வடக்கு மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் வரையில் அதி­கா­ரப்­ப­கிர்­வுக்கு செல்ல முடி­யாது.

அதி­கா­ரப்­ப­கிர்­வுக்கு சென்று நாட்டை பிள­வு­ப­டுத்தும் செயற்­பாட்டை நாம் ஒரு­போதும் மேற்­கொள்ள மாட்டோம். ஆனால்

ரணில் – -­சம்­பந்தன் கூட்­டணி நாட்டை பிரிக்கும் உடன்­பாட்டில் தான் கைகோர்த்­துள்­ளது என ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்னணியின் பொதுச்­செ­ய­லாளர் சுசில் பிரே­ம்ஜ­யந்த தெரி­வித்தார்.

தேர்­தலின் பின்னர் ஆட்­சி­ய­மைக்க தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தயவு தேவைப்­ப­டாது. அதேபோல் எந்த சந்­தர்­ப் பத்­திலும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் கைகோர்க்க மாட்டோம் எனவும் அவர் குறிப்­பிட்டார்.

ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியின் தலைமைக் காரி­யா­லயத் தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யாளர் சந்­திப்பின் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார்.

அவர் மேலும் கூறு­கையில், தமிழ்த் தேசிய கூட்­ட­மைப்பு வெளி­யிட்­டி­ருக்கும் தேர்தல் விஞ்­ஞா­ப­ன­மா­னது

வடக்­கையும், கிழக்­கையும் ஒன்­றி­ணைத்த தமிழர் தாய­க­மாகும். அவர்­க­ளது சுய நிர்­ணய கோரிக்­கை­யா­னது நாட்டில் மீண்­டு­மொரு பிரச்­சி­னைக்கு வித்­திட அதிக வாய்ப்­புகள் உள்­ளது.

அது அவ்­வாறு இருக்­கையில் எதிர்­வரும் பொதுத் தேர்­தலின் பின்­னரும் தேசிய அர­சாங்கம் ஒன்றை அமைப்­பதே ஐக்­கிய தேசியக் கட்­சியின் நிலைப்­பா­டாக உள்­ளது. ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தேசிய அர­சாங்­கத்தில் முக்­கிய பங்­கு­தாரர் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­பே­யாகும்.

தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்தன் மற்றும் ரணில் விக்­கி­ர­ம­சிங்க ஆகியோர் ஓர­ணியில் தான் செயற்­ப­டு­கின்­றனர். ஆகவே இவர்­க­ளது தேசிய அர­சாங்­கத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு எதிர்­பார்க்கும் தமி­ழீ­ழத்தை ரணில் நிச்­ச­ய­மாக பெற்­றுக்­கொ­டுப்பார். அதற்­கான காய்­ந­கர்த்­தல்கள் கடந்த ஜனா­தி­பதித் தேர்­தலின் போதி­ருந்தே முன்­னெ­டுக்­கப்­பட்டு வந்­துள்­ளது.

அதேபோல் ரணில், சம்­பந்தன் கூட்­ட­ணியின் புதிய உறுப்­பி­ன­ராக மக்கள் விடு­தலை முன்­ன­ணியின் தலைவர் அனு­ர­கு­மார திசா­னா­ய­கவும் கைகோர்த்­துள்ளார். இவர்­களின் பிரி­வி­னை­வாத செயற்­பா­டு­களை இந்த ஏழு மாத­கா­லத்தில் மக்கள் நன்­றாக உணர்ந்­துள்­ளனர்.

அதேபோல் தொடர்ந்தும் இவர்­க­ளுக்கு மக்கள் அனு­மதி வழங்­கினால் இந்த நாட்டில் மீண்­டு­மொரு ஆயுதக் கல­வரம் உரு­வாகும் நிலை ஏற்­படும். கடந்த காலத்தில் நாம் ஆயுத யுத்­தத்தை முடி­வுக்கு கொண்­டு­வந்து நாட்டில் அமை­தி­யையும், நல்­லி­ணக்­கத்­தையும் ஏற்­ப­டுத்­தி­யுள்ளோம்.

ஆகவே நாம் வென்­றெ­டுத்­துள்ள சமா­தா­னத்தை மீண்டும் பிரி­வி­னையின் பக்கம் நகர்த்­தி­விடக் கூடாது.

கேள்வி :-எதிர்­வரும் பொதுத் தேர்­தலின் பின்னர் ஐக்­கிய மக்கள் சுதந்­திர கூட்­ட­ணியின் ஆட்­சியை அமைக்க தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் ஆத­ரவு தேவைப்­ப­டு­மாயின் ?

பதில் :- இந்த கேள்­விக்கு என்னால் பதில்­கூற முடி­யாது. எதிர்­கா­லத்தை எங்­களால் அனு­மா­னிக்­கவும் முடி­யாது. ஆனால் எந்­த­வொரு நிலை­யிலும் பிரி­வி­னை­வா­தத்­துடன் செயற்­படும் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை இணைத்­துக்­கொள்ளும் நிலை­பாட்டில் நாம் இல்லை.

அதேபோல் கூட்­ட­மைப்பின் தயவில் ஆட்­சியை அமைக்கும் நிலைமை ஒன்றும் வரப்­போ­வ­தில்லை. ஏனெனில் எதிர்­வரும் பொதுத் தேர்­தலின் பின்னர் நாம் பெரும்­பான்மை ஆத­ர­வுடன் ஆட்­சியை அமைப்போம் என்ற நம்­பிக்கை எமக்கு உள்­ளது. அதேபோல் நாம் அதி­கா­ரத்­துக்கு வந்தால் எதிர்க்­கட்­சியில் இருந்து பலர் எம்­முடன் வந்து கைகோர்ப்­பார்கள்.

கேள்வி:- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு ஒன்­றி­ணைந்த நாட்­டுக்குள் அதி­காரப் பகிர்வு என்ற கருத்தை தானே முன்­வைத்­துள்­ளனர்.அதி­காரப் பகிர்­வுக்கு நீங்கள் தயார் இல்­லையா?

பதில் :- வடக்கு மக்­களின் அடிப்­படைப் பிரச்­சி­னை­களை இந்த அர­சாங்கம் தீர்த்­துள்­ளதா. அல்­லது தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு அவ்­வா­றான நிலையில் செயற்­பட்டு வரு­கின்­றதா.

இரண்­டு­பே­ருமே தமது சுய­நல அர­சி­யலை செய்­கின்­றனர். வடக்கு மக்­களின் அடிப்­படை பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு காணும் வரை அதி­காரப் பகி­வுக்கு செல்ல முடி­யாது. நாம் கடந்த காலத்தில் 13 ஐ வழங்கும் ஒரு நிலைப்பாட்டிலும் இருந்தோம்.

ஆனால் நாட்டின் பாதுகாப்பு நிலைமைகளையும் யுத்தத்தையும் கவனத்தில் கொண்டே அவ்வாறான ஒரு நிலைப்பாட்டுக்கு செல்ல முடியாமல் போய்விட்டது. எதிர்கால நிகழ்வுகளை வைத்து இந்த விடயங்களா தொடர்பில் சிந்திக்கலாம்.

Share.
Leave A Reply

Exit mobile version