எதிர்பாராத திருப்பம்
ஒழுங்கை வழியாக திரும்பிவிட்டால் இராணுவத்தினரால் துரத்திச் செல்ல முடியாது என்று தொிந்து கொண்டுதான் கிட்டு மோட்டார் சைக்கிளை திருப்பினார்.
எதிர்பாராத்தது போலவே இராணுவத்தினரால் உடனடியாகத் துரத்திச் சுட முடியவில்லை.
அப்போதுதான் அந்த எதிர்பாராத சம்பவம் நிகழ்ந்தது.
ஒழுங்கை வேலியில் கட்டப்பட்டிருந்த மாடு ஒன்று தெருவைக் கடந்து எதிர்ப் பக்கமாக மேய்ந்து கொண்டிருந்தது.
வேகமாக வந்த மோட்டார் சைக்கிள் கயிற்றில் சிக்கி வீதியில் புரண்டது.
விரைந்து வந்தகொண்டிருந்த இராணுவத்தினரின் துப்பாக்கிகள் முழங்கத் தொடங்கின.
கிட்டு எழுந்து அருகில் இருந்த வாழைத்தோட்டத்துக்குள் பாய்ந்து விட்டார் .
ரஞ்சன் லாலாவை துப்பாக்கிக்குண்டுகள் துளைத்துவிட்டன. கிட்டுவைத் துரத்திய இராணுவத்தினர் பொழிந்த துப்பாக்கிக் குண்டுகள் வாழைகளை முறித்து வீழ்த்தின.
கிட்டு தப்பிச் சென்று விட்டார். ரஞ்சன் லாலா மரணமானார்.
இச் சம்பவம் நடைபெற்ற திகதி 13.07.1987ல் புலிகளுக்கு ஏற்பட்ட மிகப் பாரிய இழப்பு அது.
ரஞசன் லாலா என்பது இயக்கப் பெயர். க.ஞானேந்திரமோகன் என்பதுதான் சொந்தப் பெயர், பருத்தித்துறைதான் செபந்த ஊர், வயது, 23.
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற புலிகளது கொில்லாத் தாக்குதல்கள் அனைத்திலும் பலியாகும்வரை பங்குகொண்டவர் ரஞ்சன் லாலா என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் சம்தவம் பற்றி ஒரு விடையத்தைக் குறிப்பிட வேண்டும். இராணுவத்தினரால் வழிமறிக்கப்பட்டு சோதனையிடப்பட்டபோது கிட்டுவிடம் சயனைட் குப்பி இருந்தது.
அதனை தொய்யு மருந்து என்று கூறி இராணுவத்தினரை கிட்டு ஏமாற’றி விட்டார். கிட்டு நினைத்திருந்தால் ‘சயனைட்’ அடித்திருக்கலாம் ஆனால் அவர் அப்படிச் செய்யவில்லை.
இதேபோல மற்றொரு சம்பவம் யாழ்ப்பாணம் சென்ஜோன்ஸ் கல்லுரிக்கு அருகே நடந்தது.
அப்போது குருநகரில் இருந்த இராணுவத்தினர் அடிக்அடி வீதிச் சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுவதுண்டு.
புலிகள் அமைப்பைச் சேர்ந்த வாசன், சின்னக் கண்ணாடி, அல்லது அலெக்ஸ் ஆகிய இருவரும் கொய்யாத் தோட்டம் வீதி வழியாக வந்து கொண்டிருந்தனர்.
இராணுவத்தினரின் சந்தேகப் பார்வை அவர்கள் மீது விழுந்தது. இருவரையும் அழைத்து வீதியில் வைத்து விசாரிக்க இராணுவத்தினர் முற்பட்டபோது வாசன் சயனைட் அடித்துவிட்டார். அவரைப் பார்த்து அலெக்சும் சயனைட் அடித்தார்.
இருவரும் அந்த இடத்திலேயே பலியானார்கள். 18.7.84 அன்று இந்தச் சம்பவம் நடந்தது.
வாசனின் சொந்தப் பெயர்: ஐயம்பிள்ளை மணிவாசகம். வயது 23, சொந்த ஊர்: நெடுந்தீவு. சின்னக் கண்ணாடி அல்லது அரெக்ஸின் சொந்தப் பெயர்: வேதரத்தினம் மொரிஸ். சொந்த இடம்: கொய்யாதடதோட்டம், யாழ்பாணம்.
