேரத்துக்கு ஒருமுறை அவ்விடத்துக்கு வந்ததாகக் குறிப்பிட்டு கடற்படைவீரர்கள் கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்த இடத்தையும் அடையாளம் காட்டினார்.

(தொடரும்)

– எம்.எப்.எம்.பஸீர்

Share.
Leave A Reply

Exit mobile version