அவுஸ்திரேலியாவில் உயிரிழந்த இரண்டு இலங்கை அகதிகளின் சடலங்களும் இலங்கைக்கு கொண்டுவரப்படவுள்ளன.

அவுஸ்திரேலியாவில் உள்ள மனித உரிமைகள் மற்றும் அகதிகள் சேவை அமைப்புகள் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அவுஸ்திரேலிய ஊடகம் ஒன்று இதனைத் தெரிவித்துள்ளது.

கடந்த தினம் டார்வினில் இடம்பெற்ற விபத்தில் இலங்கையைச்சேர்ந்த அகதிகளான ஜேசுராஜ் அருள்நேசன் மற்றும் இமானுவேல் சந்தியோகி ஆகிய இரண்டு பேர் பலியாகினர்.

அவர்கள் இருவரும் கடந்த 2009ம் ஆண்டு அவுஸ்திரேலியாவுக்கு அகதிகளாக சென்றுள்ளனர்.

இலங்கையில் உள்ள அவர்களின் உறவினர்களிடம் அவர்களின் சடலங்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 113739_1

Share.
Leave A Reply

Exit mobile version