மெக்சிகோவில் போதைப்பொருள் கடத்தல் மன்னன் 50 மில்லியன் டாலர் செலவு செய்து 1 கி.மீ. சுரங்கம் தோண்டி சிறையிலிருந்து தப்பித்துள்ளான். அதன் போது எடுக்கப்பட்ட காட்சி CCTV வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.
மெக்சிக்கோவில் போதைப்பொருட்கள் கடத்தலின் கடவுள் என்று அழைக்கப்படும் எல்.சப்போ அதி நவீன பாதுகாப்பு வசதி கொண்ட சிறையிலிருந்து, சுமார் 50 மில்லியன் அமெரிக்க டாலர் செலவு செய்து தப்பிச் சென்றுள்ளார்.
இவனைத் தப்ப வைப்பதற்காக அவரது நண்பர்கள் உலகில் உள்ள மிகவும் புத்திசாலி எஞ்சினியர்கள், நிலத்தை அகழ்பவர்கள், கட்டடம் கட்டுபவர்கள் என்று பல தொழில்நுட்ப வல்லுனர்களைக் கொண்டு கடினமான திட்டம் ஒன்றை தீட்டியுள்ளனர்.
முதலில் சிறைச்சாலையான அல்டிபிளானோவுக்கு 1 மைல் தொலைவில் உள்ள ஒரு நிலத்தை வாங்கிய அவரது சகாக்கள், அங்கே ஒரு கட்டடம் கட்டுவதாக திட்டத்தைப் போட்டார்கள். அதற்கு அரசாங்கத்திடம் இருந்து முறையாக அனுமதி வாங்கப்பட்டது.
அங்கே இருந்து தான் எவரும் சந்தேகப்படாத வகையில் அவர்கள், ஒரு சுரங்கப் பாதையை பூமிக்கு அடியால் தோண்ட ஆரம்பித்துள்ளார்கள். சுமார் 3,250 டன் எடையுள்ள மண்ணை அவர்கள் அகழ்ந்து வெளியே எடுத்துக் கொட்டியுள்ளனர்.
நிலத்திற்கு அடியில் இவர்கள் சுரங்கத்தை தோண்டி, சிறைச்சாலையில் உள்ள குளிக்கும் அறையின் அடியில் கொண்டுபோய் அதனை முடித்துள்ளார்கள். குளிக்கும் அறையில் கீழ் சுமார் 23 அடி ஆளத்தில் அந்த சுரங்கம் இருந்துள்ளது.
அதாவது, தாம் வாங்கிய நிலப்பரப்பில் இருந்து, சிறைச்சாலை வரை சுரங்கத்தை அவர்கள் கிண்டி இருந்தாலும், சிறைச்சாலைக்கு உள்ளே தோண்ட ஆரம்பிக்கும் வேளையில், நிலத்திற்கு அடியில் நிச்சயம் சத்தம் கேட்டு, காவலாளிகளில் உஷார் ஆகிவிடாமல் இருக்க, மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் மெதுவாக ஓசை படாமல் தோண்ட ஆரம்பித்துள்ளார்கள்.
இதற்கு ஒரு சில சிறை காவலாளிகளும் உடந்தையாக இருந்துள்ளார்கள். ஆனால், சிறைக்காவலர்களுக்கு போதை மன்னன் தப்பிப்பதற்காகத்தான் இந்த சுரங்கம் என்று அவர்களுக்குத் தெரியாது.
மேலும், சுரங்கப் பாதையில் ஒரு மோட்டார் சைக்கிள் ஒன்றை இறக்கி, அதன் பின்னால் ஒரு சக்கர வண்டியைக் கட்டி, அதில் தோண்டிய மண்ணை கட்டி இழுத்து வந்து வெளியே கொட்டியுள்ளார்கள்.
இதுதவிர, இந்த 1 மைல் நீளமான சுரங்கப் பாதையில், ஆக்சிசன் குழாய்கள் சிறைச்சாலையில் உள்ள குளியல் அறை வரையில் இணைத்துள்ளனர். கடந்த சனிக்கிழமை இவர் குறித்த குளியலறையினூடாக, உள்ளே இருந்த சுரங்கப் பாதையில் இறங்கிச் சென்றுள்ளார்.
பின்னர், அங்கே தயார் நிலையில் இருந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு வேகமாகச் சென்று அந்த கட்டடம் கட்டும் இடத்திற்குச் சென்று தப்பித்துள்ளார். குறித்த பகுதியை சல்லடை போட்டு தேடிவரும் மெக்சிக்கோ அதிரடிப்படையினர், இச்செயலை பார்த்து வியந்து போய்விட்டார்கள்.
உலகநாடுகளுக்கு போதைப் பொருட்களின் கடத்தல் மன்னனாக திகழும் எல்.சப்போவை இனிமேல் கண்டுபிடிப்பது சிரமம் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அவர் சிறையில் இருந்த போதும் அவரது நெட்வொர்க் செயல்பட்டுகொண்டுதான் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
வீடியோ கீழே: