முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ மூன்றாம் முறை­யா­கவும் ஜனா­தி­பதி பத­வியைப் பெற்­றுக்­கொள்­வ­தற்­காக ஜன­வரி மாதத்தில் நடத்­திய ஜனா­தி­பதி தேர்­தலில் ஜன­நா­யக வெளி­யொன்று புலர்ந்­தி­ருந்­தது.

அடக்கு முறையும் அதி­கார கோலோச்சல் முறையும் ஒரு தேர்­தலில் மக்­களைக் கட்­டுப்­ப­டுத்த முடி­யாது என்ற கசப்­பான உண்­மையை ஜனா­தி­பதி தேர்தல் ராஜ­பக் ஷ குழு­வி­ன­ருக்குப் புகட்­டி­யி­ருந்­தது.

பயங்­க­ர­வா­தத்­தையும், பயங்­க­ர­வா­தி­க­ளாக சித்­தி­ரிக்­கப்­பட்டு இல்­லா­தொ­ழிக்­கப்­பட்ட விடு­த­லைப்­பு­லி­க­ளையும் வைத்து மக்கள் மனங்­களை வெல்ல முடி­யாது என்ற அர­சியல் யதார்த்­தத்­தையும் ஜனா­தி­பதி தேர்தல் அதி­கா­ரத்தை வைத்துக் கொண்டு அகங்­கா­ரத்­தோடு ஆட்சி நடத்­தி­ய­வர்­க­ளுக்கு இடித்­து­ரைத்­தி­ருந்­தது.

இந்த ஜனா­தி­பதி தேர்­தலில் வெளிக்­கி­ளம்­பிய ஜன­நா­யக சக்­தியின் ஊடாக ஏற்­பட்ட ஆட்சி மாற்­றத்தின் தொடர்ச்­சி­யாக – அந்த மாற்­றத்தின் அடுத்த கட்­ட­மா­கவே ஆகஸ்ட் மாதப் பொதுத்­தேர்தல் அமைந்­தி­ருக்­கின்­றது.

சர்­வா­தி­காரப் போக்­கிற்கு முடிவு கட்ட வேண்டும் என்ற ஜன­நா­யக சிந்­தனை கொண்­ட­வர்­க­ளுக்கு இந்த ஆட்சி மாற்­ற­மா­னது, ஒரு புதிய வழியைத் திறந்­து­விட்­டி­ருந்­தது. ஆயினும் இனத்­து­வேச அர­சியல் சக்­திகள், இந்த ஆட்சி மாற்­றத்­தையும், அதன் ஊடாக ஏற்­பட்­டுள்ள ஜன­நா­யக வெளி­யையும் இல்­லாமல் செய்­வ­தற்­கான முயற்­சி­களில் தீவி­ர­மாக இறங்­கி­யி­ருக்­கின்­றன.

இதன் அடை­யா­ள­மா­கவே, ஜனா­தி­பதித் தேர்­தலில் தோல்வி கண்ட மஹிந்த ராஜ­பக் ஷவின் மீள் அர­சியல் பிர­வே­சத்தை நோக்க வேண்­டி­யி­ருக்­கின்­றது. ஆக, நாட்டின் தென்­ப­குதித் தேர்தல் கள­மா­னது, சர்­வா­தி­கார போக்­கு­டைய சக்­தி­க­ளுக்கும், ஜன­நா­ய­கத்தை நிலை­நி­றுத்த வேண்டும் என்று முனைந்­துள்ள சக்­தி­க­ளுக்­கு­மான பரீட்­சைக்­க­ள­மா­கி­யி­ருக்­கின்­றது.

வடக்கு, கிழக்குப் பிர­தே­சங்­களைப் பொறுத்­த­மட்டில் இந்த ஜன­நா­யக வெளியின் பின்­ன­ணியில் வந்­துள்ள பொதுத் தேர்­த­லா­னது, தமிழ்த்­தே­சிய கூட்டமைப்­பிற்கு மோச­மா­ன­தொரு சோத­னைக்­க­ள­மா­கி­யி­ருக்­கின்­றது.

சிறு­பான்மை இனத்­த­வரை அடக்­கி­யொ­டுக்கி கால­டியில் நசித்து வைத்­தி­ருக்க வேண்டும் என்ற போக்கில் செயற்­பட்­டி­ருந்த ஆட்­சி­யா­ளர்­க­ளுக்கு எதி­ராக எதிர்ப்பு அர­சியல் நடத்தி வந்த கூட்­ட­மைப்­பினர் இந்தப் பொதுத் தேர்­தலில் அத்­த­கைய எதிர்ப்பு நிலையில் இருந்து மக்­க­ளிடம் வாக்கு சேக­ரிக்க முடி­யா­த­வர்­க­ளாக மாறி­யி­ருக்­கின்­றார்கள்.

