பான் கீ மூனின் பேச்­சாளர் தெரி­விப்பு

ஐ.நா.வின் எந்தத் திட்­டமும், இலங்கை அர ­சாங்கம், வடக்கு மாகா­ண­சபை மற்றும் சம்­பந்­தப்­பட்ட எல்லாத் தரப்­பி­ன­ரதும், ஆலோ­ச­னை­யு­ட­னேயே நடை­மு­றைப்­ப­டுத்­தப்­படும் என்று ஐ.நா. பொதுச்­செ­ய­லரின் பேச்­சாளர் ஸ்டீபன் டுஜாரிக் தெரி­வித்­துள்ளார்.

நியூ­யோர்க்கில் நேற்­று­முன்­தினம் இடம்­பெற்ற செய்­தி­யாளர் மாநாட்டில், போர்க்­குற்­றங்கள் தொடர்­பாக உள்­நாட்டில் பொறுப்­ புக்­கூ­று­வது குறித்து இலங்கை அர­சாங்­கத்­துக்கும் ஐ.நா.வுக்­கு­மி­டையில் இணக்­கப்­பாடு ஏற்­பட்­டுள்­ள­தாகக் கசிந்­துள்ள ஆவ ணம் தொடர்­பில் ஐ.நா. பொதுச்­செ­ய­லரின் பேச்­சா­ள­ரிடம் கேள்வி எழுப்­பப்­பட்­டது.

இது­கு­றித்த கேள்­வி­க­ளுக்குப் பதி­லளித்த, ஐ.நா. பொதுச்­செ­ய­லரின் பேச்­சாளர் ஸ்டீ பன் டுஜாரிக், “இலங்கை அர­சாங்கம் மற் றும் இலங்கை மக்­களின் நல்­லி­ணக்கம் மற்றும் பொறுப்­புக்­கூறல் செயற்­பாட்­டுக்கு ஐ.நா. ஆத­ர­வ­ளிக்­கி­றது.

இது­தொ­டர்­பாக, வடக்கு மாகாண முத­ல­மைச்­சரின் வேண்­டு­கோளின் அடிப்­ப­டையில், தொழில்­நுட்ப மற்றும் நிதி உதி­வி­களை வழங்­கு­வ­தற்கும், வடக்கு மாகா­ணத்தில் பொது­மக்கள் மத்­தியில் நம்­பிக்கை மற்றும் அமைதி செயல்­மு­றை­களை ஊக்­கு­விக்­கவும், பரந்த உதவிப் பொதி ஒன்றை வழங்­கு­வது குறித்து ஆராய்ந்து வரு­கிறோம்.

இடம்­பெ­யர்ந்த மக்­களை மீளக்­கு­டி­யேற்­றுதல், தேசிய நல்­லி­ணக்கம், மனித உரிமை பொறி­மு­றையை வலுப்­ப­டுத்தல், தண்­ட­னை­களில் இருந்து தப்­பித்­தலை முடி­வுக்குக் கொண்டு வருதல் போன்­ற­வற்றின் மூலம், இலங்­கையில் நல்­லி­ணக்கச் செயன்­மு­றை­களை முன்­னேற்­று­வ­தற்­கான, அமை­தியைக் கட்­டி­யெ­ழுப்பும் நிதி­யத்தை உரு­வாக்­கு­வது குறித்து இன்­னமும் கலந்­து­ரை­யா­டப்­ப­டு­கி­றது.

ஐ.நா.வின் உத­விகள் எப்­போ­துமே, எல்லாப் பங்­கா­ளர்­க­ளி­னதும், பங்­கேற்பு ஆலோ­ச­னை­க­ளையே அடிப்­ப­டை­யாக கொண்­டவை.

எனக்குத் தெரிந்­த­வ­ரையில், மீள்­கு­டி­யேற்றம் மற்றும் வடக்கு. கிழக்கில் இலங்கை அர­சாங்­கத்­தினால் கைப்­பற்­றப்­பட்டு மீள­ளிக்­கப்­பட்ட நிலங்­களில் மக்­களை மீள ஒருங்­கி­ணைக்கும் முயற்­சி­க­ளுக்கு, ஆத­ரவு வழங்கும் வகையில், ஏற்­க­னவே 1 மில்­லியன் டொலர் செல­வி­டப்­பட்­டுள்­ளது.

மேலும், இலங்கை அர­சாங்கம், வடக்கு மாகா­ண­சபை மற்றும் எல்லாப் பங்­கா­ளர்­க­ளு­டனும், ஐ.நா. உதவி தொடர்­பாக நாம் தொடர்ந்து கலந்­து­ரை­யா­டல்­களை நடத்தி வரு­கிறோம்.

இலங்­கையில் நாம் நடை­மு­றைப்­ப­டுத்தும் திட்­டங்கள். வெளிப்­ப­டை­யா­ன­தா­கவும் இலங்கை அர­சாங்கம் மற்றும் வடக்கு மாகா­ண­ச­பையின் ஆத­ரவு பெற்­ற­தா­கவும் இருக்க வேண்டும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்.

சர்வதேச விசாரணை – உள்நாட்டு அல்லது அனைத்துலக விசாரணையை வலியுறுத்தப் போகிறதா என்று ஐ.நா. மனித உரிமை ஆணையாளரின் அறிக்கை மற்றும் பரிந்துரைகளுக்காக காத்திருக்கிறோம். அதனைப் பொறுத்தே முடிவுகள் எடுக்கப்படும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

Share.
Leave A Reply

Exit mobile version