காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி அமெரிக்காவில் போதைப் பொருள் வைத்து எப்.பி.ஐ.இடம் சிக்கியபோது , அவரை அப்போதைய பிரதமர் வாஜ்பாய் தான் காப்பாற்றினார் என்று பா.ஜ.க. தலைவர்களில் ஒருவரான சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.
அவர் இது தொடர்பில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
கடந்த 2001ஆம் ஆண்டு காங்கிரஸ் துணை தலைவர் ராகுல் காந்தி 1.60 இலட்சம் அமெரிக்க டொலர் மற்றும் போதைப் பொருள் வைத்திருந்து அமெரிக்காவில் எப்.பி.ஐ. அதிகாரிகளிடம் சிக்கினார்.
உடனே காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி அப்போதைய பிரதமர் வாஜ்பாய்க்கு தொலைபேசி மூலம் உரையாடி ராகுலை விடுவிக்க உதவுமாறு கேட்டார்.
வாஜ்பாயும் அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷுக்கு தொலைபேசி மூலம் அறிவித்து ராகுலை விடுவிக்க வைத்தார்.
மேலும், எனக்கு வசுந்தராவை நன்கு தெரியும். அவர் ஜான்சிராணி போன்றவர். எந்த சர்ச்சையில் இருந்தும் வெளிவரக்கூடிய சக்தி உள்ளவர். அவர் தன்னை தானே பாதுகாத்துக் கொள்வார். அவருக்கு கட்சியினரின் உதவி தேவை இல்லை.
ஆனால் பிறரை குற்றம் கூறும் முன்பு தங்கள் நிலையை முதலில் காங்கிரஸார் பார்க்கவேண்டுமென்று தெரிவித்துள்ளார்.
பா.ஜ.க.எம்.பி.கள் இராஜினாமா செய்யும் வரை போராடுங்கள்: காங்கிரஸாருக்கு சோனியா காந்தி உத்தரவு
மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா ராஜே சிந்தியா ஆகியோர் லலித்மோடிக்கு உதவிய விவகாரம், மத்திய பிரதேச ‘வியாபம்’ முறைகேடு போன்றவற்றை பாராளுமன்றத்தில் எழுப்பப் போவதாக காங்கிரஸ் ஏற்கனவே அறிவித்தலிருந்தது.இதற்கிணங்க நேற்று முன்தினம் முழுவதும் சபை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவி சோனியாகாந்தி, லலித்மோடிக்கு உதவிய மத்திய அமைச்சர் சுஷ்மா சுவராஜ், ராஜஸ்தான் முதலமைச்சர் வசுந்தரா, ம.பி. முதலமைச்சர் சிவராஜ்சிங் சௌகான் ஆகியோர் பதவி விலகும் வரை இவர்கள் தொடர்பான விவகாரங்களை பாராளுமன்றத்தில் தொடர்ந்து எழுப்ப வேண்டும் என்று காங்கிரஸ் எம்.பி.க்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.