முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிரான குற்றச் சாட்டுக்கள் நிரூபிக்கப்பட்டால் பாராளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோவது மட்டுமல்லாது, புலிகளுக்கு பணம் கொடுத்த விசாரணையின் முடிவில் அவரது குடியுரிமையும் பறிபோகும் என்றும் ஜே.வி.பி தலைவர் அநுரதிஸாநாயக தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னோக்கிச் செல்ல வேண்டுமானால் மஹிந்தவிடமிருந்து கட்சியை மீட்டெடுக்க வேண்டுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
கிரிபத்கொடை நகரில் இடம்பெற்ற ஜே.வி.பி.யின் பிரசாரக் கூட்டத்தில் உரையாற்றும் போதே அதன் தலைவர் அநுர திஸாநாயக இவ்வாறு தெரிவித்துள்ளார்.
2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் வாக்களிப்பதை வடக்கில் தடுப்பதற்காக புலிகளுக்கு பணம் வழங்கப்பட்டது. ஆனால் இணக்கம் காணப்பட்ட முழுத் தொகையையும் (7000 இலட்சம் ரூபா )அப்போது வழங்க முடியவில்லை.
எனவே தேர்தலில் வெற்றி பெற்ற பின்பே வடக்கில் வீடுகளை நிர்மாணிக்கும் போர்வையில் புலிகளுக்கு 6000 இலட்சம் ரூபா வழங்கப்பட்டது.
இவ் வீடுகளை அமைக்கும் பொறுப்பும் புலிகளின் நிறுவனமொன்றுக்கே வழங்கப்பட்டது.
இவ்விடயம் தொடர்பாக தற்போது விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.
இந்த விசாரணைகளின் முடிவில் என்ன நடக்கும் என நான் ஜனாதிபதியிடம் வினவினேன்.
அப்போது சிறைசெல்ல வேண்டிவரும் அதுமட்டுமல்லாது. குடியுரிமை பறிபோகும் நிலைமைகளும் ஏற்படலாம் என ஜனாதிபதி தெரிவித்தார்.
இதனைத் தடுப்பதற்காகவே மீண்டும் அரசியலுக்குள் வந்துள்ளார்.
ஜனாதிபதியாக தோல்வியடைந்துஇ இன்று பிரதமராக முயற்சிக்கின்றார். இதனை ஜனாதிபதி ஒரு போதும் வழங்க மாட்டார்.
எனவே தேர்தலின் பின்னர்இ இவர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவானாலும் அவரால் அப் பொறுப்பைத் தொடர்ந்தும் வகிக்க முடியாமல் போகும்.
அவர் மீதான குற்றச்சாட்டுக்கள் விசாரிக்கப்பட்டு நிரூபணமானால் பதவி பறிபோகும். அவரது குடும்பத்தார் தொடர்பிலும் பல விசாரணைகள் முன்னெடுக்கப்படும்.
அதேவேளை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேம் ஜயந்தவுக்கு எதிராகவும் விசாரணைகள் நடத்தப்பட்டு இவற்றைத் தடுப்பதற்காகவே அரசியலுக்கு வந்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முன்னோக்கிப் பயணம் மேற்கொள்ளப்பட வேண்டுமானால் மஹிந்தவிடமிருந்து கட்சியை மீட்டெடுக்க வேண்டும்.
ஜனாதிபதி பதவி பறிபோனாலும் இன்று பிரதமர் பதவிக்கு முண்டியடிக்கின்றார்.
சுதந்திரக் கட்சியை பாதுகாப்பதற்காக ஜனாதிபதி மைத்திரி நெருக்கடிகளுக்கு மத்தியில் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றார்.
ஐ.தே.கட்சியிலும் இன்று ஒரு கொள்கை இல்லை ஆட்சிக்காக பலர் இணைந்துள்ளனர்.
எனவே நாட்டையும் மக்களையும் கட்டியெழுப்பக் கூடிய ஒரே சக்தி ஜே.வி.பி.யாகும். என்றும் அநுர திஸாநாயக தெரிவித்துள்ளார்.
………………………………………………………………………………………………..
புலிகளால்.. “தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்காக கோடிக்கணகான பணம் (டொலர்கள், பிறாங், பவுண்ஸ்…) வெளிநாடுகளில் உள்ளவர்களிடம் பல்வேறு வழிகளில் வசூலிக்கப்பட்டது.
அதுவும்.., பெரும்பாலானவர்களிடம் அடாவடிதனத்தின் மூலமே பணம் பெறப்பட்டது.
காசுக்காக இப்படி எத்தனையோ கொலைகளை புலிகள் செய்தார்கள்.
அனால் பாருங்கோ… “மோட்டுச் சிங்களவன்“ வெறும் 7000 இலச்சம் ருபாய் பணத்தை கொடுத்தும், கொடுக்காமலும் வன்னியை புலிகளிடமிருந்து மீட்டுவிட்டான்.
வெறும் 7000 இலச்சத்துக்காக சோரம் போய் “30வருடங்களாக போராளிகளால் உயிரை தியாகம் செய்து போராடி கட்டிக்காத்த வன்னியையும் அழித்து, போராளிகளையும் அழித்து, தமிழ் பெண்களின் மானத்தையும் பறிகொடுத்து, முழு தமிழீழ பிரதேசத்தையும் இழப்பதற்கு காரணமானவர்கள் தமிழினத்தின் துரோகிகளுமில்லை, எதிரிகளுமில்லை.
இன்றும் தமிழீழ தேசியவாதிகளாக……