வெளிநாடடுப் பிரசாரம்
1984 இல் வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்கள் பலர் ‘ஈழவிடுதலை’ அவசியம் என்பதை வலியுறுத்திப் பிரசாரங்களை மேற்கொண்டு வந்தனர்.
வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தமிழர்களால் நடத்தப்படும் பிரசாரங்கள் இலங்கையில் உள்ள போராளி அமைப்புக்கால் பிரபலப்படுத்தப்பட்டும் வந்தன.
உலக ஆதரவைத் திரட்டும் முயற்சிகளும் நடக்கின்றன என்ற செய்தியைத் தொிவிப்பதே அதன் நோக்கம்.
84 இல் அமொிக்காவில் உள்ள நியூயோர்க்கில் உலகத் தமிழீழ மாநாடு ஒன்றை நடத்துவதற்கு திட்டமிடப்பட்டது.
இதன் பின்னணியில் இருந்நவர் டாக்டர் பஞ்சாட்சரம்.
டாக்டர் பஞ்சாட்சரம் தொடர்பாக தமிழ் அமைப்புக்களுக்கு ஒரு சந்தேகம் இருந்தது.
அமொிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. யின் ஆளாக அவர் இருக்கக்கூடும் என்பதுதான் சந்தேகம்.
இதனால் பஞ்சாட்சரம் கூட்டும் மாநாட்டில் கலந்து கொள்ள தமிழ் அமைப்புக்கள் மறுத்துவிட்டன.
புலிகள் அமைப்பை எப்படியாவது மாநாட்டில் கலந்துகொள்ள வைக்க பலத்த முயற்சி நடந்தது வந்தது.
இதற்கிடையே டாக்டர் பஞ்சாட்சரம் தமது நியூயோர்க் மாநாடு ஏன் கூட்டப்படுகிறது என்பதை விளக்கியிருந்தார்.
விடுதலை இயக்கங்களை ஒன்றிணைத்து ஒரு தேசிய அரசியல் இராணுவத் தலைமையை உருவாக்குவது தமது நோக்கங்களில் ஒன்று என அவர் தொிவித்தார். இது மேலும் சந்தேகத்தை ஏற்படுத்தியது.
அமொிக்காவின் கரங்களுக்குள் போராளி அமைப்புக்களை கொண்டுசெல்ல பஞ்சாட்சரம் திட்டம் போடுவதாகக் கருதப்பட்டது.
சென்னையில் தங்கியிருந்த தமிழ் இயக்கத் தலைவர்கள் நியூயோர்க் மாநாட்டில் கலந்து கொள்ள தமது பிரதிநிதிகளை அனுப்ப மறுத்து விட்டனர்.
டாக்டர் பஞ்சாட்சரத்துக்கும் புலிகளுக்குமிடையே தொடர்பு இருப்பதாகவும் ஒரு சந்தேகம் கிளப்பப்பட்டது. இதனையடுத்து புலிகளின் தலைவர் பிரபாகரனால் டாக்டர் பஞ்சாட்சரத்துக்கு ஒரு கடிதம் அனுப்பப்பட்து.
கடிதத்தின் ஒரு பகுதி இது:
“விடுதலை இயக்கங்களை ஒன்றிணைத்து ஒரு தேசிய அரசியல் இராணுவத் தலைமையை உருவாக்குவது மாநாட்டின் நோக்கங்களில் ஒன்று என்பதாகத் தொிகிறது.
இவ்வித ஒற்றுமை முயற்சிகள் நான் வரவேற்கிறேன். எனினும் இந்த முயற்சிகள் தமிழீழத்தில் மேற்கொள்ளப்படுவதையே நான் விரும்புகிறேன்.
அந்நிய நாடு ஒன்றில் அதுவும் அமொிக்க ஏகாதிபத்தியத்தின் தலைநகரில் சி.ஐ.ஏ உளவு ஸ்தாபனத்தின் சிலந்தி வலைக்குள் இருந்து எமது போர் முறைத்திட்டங்கள் பற்றிப் பேசுவதற்கு நாம் தயாராக இல்லை.