ஜனா­தி­பதி தேர்­தலின் மூலம் ஏற்­பட்­டுள்ள ஜன­நா­யக வெளியின் கார­ண­மாக இந்த நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

ஆட்சி மாற்றம் ஒன்று ஏற்­பட வேண்டும். சர்­வா­தி­காரப் போக்கில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்­களை ஆட்­டிப்­ப­டைத்து, அவர்­களின் நிம்­ம­தியைக் குலைத்­தி­ருந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக்­ ஷவை வீட்­டிற்கு அனுப்ப வேண்டும் என்ற ஒரே நோக்­கத்­திற்­காக சந்­தி­ரிகா – ரணில் –- மைத்­தி­ரி­பால சிறி­சேன ஆகிய பொதுக்­கூட்­ட­ணிக்கு தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பினர் நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்கி செயற்­பட்­டி­ருந்­தனர்.

ஜனா­தி­பதித் தேர்­தலின் பின்னர், பாரா­ளு­மன்­றத்தில் மாற்­றங்­களைச் செய்து புதிய அர­சாங்­கத்தை – ஒரு தற்­கா­லிக அரச நிர்­வா­கத்தை ஜனா­தி­ப­தி­யாகத் தெரிவு செய்­யப்­பட்ட மைத்­தி­ரி­பால சிறி­சேன, ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவை பிர­ம­த­ம­ராக நிய­மனம் செய்து உரு­வாக்­கி­யி­ருந்தார்.

இந்தத் தற்­கா­லிக அர­சாங்­கத்­திற்கு மக்­க­ளு­டைய அங்­கீ­கா­ரத்தைப் பெற்­றுக்­கொ­டுத்து, அத­னையோர் அதி­காரம் பெற்ற நிரந்­தர அர­சாங்­க­மாக்­கு­வ­தற்­கா­கவே இந்தப் பொதுத் தேர்தல் நடத்­தப்­ப­டு­கின்­றது.

ஜனா­தி­பதித் தேர்­தலின் மூலம் ஏற்­பட்­டுள்ள ஜன­நா­யக சூழலை மேலும் வலு­வாக்­கு­வ­தற்கும், நிரந்­த­ர­மாக்­கு­வ­தற்­கு­மாக நடத்­தப்­ப­டு­கின்ற இந்தப் பொதுத் தேர்­தலில் கடந்த கால தேர்­தல்­களைப் போன்று அரச தரப்­பி­னரைக் கண்­டித்து, அவர்­க­ளுக்கு எதி­ரா­னதோர் அர­சியல் உணர்வைத் தூண்டி, மக்­களின் ஆத­ரவைப் பெற முடி­யாத நிலைமை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்­கி­யுள்ள மைத்­திரி – ரணில் அணி­யி­ன­ருக்கு எதி­ராகப் பிர­சாரம் செய்ய முடி­யாத ஒரு இக்­கட்­டான நிலை­யி­லேயே தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு இந்தத் தேர்­தலில் கள­மி­றங்­கி­யி­ருக்­கின்­றது.

மஹிந்த ராஜ­பக் ஷவை வீட்­டிற்கு அனுப்ப வேண்டும். ரணில் – மைத்­திரி அணி­யி­ன­ருக்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவு வழங்க வேண்டும் என்ற போக்கில் செயற்­பட்ட கூட்­ட­மைப்­பி­ன­ருக்கு, இந்த அர­சாங்கத் தரப்­பி­ன­ருக்கு எதி­ராக தமிழ் மக்­களின் உணர்­வு­களைத் தட்­டி­யெ­ழுப்ப முடி­யா­துள்­ளது.

மாறாக, நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை வழங்­கி­னீர்­களே, அந்த புதிய அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து எங்­க­ளுக்கு எதனைப் பெற்றுத் தந்­தீர்கள்? என்­னென்ன பிரச்­சி­னை­க­ளுக்கு உங்­களால் தீர்வு காண முடிந்­தது? என்று தமிழ் மக்கள் கூட்­ட­மைப்பை நோக்கி வின­வு­கின்ற ஒரு சூழல் ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

நூறு நாள் அர­சாங்­க­மாக உரு­வாக்­கப்­பட்ட புதிய அர­சாங்­க­மா­னது, 6 மாதங்கள் பதவி வகித்­தி­ருந்­தது.

