இந்தோனேசியாவின் ஜாவா தீவின் மத்தியில் அமைந்துள்ளது, கோழி வடிவிலான மிகப்பெரிய சர்ச். இது வருடந்தோறும் பல நாடுகளிலிருந்து வரும் நூற்றுக்கணக்கான பயணிகள் மற்றும் பக்தர்களால் பார்வையிடப்பட்டு வருகிறது.
டேனியல் ஆலம்ஸ்ஜா என்பவரின் தலைமையில் சுற்றியுள்ள 30 கிராம மக்களின் உதவியுடன் 1990 ல் இது கட்டப்பட்டது. இதற்காக அவர் 3000 சதுர மீட்டர் நிலம் வாங்கினார்.
அதில் 4 ஆண்டுகளாக 2 மில்லியன் ரூபாய் செலவில் இந்த சிக்கன் சர்ச் கட்டப்பட்டுள்ளது. கீழிருந்து பார்ப்பதற்கு மலைமீது ஒரு ராட்சத கோழி நிற்பது போலவே காட்சியளிக்கிறது. சிக்கன் சர்ச் கட்டப்பட்டதுக்கான காரணம், கடவுளின் கட்டளை என்று டேனியல் கூறுகிறார்.
இந்த சர்ச்சின் மேல்தளத்தில்தான் பிரார்த்தனை கூடம் இருந்துள்ளது. 2000 ம் ஆண்டில் இருந்து இது அடைக்கப்பட்டுள்ளது. தற்பொழுது முழுவதுமாக பராமரிப்பு கைவிடப்பட்டுள்ளது. இதில் உள்ள பல பகுதிகள் பாழடைந்து காணப்படுகின்றன.
ஒருகாலத்தில், மாற்றுத்திறனாளி குழந்தைகள், போதைக்கு அடிமையானவர்கள், நோயாளிகள் என்று பலர் இங்கு வந்து நலமடைந்து புத்துணர்வு பெற்றுச் சென்றதாகவும் சொல்லப்படுகிறது.
இதில் படுக்கையறை போல 15 அறைகள் உள்ளன. 3 குளியலறைகளும் உள்ளன. உள்ளே அனுமதிக்கப்படாத பூட்டப்பட்ட ஒரு வரண்டாவும் உள்ளது.
இந்த சர்ச்சின் சில பகுதிகள் கட்டும்போதே நிறைவு செய்யப்படாமலும் அப்படியே விடப்பட்டுள்ளது. அதுக்கான காரணம் புதிராகவே உள்ளது.
சர்ச்சின் சுவர்களில் அங்கு வரும் குறும்பான இளைஞர்களால் தகாத வாசகங்கள் எழுதப்பட்டும் பெண்களின் நிர்வாணப் படங்கள் வரையப்பட்டும் உள்ளதிலிருந்தே அதன் பராமரிப்பு நிலை விளங்கும்.
இந்த மலையை சுற்றி அடர்ந்த காடுகள் இருப்பதால் இங்குவரும் இளம் ஜோடிகள் காம களியாட்டங்களும் நடத்துகின்றனர். சமீப காலமாக இந்த சர்ச் உலகம் முழுதும் அறியப்பட்டு வருவதால் சுற்றுலாப் பயணிகளின் கவனத்தை ஒரு புதிராகவே ஈர்த்துள்ளது.