விடுதலை இயக்கங்கள் மத்தியில் ‘சோசலிசத் தமிழீழம்” என்ற இலட்சியத்தில் ஒருமைப்பாடு உண்டு என்பது நீங்கள் அறிந்ததல்ல.
எனினும் இந்த இலட்சியத்தை அடைவதற்கான போருபாயங்கள், போர் முறைத் திட்டங்கள் போன்றவற்றில் கருத்து வேறு பாடுகள் இருக்கின்றன.
இத மிகவும் சிக்கலான விவகாரம். போர் நுட்பமும், போர் அனுபவமும் சார்ந்த விசயம் இயக்கத் தலைமைகள் மிகவும் இரகசியமாக பரஸ்பர நம்பிக்கையுடன் பரிமாறிக் கொள்ள வேண்டியது.
இவற்றை எல்லாம் சர்வதேச மாநாடுகளில் அதுவும் அமொிக்காவின் திறந்த அரங்குகளில் விவாதிக்க முடியாது.
தமிழீழ விடுதலைப் போராட்டம் வெற்றி பெறுவதாயின் மிகவும் கட்டுப்பாடுடைய தேசிய இராணுவ அமைப்பொன்றை முதலில் கட்டி எழுப்ப வேண்டும் இதனையே நாம் இன்று செயற்படுத்தி வருகிறோம்.
ஏனைய விடுதலை அணிகளும் எம்மோடு இணைந்து செயற்படும் காலம் வெகுதூரத்தில் இல்லை. போராட்ட சூழ் நிலைகள் இந்த ஒற்றுமையைப் பிறப்பிக்கும்”
என்று தொிவித்திருந்தார் பிரபாகரன். இக் கடிதம் 19.05.84 என்று தேதியிடப்பட்டு டாக்டர் பஞசாட்சரத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உறவுகளின் போட்டி
வெளிநாடுகளில் இருந்த விடுதலை அமைப்புக்களோடும் தமிழ் இயக்கங்களின் வெளிநாட்டுக்கிளைகள் தொடர்புகளை பேணி வந்தன.
இதில் ஈரோஸ், ஈ.பி.ஆர்.எல்.எஃப் இரண்டும் முன்னணியில் இருந்தன.
1984ன் இறுதியில் சென்னையிலிருந்த சோவியற் யூனியன் தூர்வராலயத்தோடு தொடர்புகளை ஏற்படுத்த ஈ.பி.ஆர்.எல்.எஃப் முற்பட்டது.
1980களில் வெளிநாட்டு விடுதலை இயக்கங்கள் புலிகள் அமைப்பை விட ஈ.பி.ஆர்.எல்.எஃப், ஈரோஸ், புளோட் அமைப்புகளுடன் தான் பரிச்சயமாக இருந்தன.
வெளிநாட்டு விடுதலை இயக்கங்களிடம் தம்மை முற்போக்கு அமைப்புக்களாகக் காட்டிக் கொள்வதில் ஈ.பி.ஆர்.எல்.எஃப், புளோட் அமைப்புக்களிடையே கடும் போட்டி நிலவியது.
1984 ல் இலங்கை அரசுக்கு அமொிக்கா வழங்கிய ஆயுத உதவி அம்பலத்திற்கு வந்தது.
இதற்கு முன்னர் ஜே.ஆர்.ஜயவர்த்தனா அமொிக்காவோடு இரகசிய ஒப்பந்தம் ஒன்றை செய்துள்ளார். அந்த ஒப்பந்தப்படி அமொிக்கா வழங்கும் ஆயுத உதவிக்குப் பதிலாக திருகோணமலை துறைமுகத்தை அமொிக்க தளமாக மாற்ற இசைந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகியிருந்தன.
தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலி அமொிக்க தலைநகரான வொஷிங்டனுக்கு விஜயம் ஒன்றை மேற் கொண்டிருந்தார்.
100 மில்லியன் டொலர் பெறுமதியான ஆயுதம் பெறுவதற்காகவே அவர் சென்றிருந்தார். ஆனால் முயற்சி பயனளிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகியிருந்தன.
இதே காலகட்டத்தில் அமைச்சர் ஹமீத், பிரதமர் பிரேமதாசா ஆகியோரும் வெளி நாடுகளுக்கு விஜயம் செய்தனர்.