இந்த காலப்­ப­கு­தியில் ஏற்­க­னவே திட்­ட­மி­டப்­பட்­டி­ருந்த நாட்டு மக்­களின் பொது நன்­மைக்­கா­கவும், குறிப்­பாக தென்­ப­குதி மக்­களின் மனங்­களை வெல்­வ­தற்­கா­கவும் மேற்­கொள்­ளப்­பட்ட வேலைத் திட்­டங்­களில் தமிழ் மக்­களின் விசே­ட­மான நாளாந்த பிரச்­சி­னை­க­ளுக்கு தீர்வு கிடைக்­க­வில்லை.

நல்­லெண்ண அடிப்­ப­டை­யி­லான சிறிய காரி­யங்­களைக் கூட புதிய ஜனா­தி­ப­தி­யி­னாலும், புதிய பிர­த­மரின் கீழான அர­சாங்­கத்­தி­னாலும் செய்ய முடி­யாமல் போய்­விட்­டது.

அர­சாங்­கத்­திற்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவு வழங்­கிய தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பி­னரால், சிறிய காரி­யங்­க­ளைக்­கூட புதிய அர­சாங்­கத்தின் மூலம் செய்­விக்க முடி­யாமல் போனது ஏன், என்­பது தமிழ் மக்கள் மனங்­களில் எழுந்­துள்ள பூதா­க­ர­மான ஒரு கேள்­வி­யாகும்.

புதிய ஜனா­தி­ப­திக்கு அமோ­க­மாக ஆத­ர­வ­ளித்­தி­ருந்த போதிலும், அவரால் அன்­றாடப் பிரச்­சி­னை­களில் சில­வற்­றை­யா­வது தீர்த்­தி­ருக்­க­லாமே என்­பது தமிழ் மக்கள் மட்­டு­மல்ல முஸ்லிம் மக்­க­ளி­னதும் ஆதங்­க­மாகும்.

இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும் என்­பது தமிழ் மக்­களின் மிகப்­பெ­ரிய எதிர்­பார்ப்­பாகும். ஆனால் அத்­த­கைய ஒரு தீர்வை இல­குவில் அடைய முடி­யாது. இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு தென்­ப­கு­தியைச் சேர்ந்த பேரின அர­சி­யல்­வா­திகள் தயா­ராக இல்லை என்­பதை தமிழ் மக்கள் நன்­க­றி­வார்கள்.

பேரி­ன­வா­தி­க­ளிடம் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண்­ப­தென்­பது, குதி­ரையைத் தண்ணீர் குடிக்கச் செய்­வ­தற்கு ஒப்­பான காரியம் என்­பதை தமிழ் மக்கள் நன்கு தெரிந்து வைத்­தி­ருக்­கின்­றார்கள்.

ஆனாலும் அர­சியல் தீர்­வுக்­காக தமிழ் மக்­களின் அர­சியல் தலை­மைகள் முயற்­சிக்க வேண்டும். சரி­யா­னதோர் அணு­கு­மு­றையின் ஊடாக நியா­ய­மா­னதோர் அர­சியல் தீர்வை எட்­டு­வ­தற்கு நட­வ­டிக்­கைகள் எடுக்க வேண்டும் என்­பது அவர்­க­ளு­டைய நீண்­ட­கால எதிர்­பார்ப்­பாகும்.

அதே­நே­ரத்தில் மோச­மான யுத்த மோதல்­களில் சிக்கி அனைத்­தையும் இழந்த பின்பும் தங்­க­ளு­டைய சொந்தப் பிர­தே­சங்­களில் அமை­தி­யாக மீள்­கு­டி­யேறி வாழ்­வ­தற்கு வழி­செய்­யப்­பட வில்லை என்­பது அவர்­க­ளு­டைய மிகப் பெரிய கவ­லை­யாகும்.

தங்கள் பிர­தே­சங்­களில், அவர்­களைப் பொறுத்­த­மட்டில், தேவை­யற்ற விதத்தில் தங்­க­ளு­டைய சிவில் வாழ்க்­கையில் தலை­யீடு செய்யும் வகையில் நிலை­நி­றுத்­தப்­பட்­டுள்ள இரா­ணு­வத்­தி­னரை அகற்ற வேண்டும்.

