அமெரிக்காவின் வாஷிங்டன் பகுதியைச் சேர்ந்த அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் மூன்று வயது சிறுமியுடன் விளையாடிக் கொண்டிருந்த சிறுவனுக்கு எதிர்பாராத விதமாக அங்கே ஒரு துப்பாக்கி கிடைத்தது.
நிஜ துப்பாக்கி என அறியாத அந்த சிறுவன் விளையாட்டாக சுட்டதில் டேலிஸ் காக்ஸ் என்ற மூன்று வயது குழந்தை பலியானது.
டேலிஸ் நேற்று முன்தினம் மாலையில் தனது அடுக்குமாடி குடியிருப்பில் பெரியவர்கள் யாருமின்றி ஏழு வயது சிறுவனுடன் விளையாடிக் கொண்டிருந்ததாக தெரிகிறது.
அப்போது, இரண்டு முறை துப்பாக்கிக் குண்டு வெடித்த சப்தத்தை கேட்ட அக்கம்பக்கத்து வீட்டினர் ஓடிவந்து ரத்த வெள்ளத்தில் துடித்த டேலிஸை ஆம்புலன்ஸுக்காக காத்திருக்காமல் தாமே அழைத்துச் சென்றுள்ளனர்.
எனினும், டேலிஸ் சிகிச்சைப் பலனின்றி மருத்துவமனையில் பலியானார்.
போலீசார் உரிமம் இல்லாத துப்பாக்கி, அங்கே எப்படி வந்தது என்பது குறித்து விசாரித்து வருகின்றனர். அது எப்படி சிறுவன் கையில் கிடைத்தது, என்பது குறித்து எவ்வித தகவல்களும் இல்லை.
இந்தத் துப்பாக்கியை வைத்திருந்தவர் கண்டுபிடிக்கப்பட்டால், கைது செய்யப்படுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
டேலிஸ் தனது தாயாருடனும், அவரது உடன்பிறந்தவர்களுடனும் அந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்தார்.
சம்பவத்தன்று டேலிஸின் தந்தை அவரை சந்திக்க வந்தபோது உடன்வர ஆசைப்பட்டார் என தெரிகிறது.