போதையில் ஆட்டோ டிரைவரை, போலீஸ்காரர் ஒருவர் மதுபாட்டிலால் குத்திக் கொன்ற கொடூர சம்பவம் நெல்லை மாவட்டம், ஆலங்குளம் அருகே நடந்துள்ளது.

ஆலங்குளத்தை அடுத்த நெட்டூரை சேர்ந்தவர் இசக்கிமுத்து. ஆட்டோ டிரைவரான இவர், அடிக்கடி மதுக்குடித்து விட்டு மதுபாட்டில்களை பொறுக்கி எடுத்து செல்வது உள்ளிட்ட தொழிலையும் செய்து வந்தார்.

இன்று வழக்கம் போல் மதுகுடிக்க ஆலங்குளத்தில் உள்ள ஒரு டாஸ்மாக் கடைக்கு இசக்கிமுத்து சென்றுள்ளார். அங்கு சுரண்டையில் இரண்டாம் நிலை காவலராக சண்முகசுந்தரம் என்பவரும் மனு குடித்துள்ளார். அருகருகே அமர்ந்து மதுக்குடித்த இருவரும் போதை தலைக்யெறியதும், வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இந்த வாக்குவாதம் கைகலப்பாக மாறியுள்ளது.

போதையில் இருந்த காவலர் சண்முக சுந்தரம், இசக்கிமுத்துவை மதுபாட்டிலால் குத்தி படுகொலை செய்தார். பின்னர் ஆலங்குளம் காவல் நிலையத்தில் சண்முகசுந்தரம் சரணடைந்தார். அவரிடம் காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மதுவை ஒழிக்க போராடிய காந்தியவாதி சசிபெருமாள் மறைந்த சோகம் மறைவதற்குள்ளாக காவலர் ஒருவரே மதுப்போதையில் டாஸ்மாக் கடை உள்ளே வைத்து ஆட்டோ டிரைவரை கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version