யாழ் .குடாநாட்டில் சோதனைக் குழாய் பரிசோதனை மூலம் முதற் குழந்தையை உருவாக்கி திருநெல்வேலி நொதேர்ன் சென்றல் வைத்தியாசாலை மருத்துவத் துறையில் புதிய சாதனை படைத்துள்ளது.
சோதனைக் குழாய் மூலம் உருவான முதற் குழந்தை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை மேற்படி வைத்தியசாலையில் பிறந்துள்ளது.
குழந்தைப் பேறில்லாதவர்கள் விஞ்ஞான யுகத்தில் சோதனைக் குழாய்ப் பரிசோதனை மூலம் குழந்தை பெறுவது சாத்தியம் என்ற போதிலும் வடக்கில் வசிப்பவர்கள் இந்தியாவுக்கோ அல்லது கொழும்புக்கோ செல்ல வேண்டிய தேவையிருந்தது .
இதனால் பெரும் பணச் செலவும் பயணச் செலவும் அவர்களுக்கு ஏற்பட்டன .
இதனைக் கருத்திற் கொண்டு வடக்கில் முதன்முறையாக மக்கள் நன்மை பெறும் வகையில் நொதேர்ன் சென்றல் வைத்தியசாலை சோதனைக் குழாய் மூலம் குழந்தைப் பேறு சிகிச்சை முறையை அறிமுகப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.