தென் ஆபிரிக்காவில் அலைச் சறுக்குப் போட்டியின் போது, அலைச்சறுக்கு வீரர் ஒருவர் சுறாவிடம் சிக்கி காயமின்றி உயிர்தப்பிய சம்பவம் பார்வையாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

ஈசன்டெக் மாகாணத்தில் ஜெப்ளே கடற்பகுதியில் அலைச்சறுக்கு போட்டி நடைபெற்றது. இதில் 34 வயதான மிக் பாணிங் என்பவர் சாகசங்களை நிகழ்த்திக் கொண்டிருந்தார்.

அப்போது அவருக்கு பின்பக்கமாக வந்த சுறாமீன் ஒன்று அலைச்சறுக்கு பலகையின் மீது மோதியது.

இதில் நிலைதடுமாறி கடலில் விழுந்த பாணிங் சுறா தாக்க வருதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் சுதாரித்துக் கொண்ட அவர் தன் அருகில் நெருங்கி வரும் சுறாவை தன் முழு பலத்தையும் செலுத்தி உதைத்து தள்ளிவிட்டு வேகமாக நீந்தத் தொடங்கினார்.

இந்த சம்பவத்தைப் பார்த்து கடலுக்குள் விரைந்த பாதுகாப்புப் படையினர் வீரர்கள் உயிரை கையில் பிடித்தபடி கடலில் நீந்திக்கொண்டிருந்த பாணிங்கை மீட்டனர்.

இந்த சம்பவம் காரணமாக இறுதிப்போட்டி ஒத்திவைக்கப்பட்டது. விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்த போட்டியில், வீரர் ஒருவர் சுறாவிடம் சிக்கிக் கொண்டது பார்வையாளர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

Share.
Leave A Reply

Exit mobile version