அவர்கள் அப­க­ரித்து வைத்­துள்ள குடி­யி­ருப்பு நிலங்கள், பயிர்ச் செய்கை நிலங்கள் என்­ப­வற்றைக் கைவிட வேண்டும். தங்­க­ளுக்கு இடைஞ்சல் ஏற்­ப­டுத்­தாத வகையில் அவர்­களை விலக்கி வைக்க வேண்டும் என்­பது அவர்­களின் அவ­ச­ர­மான எதிர்­பார்ப்­பாகும்.

அதே­வேளை, சிறைச்­சா­லை­களில் விசா­ர­ணை­களோ, குற்­றச்­சாட்­டுக்­களோ இல்­லாமல், தண்­டனை அனு­ப­விக்கும் வகையில் தடுத்து வைக்­கப்­பட்­டுள்­ள­வர்­களை அரசு விடு­தலை செய்ய வேண்டும் என்­பதும் அவர்­க­ளு­டைய எதிர்­பார்ப்பு.

புதிய ஜனா­தி­பதி ஒரு சில அர­சியல் கைதி­க­ளை­யா­வது விடு­தலை செய்து தனது நல்­லெண்­ணத்­தையும், தனக்கு வாக்­களித்த தமிழ் மக்­க­ளுக்­கான அர­சியல் நன்­றி­யு­ணர்வை வெளிப்­ப­டுத்­தி­யி­ருக்க வேண்டும் என்ற எதிர்­பார்ப்பும் அவர்­க­ளிடம் இருந்­தது.

புதிய ஜனா­தி­பதி தானாக அதனைச் செய்ய முன்­வ­ர­வில்லை. ஆனால் கூட்­ட­மைப்பின் தலை­மைகள் அவ­ரையும் புதிய அர­சாங்­கத்­தையும் அத்­த­கைய நகர்வை மேற்கொள்ளச் செய்­தி­ருக்­க­லாம்­தானே என்­பது மக்­களின் ஆதங்­க­மாக உள்­ளது.

யுத்த மோதல்கள் இடம்­பெற்ற காலத்­தி­லும்­சரி, யுத்தம் முடி­வ­டைந்­ததன் பின்­ன­ரான கடந்த ஆறு வருட காலத்­தி­லும்­சரி, தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்­பையே தமது அர­சியல் தலை­மை­யாக ஏற்­றுக்­கொண்டு அனைத்து தேர்­தல்­க­ளிலும் தமிழ் மக்கள், அதற்கு ஆத­ர­வாக வாக்­க­ளித்து வந்­துள்­ளார்கள்.

தமிழ் மக்­களின் ஒற்­று­மையை இலங்கை அர­சுக்கும் சர்­வ­தே­சத்திற்கும் தேர்­தல்­களின் காட்ட வேண்டும். அதன் ஊடாக பிரச்சினை­க­ளுக்குத் தீர்வு காண­மு­டியும் என்ற உறு­தி­மொ­ழியை – நம்­பிக்­கையை கூட்­ட­மைப்பு மக்­க­ளுக்கு ஊட்டி வந்­தது.

ஆனால் இது­வ­ரையில் அது நிறை­வேற்­றப்­ப­ட­வில்லை. அர­சியல் தீர்வும் சரி, அன்­றாடப் பிரச்­சி­னை­க­ளுக்­கான தீர்வும் சரி, தமிழ் மக்­களைப் பொறுத்­த­மட்டில் எட்­டாக்­க­னி­யா­கவே இருந்து வரு­கின்­றது.

ஆனால் காலத்­துக்குக் காலம் அந்­தந்த சந்­தர்ப்­பங்­க­ளுக்கு ஏற்ற வகையில் பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு கிடைத்­து­விடும் என்று தமிழ்த்­த­லை­வர்கள் அளிக்­கின்ற வாக்­கு­று­திகள் மாத்­திரம் முடி­வின்றி தொடர்ந்த வண்­ணமே இருக்­கின்­றன.

பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காணா­ததன் கார­ண­மாக மக்­களின் வாழ்க்­கையில் நெருக்­க­டி­களும் சிர­மங்கள் கஷ்­டங்­களும் நாளுக்கு நாள் அதி­க­ரித்துச் சென்று கொண்­டி­ருக்­கின்­றன.

இதனால் அவர்கள் அர­சியல் தலை­மைகள் மீதும், தலை­வர்கள் மீதும் நம்­பிக்கை இழக்­கின்ற நிலையை நோக்கி சரிந்து செல்ல வேண்­டிய அவல நிலைமை ஏற்­பட்­டி­ருக்­கின்­றது.

