விமானமொன்றின் உள்ளே தீ வைத்துக் கொள்ள முயற்சித்த நபரொருவரை பயணிகளும் விமான ஊழியர்களும் பெரும் போராட்டத்தின் மத்தியில் தடுத்து நிறுத்திய பரபரப்புச் சம்பவம் சீனாவில் இடம்பெற்றுள்ளது.
தயிஸொயு நகரிலிருந்து குவாங்ஸொயு நகருக்குப் பயணித்த மேற்படி ஷென்ஸென் விமான சேவை விமானத்துக்குள் பெற்றோல் மற்றும் சிகரெட்டைப் பற்ற வைப்பதற்குப் பயன்படும் உபகரணம் என்பவற்றுடன் பிரவேசித்த குறிப்பிட்ட நபர் தனக்குத் தானே தீ வைத்துக் கொள்ள முயற்சித்ததையடுத்து அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் போது விமானத்தின் அவசரகால நிலைமையின் கீழ் பயன்படுத்தப்படும் வாயில் கதவு மற்றும் பயணி ஆசனம் என்பன பகுதியாக எரிந்துள்ளன.
மேற்படி பயணிகளும் விமான ஊழியர்களும் துரிதமாக செயற்படத் தவறியிருந்தால் அந்த விமானம் பாரிய அனர்த்தத்தை சந்தித்திருக்க நேர்ந்திருக்கும் எனத் தெரிவிக்கப்படுகிறது.
அமைதியற்ற காலநிலை காரணமாக ஆடி ஆடி வந்திறங்கிய விமானம்!!
Light plane crashes into Tokyo suburb