கண்டி கன்னொருவ பிரதேச பிரபல பாடசாலை ஒன்றின் 10 மாணவர்கள் மகாவலி ஆற்றங்கரையில் மது அருந்தி மயங்கிக்கிடந்த நிலையில் கம்பளை பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஒரு மாணவன் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நேற்று சனிக்கிழமை மாலை இடம் பெற்ற இச்சம்பவம் குறித்து மேலும் தெரிய வருவதாவது; கம்பளை நகரில் மகாவலி ஆற்றங்கரையில் மாணவர் குழுவொன்று மதுஅருந்திய நிலையில் மயங்கிக்கிடப்பதாக கம்பளைப் பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றையடுத்து ஸ்தலத்திற்கு விரைந்த பொலிஸார் நிறைந்த மதுவெறியில் மயங்கிக் கிடந்த பத்து மாணவர்களை கைது செய்ததுடன் அதில் ஒரு மாணவன் ஆபத்தான நிலையிலிருந்தமையால் கம்பளை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.