சிட்னி: ஆஸ்திரேலியாவில் குத்திக் கொல்லப்பட்ட இந்தியப் பெண் பொறியாளருடன் மர்மநபர் ஒருவர் பேசுவது போன்ற புதிய சிசிடிவி காட்சிகளைப் போலீசார் வெளியிட்டுள்ளனர்.

இதன் மூலம் கொலையாளி குறித்து துப்பு கிடைக்க வாய்ப்புள்ளதாக போலீசார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

31-1438323057-09-1425899168-prabha-1பெங்களூருவைச் சேர்ந்த பெண் பொறியாளர் பிரபா அருண்குமார் (41). இவர் ஆஸ்திரேலியாவின் சிட்னியில் பணி புரிந்து வந்தார்.

கடந்த மார்ச் மாதம் வழக்கம் போல பணிக்கு சென்று விட்டு மாலை வீடு திரும்பிக் கொண்டிருந்த பிரபாவை, சிட்னியின் புறநகர்ப் பகுதியான வெஸ்ட்மீட்டில் உள்ள பாராமட்டா பூங்காவில் மர்மநபர்கள் கத்தியால் குத்திக் கொலை செய்தனர்.

பெங்களூருவில் வசித்து வரும் தனது கணவருடன் போனில் பேசியபடி வந்தபோது தான் பிரபா கொல்லப்பட்டார்.

தன்னை விட்டு விடும்படி கொல்ல வந்தவரிடம் பிரபா கெஞ்சியதைப் போனில் கேட்டதாக பிரபாவின் கணவர் அருண் குமார் போலீசாரிடம் தெரிவித்தார்.

ரவுடிகள் தான் காரணமா?
பாராமட்டா பூங்கா அருகே எப்போதும் முகாமிட்டிருக்கும் சில ரவுடிகள் அவ்வழியே செல்பவரை மடக்கி பணம் பறிப்பது வழக்கம். அது போன்ற ஒரு திருடன்தான் இந்த கொலையை செய்திருக்கக் கூடும் என வெஸ்ட்மீட் போலீசார் சந்தேகிக்கின்றனர்.
போலீசார் கோரிக்கை…
மேலும், இந்த கொலையைப் பற்றி யாருக்காவது ஏதேனும் பின்னணி தகவல்கள் தெரிந்திருந்தால் அதை போலீசாரிடம் பகிர்ந்து வழக்கின் விசாரணையில் உதவும்படி உள்ளூர் மக்களுக்கும் பாராமட்டா பகுதி போலீசார் கோரிக்கை விடுத்திருந்தனர்.
புதிய வீடியோ காட்சிகள்…
இந்நிலையில், போலீசாருக்கு சிசிடிவியில் பதிவான புதிய வீடியோ ஒன்று கிடைத்துள்ளது. அதில், மர்மநபர் ஒருவர் பிரபாவுடன் பேசுவது போன்ற காட்சிகள் பதிவாகியுள்ளன. பிரபாவுடன் பேசும் அந்த மர்மநபர் யார் என அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக இறங்கியுள்ளனர். இந்த வீடியோவை போலீஸார் வெளியிட்டுள்ளனர்.
அடையாளம் காணும் பணி…
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் ரிச்சி சிம் கூறுகையில், “அந்த மர்ம நபர் யார் என்பது இதுவரை அடையாளம் தெரியவில்லை. அவர் குறித்து தொடர்ந்து விசாரித்தபடி உள்ளோம். ஆனால் எந்தத் துப்பும் கிடைக்கவில்லை .
சிசிடிவி காட்சிகள்…
இந்த வீடியோ படம் சமீபத்தில்தான் கிடைத்தது. கொலை நடந்த இடத்தை தீவிரமாக சோதனையிட்டபோது இந்த சிசிடிவி வீடியோ படம் கிடைத்தது” என்றார்.
மங்களூருவில் விசாரணை…
இதற்கிடையே இந்த கொலை தொடர்பாக ரகசிய போலீஸ் ஏஜென்டுகள் சிலர் பிரபாவின் சொந்த ஊரான மங்களூருக்கு செல்லவுள்ளனர். மங்களூரில் சிலரை விசாரிக்க நாங்கள் திட்டமிட்டுள்ளோம் என்று சிம் தெரிவித்துள்ளார்.
Share.
Leave A Reply

Exit mobile version