பெண்கள் வீனஸ் கிரகத்திலிருந்தும், ஆண்கள் செவ்வாய் கிரகத்திலிருந்தும் இருந்து வந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது.

பெண்கள் எப்போதும் தங்கள் எண்ணங்களை பகிர்ந்து கொள்ள தயாராக இருக்கிறார்கள்; அதே சமயம் ஆண்கள் அவ்வாறு இருப்பதில்லை.

குறிப்பாக பெண்களால் ஒரு ரகசியத்தை வைத்திருப்பது சாத்தியம் இல்லாதது. அவர்கள் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள முனைகின்றனர்.

ஏன் அப்படி? அதற்கான காரணத்தை அறிந்து கொள்ள நாம் மகாபாரத காலத்தை நோக்கி பின்னோக்கி செல்ல வேண்டும். பெண்களால் ஏன் ரகசியங்களை வைத்துக் கொள்ள முடியாது என்பதை மகரிஷி வேத வியாசர் கூறியுள்ளார்.

17-1437122512-1kunti

யுதிஷ்டரின் சாபம்
(மகாபாரதம் சம்பவம்) குருசேத்திர போருக்கு பிறகு யுதிஷ்டர், கர்ணன் மற்றும் தன் அன்புக்குரியவர்கள் அனைவரின் இறுதி சடங்குகளையும் செய்தார். இந்த சமயத்தில் கர்ணன் தன் தம்பி என்பதை குந்தி வாயிலாக அறிந்த யுதிஷ்டர் மிகவும் ஆத்திரமுற்று பெண்களால் எந்த ரகசியத்தையும் வைத்துக் கொள்ள முடியாது என்று அனைத்துப் பெண்களையும் சபித்தார்.

இயற்கையின் ஆர்வம்
பிரிட்டிஷ் தோல் நிறுவனம் ‘சிம்பிள்”, ஒரு ஆய்வில் பெண்களால் எந்த ஒரு ரகசியத்தையும் 32 நிமிடங்களுக்கு மேல் வைத்திருக்க முடியாது என காட்டியுள்ளது. ரகசியத்தை காப்பது ஏன் மிகவும் கடினமாக உள்ளது? அதற்கு பல காரணங்கள் இருக்கின்றன. அதற்கு மிக முக்கியமான காரணம் மக்களின் இயல்பான ஆர்வம். பெண்கள் மட்டும் இல்லை, ஆண்களும் தான். எனினும் மற்றவர்களின் இழிவான வாழ்க்கை பற்றியது என்றால் பெண்களின் ஆர்வம் மேலும் அதிகரித்து விடுகிறது.

ஈகோ பூஸ்ட்
மற்றவர்கள் பிரத்யேகமாக உணர பெண்கள் ரகசியங்களை கொடுக்க முனைகிறார்கள். ரகசியங்கள் பிரத்யேகமாக இருப்பதால், அவை கவர்ச்சியாகவும் இருக்கும். மற்றவர்கள் அறியாத பல விஷயங்களை நாம் அறிந்திருக்கும் போது மற்றவர்கள் முன் அவர்களை சூப்பர் கூலாக உணர முடியும்.

கவனத்தை ஈர்த்தல்
பெண்கள் மற்றவர்களின் கவனம் தன் மீது இருக்க வேண்டும் என்று நினைக்கும் போது தகவல்களை வெளிப்படுத்த முனைகிறார்கள். நீங்கள் இதனை முகநூலில் கவனிக்க முடியும். உதாரணமாக பெண்கள் ரகசிய பதிவுகளை ஏன்? என்ன? என்ன தவறு? போன்ற பதில்களுக்காக பதிவிட முனைகின்றனர்.

மன சுமை
டஃப்ட்ஸ் பல்கலைக்கழகத்தில் ஆராய்ச்சியாளர்கள், பெண்கள் ரகசியங்களை வெளியே கொட்ட காரணம், அவர்களின் மன சுமையே என்றும், அவர்கள் வெறுமனே இவ்வாறாக செய்வதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
ஆண்களும் தான்
பெண்கள் மட்டுமில்லை, ஆண்களும் ரகசியங்களை வெளிப்படுத்துகின்றனர். ஆண்களைப் பொறுத்த வரை ரகசியங்களை வெளிப்படுத்த மது உதவுவதாக ஆய்வுகள் கண்டுபிடித்துள்ளன. பெரும்பாலான ஆண்கள் குடிபோதையில் ரகசியங்களை வெளிப்படுத்துகின்றனர்.
Share.
Leave A Reply

Exit mobile version