அமைச்சர் ஹமீத்தும், லலித் அத்துலத் முதலியும் ஒன்றாக லண்டனில் தங்கியிருந்தனர். இவ்வாறான நடவடிக்கைகள் ஆயுத உதவி பெறும் இரகசிய பேச்சுக்கள் நடப்பதாக சந்தேகத்தை ஏற்படுத்தின.
வியட்நாம் யுத்தத்தின் பின்னர் அமொிக்கா எந்தவொரு நாட்டுக்கும் நேரடியாக ஆயுதங்களை விநியோகிக்காமல் இருந்தது.
தனது ஆயுதக் கிடங்குகளை வேறு நாடுகளில் வைத்திருந்தது. அங்கிருந்தே ஆயுதங்களை விநியோகித்து வந்தது அமொிக்கா.
உதாரணமாக அங்கோலா சோசலிச அரசுகடகு எதிராகப் போராடிய கிளர்ச்சியாளருக்கு போர்த்துக்கல்லிலிருந்த தனதுஆயுதக்கிடங்கில் இருந்தே அமொிக்கா ஆயுதங்களை விநியோகித்துக்கொண்டிருந்தது.
இரகசியமாக வந்த அமொிக்க ஆயுதம்: அம்பலமானது எப்படி?
இலங்கை அரசுக்கும் போர்த்துக்கல்லிலிருந்து தனது ஆயுதக் கிடங்து மூலமாகவே ஆயுதங்கழளை வழங்க அமொிக்கா முன்வந்தது.
போர்த்துக்கல்லிலிருந்து ஆயுதங்களை ஏற்றிவர சயர் றாட்டு விமானம் பயன் படுத்தப்பட்டது. சயர் நாடு அமொிக்காவின் நட்பு நாடாகும்.
சயர் நாடடு சரக்கு விமானமானடி.சி.8 என்ற விமானம் 16.000 கிலோ கிராம் எடையுள்ள ஆயுதத் தளாபாடங்களோடு போர்த்துக்கல் நாட்டிலிருந்து புறப்பட்டது.
போத்துக்கல் நாட்டின் தலைநகரான லிஸ்பனில் இருந்து புறப்பட்டு இஸ்ரேலின் தலைநகரான டெல் அவிவ் விமான நிலையத்திலும் ஓமானில் மஸ்கற் விமான நிலையத்திலும் எரிபொருட்களை நிரப்பிக்கொண்டு நேராக கொழும்பு வருவதுதான் டி.சி.8 விமானத்தின் பயணத் திட்டமாகும்.
விமானத்தின் கொள் அளவைவிட அது சுமந்த வந்த எடை அதிகமாக இருந்தமையால் எரிபொருள் தீர்ந்துவிட்டது.
அதனால் வேறுவழியின்றி இந்தியாவில் கேரளமாநில தலைநகரான திருவனந்தபுரம் விமான நிலையத்தில் டி.சி.8 விமானம் இறக்கப்பட்டது.
எதிபாராத இந்த நிகழ்வால் சயர் நாட்டு விமானத்தின் ஆயுதக் கடத்தல் விவகாரத்தை இந்தியா அறிந்து கொண்டது. விசயமும் அம்பலமானது.
ஆயுதங்களோடு வரும் விமானங்கள் இந்தியா தவிர்ந்த வேறு நாடுகளில் தரித்து வருவதற்கான அனுமதி பெறுவதே இலங்கை அமைச்சர்கள் பாங்கொக், சிங்கப்பூர் போன்ற நகரங்களுக்கு விஜயம் செய்ததின் இரகசியம் என்று இதன் பின்னர் பேசப்பட்டது.
சொன்னதும் – செய்ததும்
இதேவேளை பிரிட்டிஷ் அரசு இலங்கையில் தமிழர்களது பிரச்சனைகளுக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் மனித உரிமைகள் மீறப்படுவது நிறுத்தப்பட வேண்டும் என்று கூறியது.
