இந்தியா கிரிக்கெட் அணியின் வெற்றி நாயகனான மஹேந்திர சிங் தோனியின் காதல் கதை சுவாரஸ்யம் நிறைந்ததாகவே இருக்கின்றது.

இந்திய அணிக்காக பல்வேறு வெற்றிகளைப் பெற்றுக் கொடுத்தவர்தான மஹேந்திர சிங் தோனி.

இவரது தலைமையின் கீழ் T20 உலகக்கிண்ணம், சாம்பியன் டிராபி, 2011 ல் 50 ஓவர் உலகக்கிண்ணம், 2 ஐபிஎல் கிண்ணம், 2 சாம்பியன் லீக் கிண்ணம் என 7 மிகப்பெரிய கிண்ணங்கள் இந்திய அணி வெற்றி கொண்டுள்ளது.

கடந்த 2007ம் ஆண்டு தான் தோனி சாக்க்ஷியின் காதல் வலையில் சிக்கினார்.

தோனியும் அவரது காதல் மனைவி சாக்க்ஷியும் சிறுவயதில் பள்ளியில் ஒன்றாக படித்தவர்கள்.

அதன் பின்னர் இருவருக்கிடையே தொடர்பில்லாமல் இருந்தது.

பள்ளிக் காலத்திற்கு பின் தோனி அவரது காதலி சாக்க்ஷியை முதலில் சந்தித்தது கொல்கத்தாவில் உள்ள தாஜ் ஹோட்டலில் தான்.

அப்போது இந்தியா- பாகிஸ்தான் அணிகளுக்கிடையான போட்டி ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றதால் தோனி அந்த ஹோட்டலில் தங்கி இருந்தார்.

சாக்க்ஷி அந்த ஹோட்டலில் கேட்டரிங் படித்துகொண்டே வேலைப்பார்த்து கொண்டிருந்தார். அன்று அவரது கடைசி நாளாகவும் அமைந்தது.

டோனியின் மேலாளராக இருந்த யுதாஜிட், சாக்க்ஷிக்கு நண்பராக இருந்ததால், அவரிடம் டோனியை பார்க்க வேண்டும் என்று கூறியுள்ளார் சாக்க்ஷி.

இதனை அவரும் டோனியிடம் தெரிவிக்க, இருவரும் முதன்முதலில் சந்தித்துக் கொண்டனர்.

198791131dhoni_shashi_002இந்த சந்திப்பே இருவருக்கும் இடையே காதல் மலர காரணமாக இருந்தது.

பின்னர் டோனி தனது மேலாளரான யுதாஜிட்டிடம் இருந்து சாக்க்ஷியின் மொபைல் நம்பரை வாங்கி அவருக்கு குறுஞ்செய்தி அனுப்பியுள்ளார். ஆனால் இதை சாக்க்ஷியால் நம்ப முடியவில்லை.

பின்னர் இருவருக்கும் நெருக்கம் அதிகமாக மார்ச் 2008ம் ஆண்டுக்கு பிறகு யாருக்கும் தெரியாமல் ´டேட்டிங்´ செல்ல ஆரம்பித்திருக்கிறார்கள்.

பிறகு அந்த ஆண்டு மும்பையில் நடைபெற்ற தன் பிறந்த நாள் விழாவுக்கு டோனி சாக்க்ஷியை அழைத்துள்ளார்.

அங்கே வைத்து தன்னை திருமணம் செய்ய சொல்லி கேட்டுயிருக்கிறார் டோனி. இதற்கு சாக்க்ஷியும் சரி என்று சொல்ல இருவீட்டாரும் பேச்சுவார்த்தையில் இறங்கி இருவருக்கும் திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர்.

அதன் படி இருவருக்கும் 2010 ஜூலை 4ம் திகதி உத்தரகாண்டில் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 2015 பெப்ரவரி 6ம் திகதியன்று அழகான பெண் குழந்தை ஒன்றும் பிறந்தது.

Share.
Leave A Reply

Exit mobile version