உத்தரபிரதேசம் : நில பிரச்சினையால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ரியல் எஸ்டேட் அதிபரின் மனைவி டிராக்டரை ஏற்றி பெண்களை கொல்ல முயன்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம் பிஜ்னோர் பகுதியில் கிறிஸ்தவ அமைப்பு ஒன்றுக்கு சொந்தமான நிலத்தை அப்பகுதியில் உள்ள பிரபல ரியல் எஸ்டேட் அதிபர் ஆக்கிரமித்து வைத்திருந்ததாகக் கூறப்படுகிறது.

நிலத்தை மீட்க அந்த கிறிஸ்தவ அமைப்பைச் சேர்ந்த பெண்கள் அங்கு சென்றபோது ஆத்திரமடைந்த ரியல் எஸ்டேட் அதிபரின் மனைவி இடுப்பில் துப்பாக்கியை சொருகியபடி டிராக்டரை ஏற்றி அந்த பெண்களை கொல்ல முயன்றார்.

அப்போது ஒரு பெண் ட்ராக்டர் அடியில் சிக்கிக்கொண்டார்.

அதிர்ஷ்டவசமாக ட்ராக்ட்ரின் பின் சக்கரம் அந்த பெண் மீது ஏறவில்லை. சினிமாவில் நிகழ்வது போன்ற இந்த சம்பவம் பல மணி நேரம் அப்பகுதியில் தொடர்ந்தும் போலீசார் யாரும் அங்கு வரவில்லை.

இத்தனைக்கும் இந்த கொடூர தாக்குதல் நிகழ்ந்த இடத்திற்கு எதிரே மாவட்ட ஆட்சியரின் வீடு அமைந்துள்ளது. தகராறு ஏற்பட்டு நீண்ட நேரம் ஆன பிறகே போலீசார் அங்கு வந்தனர்.

அவர்கள் பெண் ரவுடி போல் நடந்து கொண்ட ரியல் எஸ்டேட் அதிபரின் மனைவியை வி.ஐ.பி. மரியாதையுடன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். இந்த காட்சி அப்பகுதி மக்களை அதிர்ச்சியடையச் செய்தது.

Share.
Leave A Reply

Exit mobile version