கலிபோர்னியாவின் சான்டியாகோ பகுதியைச் சேர்ந்த டோட் ஃபாஸ்லர், பாம்பு ஒன்றை செல்ல பிராணியாக கடந்த ஓராண்டாக வளர்த்து வந்துள்ளார்.

அந்த பாம்புடன் செல்ஃபி எடுத்துக் கொள்ள விரும்பிய ஃபாஸ்லர், படம் கச்சிதமாக இருக்க வேண்டும் என்பதற்காக பாம்பிற்கு மிக அருகில் சென்றுள்ளார். அப்போது அந்த பாம்பு ஃபாஸ்லரை கோபமாக கடித்து தாக்கியது.

இதனால் உயிருக்கு ஆபத்தான நிலையில், பல மருத்துவமனைகளில் அலைந்து, ஹபாஸ்லர் உயிர் பிழைத்துள்ளார்.

ஆனால் அவருக்கு சிகிச்சை அளித்த அந்த மருத்துவமனை, ஃபாஸ்லரிடம் கொடுத்த மருத்துவமனை பில்லை பார்த்ததும் அவர் அதிர்ந்து போனார்.

காரணம், ஃபாஸ்லர் மருத்துவத்திற்கான செலவு 153,161 அமெரிக்க டொலர்கள் என குறிப்பிடப்பட்டிருந்தது.

ஃபாஸ்லரின் மருத்துவ செலவை ஏற்க காப்புறுதி நிறுவனமும் மறுத்துள்ளது. இதனால் மிகுந்த மனவருத்தத்திற்கு ஆளான ஃபாஸ்லர், இச் சம்பவத்திற்கு பிறகு தான் செல்லமாக வளர்த்த பாம்பை காட்டுக்குள் சென்று விட்டுள்ளார்.

 

 

Share.
Leave A Reply

Exit mobile version