சிறு­பான்மை இன மக்­களை பல்­வேறு வழி­க­ளிலும் அடக்­கி­யொ­டுக்­கி­யி­ருந்த முன்னாள் ஜனா­தி­ப­தியின் ஆட்­சிக்­கா­லத்தில் அளிக்­கப்­பட்ட உறு­தி­மொழி மற்றும் நட­வ­டிக்­கை­களின் தொடர்ச்­சி­யா­கவே வலி­காமம் வடக்கில் இரா­ணு­வத்தின் பிடியில் உள்ள பிர­தே­சத்தில் இருந்து ஆயிரம் ஏக்கர் காணி­களில் இடம்­பெ­யர்ந்த மக்­களை மீள்­கு­டி­யேற்­று­வ­தற்­கான அனு­மதி வழங்­கப்­பட்­டது.

அது புதிய அர­சாங்­கத்­தி­னதோ அல்­லது புதிய ஜனா­தி­ப­தி­யி­னதோ முன்­னெ­டுப்பு நட­வ­டிக்கை அல்ல. ஆனால் அந்த நட­வ­டிக்கை புதிய அசாங்­கத்தின் செயற்­பா­டா­கவே காட்­டப்­ப­டு­கின்­றது.

கிழக்கு மாகா­ணத்தில் சம்பூர் காணி பிரச்­சி­னை­யும்­கூட, கடந்த அர­சாங்கக் காலத்தில் இருந்து மேற்­கொள்­ளப்­பட்டு வந்த தொடர் நட­வ­டிக்­கையே தவிர, புதிய ஜனா­திபதி அல்­லது புதிய அர­சாங்­கத்­தி­னதோ தன்­னிச்­சை­யான செயற்­பா­டல்ல.

இறுதி யுத்­தத்­தின்­போது, இடம்­பெற்ற மனித உரிமை மீறல்கள், மானு­டத்­திற்கு எதி­ரான மோச­மான நட­வ­டிக்­கைகள் குறித்து சர்­வ­தேச அளவில் ஒரு விசா­ரணை நடத்­தப்­படும். ஐ.நா .மனித உரிமைப் பேர­வையில் இது தொடர்பில் கொண்டு வரப்­பட்ட போர்க்­குற்ற பிரே­ர­ணை­களின் அடிப்­ப­டையில் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வை எட்­டக்­கூ­டிய வாய்ப்பு உள்­ளது என்று தமிழ்த் தலை­வர்கள் நம்­பிக்­கை­யூட்டி வந்­தார்கள்.

இலங்­கைக்கு எதி­ரான ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் தீர்­மா­னங்­களை இலங்கை அரச தரப்­பினர் கடு­மை­யாக எதிர்த்து வந்­துள்­ளார்கள்.

அந்தத் தீர்­மா­னங்­களின் அடிப்­ப­டை­யி­லான எந்த விசா­ர­ணை­யையும் ஏற்­றுக்­கொள்ளப் போவ­தில்லை என்­பது அவர்­களின் நிலைப்­பாடு. பதி­லாக உள்­ளக விசா­ர­ணைகள் நடை­பெ­று­கின்­றன.

வேண்­டு­மானால், உள்­ளக விசா­ர­ணை­களின் தரத்தை இன்னும் உயர்த்­தலாம் எனக் கூறி அதற்­கான நட­வ­­டிக்­கை­களை எடுப்­ப­தாகக் கூறி, பெய­ர­ள­வி­லான நட­வ­டிக்­கை­க­ளையே கடந்த அசாங்கம் மேற்­கொண்­டி­ருந்­தது.

புதிய ஜனா­தி­ப­தியும் சரி, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்­கவின் தலை­மை­யி­லான இந்த அரச தரப்­பி­ன­ரும்­சரி, போர்க்­குற்ற விவ­கா­ரத்தில் முன்­னைய அர­சாங்­கத்தின் அடி­யொட்­டியே செயற்­பா­டு­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

ஆனால், இலங்கை அர­சாங்­கத்தின் ஒத்­து­ழைப்­பின்­றியே, ஐ.நா. மனித உரிமைப் பேரவை நடத்­திய விசா­ர­ணையின் அறிக்கை கடந்த மார்ச் மாதம் மனித உரிமைப் பேர­வையில் வெளி­யி­டப்­பட இருந்­தது.

