கண்டி கட்டுகஸ்தோட்டை பாலத்தில் இருந்து குதித்து இளைஞன் உயிரிழந்துள்ளதாக அங்கிருக்கும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.
இன்று நண்பகல் வேளையில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன் சுழியோடிகள் சுமார் ஒரு மணிநேரமாக சடலத்தை தேடி சற்றுமுன் கரைக்கு கொண்டு வந்துள்ளனர்.
34 வயதுடைய பெரும்பான்மை இனத்தை சேர்ந்த இந்த இளைஞன் தற்கொலை செய்ததற்கான காரணம் இதுவரை தெரிவிக்கபடாத நிலையில் இவர் முன்னாள் தேரர் என்று அறியப்பட்டுள்ளதுடன் கட்டுகஸ்தோட்டை போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.