நியூ யார்க்: அமெரிக்காவில் உள்ள இண்டியானா நகரில் கப்பல் போன்ற நீளமான சொகுசு காரில் பிறந்தநாளை கொண்டாட வாலிபர்கள் குவிந்தனர்.

மிதமிஞ்சிய போதை அளித்த உற்சாகத்தில் ஆளில்லா ரெயில்வே கேட்டை அவர்கள் கடந்து சென்றபோது, எதிர்பாராதவிதமாக தண்டவாளத்தின் நடுவே அந்த கார் பழுதாகி நின்று விட்டது.

போதாத வேளையாக அந்த நேரம் பார்த்து சுமார் 10 ஆயிரம் டன் சரக்குகளை ஏற்றிவந்த ஒரு ரெயில் அந்தப் பகுதியை நெருங்கி விட்டது.

இதைக் கண்டு அந்த வாலிபர்கள் அனைவரும் காரில் இருந்து கீழே குதித்தனர். அதில் ஒருவர் சிகப்பு துணியை எடுத்து, ரெயில் டிரைவருக்கு எச்சரிக்கை விடுத்தார். ஆனால், காரை மிகவும் நெருங்கி விட்டதால் டிரைவரால் ரெயிலை உடனடியாக நிறுத்த இயலவில்லை.

இதையடுத்து, கப்பல் போல் நீண்டிருந்த அந்த சொகுசுக் காரின் மீது அசுர வேகத்தில் வந்த ரெயில் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் பல மீட்டர் தூரத்துக்கு அந்த கார் தள்ளிச் செல்லப்பட்டது. இந்த விபத்தில் காரில் சென்ற யாருக்கும் காயம் ஏற்படவில்லை என தெரியவந்துள்ளது.

அந்த சிலிர்ப்பூட்டும் காட்சியை இந்த வீடியோவில் காணலாம்

ஐ.எஸ் தீவிரவாதிகளின் வெறியாட்டம்: இறந்த தோழியின் கையை இறுகப்பிடித்துகொண்டு உயிருக்கு போராடிய பெண் (வீடியோ இணைப்பு)
25-07-2015

isis_friends_002துருக்கியில் சிரியா எல்லையில் உள்ள சுருக் நகரில் குர்தீஸ் பகுதியில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியுள்ளனர்.

ஐ.எஸ்.தீவிரவாதிகள் மற்றும் குர்தீஸ் தீவிரவாதிகளாலும் தொடர்ந்து வன்முறை சம்பவங்கள் நடந்து வருவதால், இதற்கு முடிவு கட்டும் விதமாக துருக்கி அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது.

சிரியாவின் எல்லையில் சோதனை நடத்தி நூற்றுக் கணக்கான தீவிரவாதிகளை கைது செய்தது. அவர்களில் குர்தீஸ் தீவிரவாதிகளும் அடங்குவர்.

மேலும், சிரியாவில் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது குண்டு வீச்சு நடத்தியதில் 9 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். 12 பேர் காயம் அடைந்தனர்.

இந்நிலையில், துருக்கியின் சிரியா எல்லையில் உள்ள சுருக் நகரில் குர்தீஸ் பகுதியில் ஐ.எஸ்.தீவிரவாதிகள் தற்கொலை படை தாக்குதல் நடத்தியதில், 32 பேர் பலியானார்கள்.

மேலும், காயமடைந்த 29 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர், இந்த தாக்குதல் தொடர்பாக வெளியான ஒரு புகைப்படத்தில் பெண்மருத்துவர் ஒருவர் உயிருக்கு போராடிய நிலையில் இறந்துபோன தனது தோழியின் கையை இறுகப்பிடித்துக்கொண்டு கிடக்கிறார்.

இந்த புகைப்படம் தற்போது வைரலாக பரவி வருகிறது, இதனைப்பார்த்த மீட்பு படையினர், உயிருக்கு போராடிக்கொண்டிருந்த அந்த பெண் மருத்துவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர், அங்கு அவருக்கு 14 யூனிட் ரத்தம் செலுத்தப்பட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும், துருக்கி ஜனாதிபதி தனது மனைவியுடன் மருத்துவமனைக்கு சென்று காயமுற்றவர்களிடம் அவர்களது நலன் குறித்து விசாரித்துள்ளார்.

 

Share.
Leave A Reply

Exit mobile version