ஆனால், ஜன­வரி மாதம் நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் ஏற்­பட்­டி­ருந்த ஜன­நா­யக வெளியைப் பயன்­ப­டுத்தி புதிய நிலை­யான ஓர் அர­சாங்­கத்தை அமைப்­ப­தற்­கான பொதுத் தேர்­தலை நடத்த வேண்­டிய முக்­கி­ய­மான தேவை இருப்­ப­தனால், போர்க்­குற்ற விசா­ரணை அறிக்­கையை மனித உரிமைப் பேர­வையில் சமர்ப்­பிப்­பதை – வெளி­யி­டு­வதைப் பின்­போ­டு­மாறு புதிய அர­சாங்கம் ஐ.நா. மனித உரிமை ஆணை­யா­ள­ரிடம் கேட்­டி­ருந்­தது. அந்த கோரிக்­கை ஏற்­றுக்­கொள்­ளப்­பட்டு அது செப்டெம்பர் மாதத்­திற்குப் பின்­போ­டப்­பட்­டுள்­ளது.

சர்­வ­தேச விசா­ர­ணை­யொன்றின் ஊடாக முள்­ளி­வாய்க்­காலில் இடம்­பெற்ற அநி­யா­யங்­க­ளுக்கு நீதி கிடைக்கும். நிவா­ர­ணத்­துடன் கூடிய விமோ­சனம் கிடைக்கும் என்­ப­தற்கும் அப்பால், போர்க்­குற்ற விசா­ர­ணை­யொன்றின் விளை­வாக ஓர் அர­சியல் தீர்­வுக்கு வழி­கி­டைக்க வேண்டும் என்­பதே தமிழ் மக்­க­ளு­டைய முக்­கி­ய­மான எதிர்­பார்ப்­பாகும்.

அத்­த­கைய எதிர்­பார்ப்பை நிறை­வேற்­று­வ­தற்குக் கூட தமிழ் அர­சியல் தலை­மைகள் காத்­தி­ர­மான செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்­கவில்லை என்­பதே மக்­க­ளு­டைய கருத்­தாகும்.

முள்­ளி­வாய்க்­காலில் இடம்­பெற்ற அநி­யா­யங்­களை போர்க்­குற்றம் என்று வெளிப்­ப­டை­யாகக் குறிப்­பி­டு­வ­தற்கும் போர்க்­குற்றம் என்ற சொல்லைப் பயன்­ப­டுத்­து­வ­தற்­கும்­கூட, பண்­டிதர் நிலையில் இருந்து தமிழ்த் தலை­வர்கள் வாதங்­களை முன்­வைத்த போக்­கையே மக்கள் கண்­டார்கள்.

பல்­வேறு வழி­க­ளிலும் மோச­மான முறையில் பாதிக்­கப்­பட்­டுள்ள மக்­க­ளுக்கு நீதி­யையும் நிவா­ர­ணத்­தையும் விமோ­ச­னத்­தையும் பெற்­றுக்­கொ­டுக்க வேண்­டிய அர­சியல் தலை­மை­யொன்றின் செயற்­தி­ற­னற்ற தன்­மை­யையே இதன் மூலம் மக்கள் உணர்ந்து கொண்­டார்கள்.

இனப்­பி­ரச்­சி­னைக்குத் தீர்வு காண்­ப­தென்­பது, கல்லில் நார் உரிப்­பது போன்­ற­தொரு காரியம் என்­பதை மக்கள் நன்­க­றி­வார்கள். பேரி­ன­வா­தி­க­ளிடம் பேச்­சுக்கள் நடத்தி பிரச்­சி­னை­க­ளுக்குத் தீர்வு காண்­ப­தற்­கென அசாத்­தி­ய­மான அர­சியல் செயற்­பாட்டுத் திறன் அவ­சியம் என்­ப­தையும் அவர்கள் உணர்ந்­தி­ருக்­கின்­றார்கள்.

இதனை தமிழ் அர­சியல் தலை­மைகள் எந்த அள­விற்கு உணர்ந்­தி­ருக்­கின்­றன, அதற்கு ஏற்ற வகையில் எத்­த­கைய நட­வ­டிக்­கை­களை முன்­னெ­டுத்­தி­ருக்­கின்­றன என்­பது விடை கிடைக்­காத வினா­வா­கவே தொடர்ந்து கொண்­டி­ருக்­கின்­றது.

