இன்று நண்பர்கள் தினம். பேஸ்புக், டிவிட்டரில் எங்கு பார்த்தாலும் நட்புப் பகிர்வுகள், பதிவுகள் தடபுடலாக காட்சி தருகின்றன.
பிசிராந்தையார் நட்பெல்லாம் இன்று இல்லை. இருந்தாலும் இன்றும் கூட நட்பு ஈரததோடும், ஈர்ப்போடும் இருக்கத்தான் செய்கிறது. எல்லாவற்றிலும் எல்லாமும் எதிர்பார்க்கும் மனிதர்கள், நட்பில் மட்டும்தான் எதையும் எதிர்பார்க்காமல் உள்ளன்போடு பழகுகிறார்கள் – அப்படிப் பழகினால்தான் அது நட்பு.

நட்பைப் பாடி வைத்த நாடு இது. நட்பைப் போற்றிப் புகழ்ந்த நாடு இது. நட்புக்காக உயிர் விட்டவர்கள் வாழ்ந்த நாடு இது. ஆணும், பெணும் உடல் தொட்டுக் கொள்ளாமல் உள்ளம் தொட்டு உறவாடி உயிர்ப்போடு நட்பாக இருக்கலாம் என்று சொன்ன பாடல் இது.

https://youtu.be/1iS4a_gGNb0

தோள் கொடுப்பான் தோழன்.. நண்பனுக்காக உயிரையும் கொடுப்பான் தோழன் என்பதைச் சொன்ன நவீன மகாபாரதம் இது..!

 

அன்பு, கடமை, பாசம், நேசம், காதல் என பல உணர்வுகளால் நட்பைப் பாராட்டிய படம் இது.. பாடல் இது.

https://youtu.be/nKYQZSvtINk

 

நல்ல தோழமைக்கு பால் பேதம் உண்டா… இந்த நட்புக்கும் ஆண், பெண் பேதம் கிடையாது.. அழகிய நட்பின் அருமையான தருணத்தை வெளிப்படுத்தும் பாடல் இது

https://youtu.be/wQptB61nNXg

உன்னைப் போல ஒரு நண்பனை இனி நான் காண முடியுமா.. என்ற எண்ணம் இந்தப் பாடலைக் கேட்கும்போது ஒவ்வொரு உயிர் நண்பர்களுக்குள்ளும் எழும்.

அந்தக் காலம் போல வருமா.. அக்காலத்து நட்பைப் போல வருமா.. அந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே.. உருக வைக்கும் உணர்வுப்பூர்வமான பாடல் இது.

நட்பைப் போற்றுவோம்.. கூடவே நட்பு நலமாக இருக்கவும் பாடுபடுவோம்.
Share.
Leave A Reply

Exit mobile version