தேசிய பாதுகாப்பு அமைச்சர் அத்துலத் முதலி பிரிட்டனுக்கு சென்றிருந்தார். அவரது விஜயம் பற்றி பிரிட்டிஷ் அரசு பின்வருமாறுசொன்னது:
“தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்று சிறீலங்கா தேசிய பாதுகாப்பு மந்திரியிடம் கூறப்பட்டிருக்கிறது.”
இந்த செய்திகள் இலங்கை பத்திரிகைகளிலும் வெளிவந்து கொண்டிருந்தபோது!
அதே பிரிட்டிஷ் அரசு 10 நவீன போர் படகுகள், இயந்திரத் துப்பாக்கிகள் என்னவற்றை இலங்கை அரசுக்கு தருவதாக ஒப்புக்கொண்டது.
“மின்னுவதெல்லாம் பொன்னல்ல” அது போல நாடுகளுக்கிடையேயான உறவுகளில் வெளியே செல்லப்படும் செய்திகள் யாவும் மெய்யல்ல.
கூட்டுச் சேரா நாடுகள் அமைப்பில் இலங்கையும் ஓரங்கம்.
தென்னாபிரிக்காவோடு ஒட்டுமில்லை உறவுமில்லை என்பது கூட்டுச் சேரா நாடுகளது கொள்கை,
ஆனால் ஜே.ஆர். அரசுக்கு 84ம் ஆண்டு ஏழாம் மாதத்தில் தென்னாபிரிக்காவிலிருந்து ஆயுதம் வந்தது. அதைக் கொண்டு வந்ததும் சியர் நாட்டு டி.சி.8 விமானம்தான்.
இதே சமயம் தென்னாபிக்க ஐனாதிபதி பீட்டர் போத்தா இலண்டனுக்கு விஜயம் செய்தபோது ஆபிக்கத் தேசியக் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தியது.
அந்த ஆர்ப்பாட்டத்தில் புலிகளது இலண்டன் கிளையும் கலந்து கொண்டது.எதிரிக்கு எதிரி நண்பன் தானே!
1985ம் ஆண்டில் இராணுவ நடவடிக்கையை போராளி இயக்கங்கள் தரப்பிலிருந்து முதலில் ஆரம்பித்து வைத்தது ரெலோ இயக்கம்.
09.01.85 அன்று யாழ்தேவி புகையிரதம் நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினரை சுமந்து கொண்டு சென்றது.
பழைய முறிகண்டி என்னுமிடத்தில் கண்ணிவெடிகளை வைத்துவிட்டுக் காத்திருந்தனர் போராளிகள்.
12 பெட்டிகளோட வந்த யாழ்தேவி கண்ணிவெடியில் சிக்கி சிதறியது.
நூற்றுக்கு மேற்பட்ட இராணுவத்தினர் பலியானார்கள்.
இரவு 08.30 அணியளவில் நடைபெற்ற இத்தாக்குதல் அதுவரை நடந்த கொில்லாத்தாக்குதல்களில் பாரியதாகும்.
புகைவண்டிப் பாதையில் கண்ணிவெடித் தாக்குதல் நடத்தப்பட்டதும் அதுவே முதல் முறையாகும்.
இத்தாக்குதலில் முன்னின்று செயற்பட்டு வெற்றிக்கு காரணமாக இருந்தவர் தாஸ்.
உட்கொலை
பருத்திதுறையைச் சேர்ந்த தாஸ் ரெலோ அமைப்பின் இராணுவ நடவடிக்கைகளுக்கு வடக்கில் முக்கிய பொறுப்பாளராக இருந்தவர்.
இவர் பின்னர் ரெலோ இயக்க உள் முரண்பாடு காரணமாக யாழ் பொது மருத்துவமனையில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்டார்.
ரெலோ தலைவர் னத்தின் உத்தரவின் படி பேச்சுவார்த்தைக்கு வருமாறு அழைத்து தாஸீம் அவரது விசுலாசிகள் சிலரும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
தாஸின் கொலையோடு ரெலோவின் இராணுவ நட வடிக்கைகள் வேகம் குன்றியமையும் குறிப்பிடத்தக்கது. இதுபற்றி பின்னர் ஒரு சமயத்தில்
-எழுதுவது அற்புதன்…
தொடரும்…
தப்பி ஓடிய கிட்டு!! : அல்பிரட் துரையப்பா முதல் காமினி வரை – பகுதி 37