எதிர்ப்பு அர­சியல் போக்கில் இருந்து விலகி, இணக்க அர­சியல் அல்­லது நட்பு ரீதி­யான அர­சியல் அணு­கு­முறை என்று ஏதோ ஒரு வகையில் குறிப்­பி­டத்­தக்­கதோர் அர­சியல் அணு­கு­மு­றையின் கீழ் புதிய ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன, பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க அணி­யி­ன­ருக்கு நிபந்­த­னை­யற்ற ஆத­ரவை தமிழ்த்­தே­சிய கூட்­ட­மைப்பு வழங்கி வரு­கின்­றது.

நிச்­ச­ய­மாக இது சலு­கை­களைக் கேட்டுப் பெறு­வ­தற்­கான சலுகை அர­சியல் அணு­கு­மு­றை­யல்ல என்­பதை மக்கள் நன்­க­றி­வார்கள். ஆனால், இந்த அணு­கு­முறை பொதுத் தேர்­தலின் பின்னர் அமையப் போகின்ற அர­சாங்­கத்­திடம் எந்த அள­வுக்குப் பய­னுள்­ள­தாகத் தொடர்ந்து மேற்­கொள்­ளப்­பட முடியும் என்­பதில் பல சந்­தே­கங்கள் இருக்­கின்­றன.

பலரும் எதிர்­பார்த்­தி­ருக்கும் வகையில் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தலை­மை­யி­லான அணி­யினர் வெற்­றி­பெற்று ஆட்­சி­ய­மைத்தால், செப்டெம்பர் மாதம் போர்க்­குற்ற விசா­ரணை அறிக்கை ஐ.நா. மனித உரிமைப் பேர­வையில் வெளி­யி­டப்­ப­டு­கின்ற சூழலில் புதிய அர­சாங்கம் தமிழர் தரப்­பி­ன­ருடன் பேச்­சுக்கள் நடத்­து­கின்ற அள­வுக்கு நிலை­மைகள் கனிந்­தி­ருக்கும் என்று நம்­பு­வ­தற்­கில்லை.

ஐநா மனித உரிமைப் பேர­வையின் விசா­ரணை அறிக்­கை­யா­னது கடும் வார்த்தைப் பிர­யோ­கங்­களை உள்­ள­டக்­கி­ய­தாக அமைந்­தி­ருக்­கின்­றது என்று ஏற்­க­னவே தக­வல்கள் வெளி­யா­கி­யி­ருந்­தன.

ஆனால் தமிழ் மக்­க­ளுக்கு நன்மை பயக்­கத்­தக்க வகை­யி­லான கடு­மை­யான நிபந்­த­னைகள் அல்­லது நடை­மு­றைப்­ப­டுத்­தத்­தக்க வகை­யி­லான பரிந்­து­ரை­களை அது உள்­ள­டக்­கி­யி­ருக்­கின்­றதா என்­பது தெரி­ய­வில்லை.

அதே­நேரம் ஐ.நா. மனித உரிமைப் பேர­வையின் பரிந்­து­ரை­களை இலங்கை அர­சாங்கம் செயற்­ப­டுத்தத் தக்க வகையில் ஐ.நா . மன்­ற­மும்­சரி, சர்­வ­தேச நாடு­களும் சரி எந்த அள­வுக்கு அழுத்­தத்தைப் பிர­யோ­கிக்கப் போகின்­றன என்­பதும் கேள்­விக்­கு­றி­யாக இருக்­கின்­றது.

விடு­த­லைப்­பு­லி­க­ளுக்கு எதி­ரான யுத்­தத்தை வெற்­றி­க­ர­மாக முடி­வுக்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ ஜன­நா­யக விரோதப் போக்­கையும் மனித உரிமை மீறல் நட­வ­டிக்­கை­க­ளையும் கொண்­டி­ருந்த கார­ணத்­தி­னா­லேயே இந்­தியா உட்­பட சர்­வ­தேச நாடுகள் அவரை ஆட்­சியில் இருந்து அகற்ற வேண்டும் என்ற நோக்­கத்­துடன் ஜன­வரி மாதம் நடை­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் அதிக அக்­கறை கொண்டு செயற்­பட்­டி­ருந்­தன.

ஆனால் ஜனா­தி­பதி தேர்­தலின் மூலம் ஏற்­பட்­டுள்ள ஆட்சி மாற்­றத்­தை­ய­டுத்து, எழுந்­துள்ள திருந்­தி­ய­தொரு ஜன­நா­யக சூழலில் நடை­பெ­று­கின்ற ஆகஸ்ட் மாதப் பொதுத் தேர்தல் குறித்து இந்­தி­யாவோ சர்­வ­தேச நாடு­களோ ஜனா­தி­பதி தேர்தலின் போது காட்டிய ஆர்வத்தோடு செயற்படுவதாகக் காண முடியவில்லை.

