உக்ரையின் எல்லையில் கடந்த ஆண்டு சுட்டு வீழ்த்தப்பட்ட மலேசிய விமானம் கீழே விழுந்ததை அந்த வழியாக காரில் சென்ற தம்பதியினர் கைப்பேசியில் வீடியோ எடுத்துள்ளனர்.

கடந்த ஆண்டு யூலை மாதம் 17ம் திகதி நெதர்லாந்து தலைநகர் ஆம்ஸ்டர்டாமில் இருந்து மலேசியாவுக்கு மலேசியன் ஏர்லைன்சுக்கு சொந்தமான எம்.ஹெச் 17 ரக விமானம் சென்று கொண்டிருந்தது.

இந்நிலையில் உக்ரைன் அருகே இந்த விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. இதில் விமானத்தில் பயணம் செய்த 298 பேரும் மரணமடைந்தனர்.

இந்த விபத்துக்கு ரஷ்யா தான் காரணம் என்று உக்ரையின் குற்றம்சாட்டியது.

இந்த புகாரை ரஷ்யா மறுத்து வந்தது. இந்நிலையில் வீழ்த்தப்பட்ட விமானத்தில் பயணத்தவர்களின் உடமைகள் மற்றும் கருப்புபெட்டியை ரஷ்ய ஆதரவு படையினர் தேடிய காட்சி வெளியிடப்பட்டுள்ளது.

deadbodeis_malysiaflight_003

அவுஸ்திரேலியாவை சேர்ந்த இணையதளம் ஒன்று வெளியிட்டுள்ள அந்த வீடியோவில் மலேசிய விமானத்தை போர் விமானம் என கருதி தவறுதலாக சுட்டு வீழ்த்தியதாகவும், பின்னர் இறந்தவர்களின் உடலை பார்த்தது இது பயணிகள் விமானம் என்று கூறுவதும் அதில் பதிவாகியுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும் விமானத்தின் கருப்பு பெட்டியை கண்டுபிடிக்கும் வரை பொது மக்களை இந்த பகுதியில் அனுமதிக்கக்கூடாது என ஆதரவு படையின் தலைவர் கட்டளையிடுவதும் பதிவாகியுள்ளது.

ஒரு ஆண்டு கழித்து தற்போது வெளியான இந்த வீடியோவால் ஏற்பட்ட பரபரப்பு அடங்குவதற்குள், விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டபோது அந்த வழியாக சென்ற தம்பதியினர் எடுத்த வீடியோவை ஜேர்மனியை சேர்ந்த பத்திரிகையாளர் ஒருவர் வெளியிட்டுள்ளார்.

கை, கால்கள் என்று மனித பாகங்களும், பயணிகளின் கருகிய உடல்களும் விமானத்தில் இருந்து பறந்து வந்து தரையில் விழுந்த காட்சியை பார்த்து வீடியோ எடுத்த பெண்மணி அழுகிறார்.

மேலும், விமானம் விழுந்த இடத்தில் கரும்புகை கிளம்புவதை அந்த வீடியோவில் பார்க்க முடிகிறது.

Share.
Leave A Reply

Exit mobile version