இலங்கையில் ஒரு ஜனநாயக சூழல் ஏற்பட வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருந்த இந்தியாவும்சரி, சர்வதேச நாடுகளும் சரி, ஆட்சி மாற்றத்தைத் தொடர்ந்து தமிழ் மக்களுக்கான அல்லது சிறுபான்மை இன மக்களுக்கான இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்பட வேண்டும் என்பதில் ஆர்வம் கொண்டிருக்கின்றனவா என்பதும் சந்தேகமாகவே இருக்கின்றது.

அரசியல் தீர்வென்பது உள்நாட்டு விவகாரம். அந்தத் தீர்வை நோக்கிப் பயணிப்பதற்குரிய ஜனநாயக சூழல் இலங்கையில் நிலவுகின்றது. எனவே, அந்த சூழலில் அவர்கள் தங்கள் பிரச்சினைகளைத் தீர்த்துக்கொள்ளட்டும் என்று சர்வதேசம் தனது அலுவல்களில் மூழ்கிப் போய்விடக் கூடிய நிலைமைகளுக்கான வாய்ப்பே அதிகமாக இப்போது தென்படுகின்றது.

இத்தகைய ஒரு சூழலில் புதிய அரசாங்கம் ஆட்சி அமைத்ததும்,அடுத்த வருடம் 2016 ஆம் ஆண்டு இனப்பிரச்சினைக்கு ஓர் அரசியல் தீர்வு காணப்படும் என்று தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவர் ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ள கருத்து எந்த அளவுக்கு சாத்தியமானது என்பது கேள்விக்குரியது.

அதேபோன்று கூட்டமைப்பின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள வடக்கு, கிழக்கு இணைந்த தமிழர் தாயகம், சுயநிர்ணயம், பகிர்ந்தளிக்கப்பட்ட இறைமையின் அடிப்படையிலான அதியுச்ச அதிகாரப்பகிர்வைக் கொண்ட அரசியல் தீர்வு எந்த வகையில் முன்னெடுக்கப்படலாம் என்பதும் தெளிவற்றதாக உள்ளது,

வடக்கு, கிழக்கு நீதிமன்ற உத்தரவொன்றின் மூலம் இரண்டாகப் பிரிக்கப்பட்டு தனித்தனி மாகாணங்களாகச் செயற்பட்டு வருகின்றன. இந்த மாகாணங்கள் இணைக்கப்பட வேண்டும் என்று கூறப்படுகின்றதே, தவிர அவற்றின் இணைப்புக்கான நடவடிக்கைகள் எதையாவது தமிழ்த்தலைவர்கள் மேற்கொண்டதாகத் தெரியவில்லை.

இத்தகைய பல்வேறுபட்ட பின்னணியில் தமிழ் மக்களின் முழுமையான நம்பிக்கையைப் பெற்றால் மட்டுமே இந்தத் தேர்தலில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு, அதன் எதிர்பார்ப்புக்கு ஏற்ப 20 ஆசனங்களைக் கைப்பற்ற முடியும். இந்தத் தேர்தல் பரப்புரை காலத்தில் தமிழ் மக்கள் மத்தியில் அந்த நம்பிக்கையை அது எவ்வாறு பெறப்போகின்றது என்பது தெரியவில்லை.

இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காணப்­பட வேண்டும் என்­பது தமிழ் மக்­களின் மிகப்­பெ­ரிய எதிர்­பார்ப்­பாகும். ஆனால் அத்­த­கைய ஒரு தீர்வை இல­குவில் அடைய முடி­யாது.

இனப்­பி­ரச்­சி­னையைத் தீர்ப்­ப­தற்கு தென்­ப­கு­தியைச் சேர்ந்த பேரின அர­சி­யல்­வா­திகள் தயா­ராக இல்லை என்­பதை தமிழ் மக்கள் நன்­க­றி­வார்கள்.

பேரி­ன­வா­தி­க­ளிடம் இனப்­பி­ரச்­சி­னைக்கு ஓர் அர­சியல் தீர்வு காண்­ப­தென்­பது, குதி­ரையைத் தண்ணீர் குடிக்கச் செய்­வ­தற்கு ஒப்­பான காரியம் என்­பதை தமிழ் மக்கள் நன்கு தெரிந்து வைத்­தி­ருக்­கின்­றார்கள்.

Share.
Leave A Reply

Exit mobile version