சீனாவின் சான்ஜியாஜி தேசியப் பூங்காவில் உலகின் மிக உயரமான கண்ணாடி பாலம் ஒன்று அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த கண்ணாடி பாலம் உயரமான பகுதியில் இருப்பதோடு, மிக நீளமானதாகவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
கண்ணாடி பாலம்
இரண்டு இரும்பு உத்திரங்கள் மீது கண்ணாடியால் நடைபாதை அமைக்கப்பட்டிருக்கிறது. இது இரும்பு கம்பிகளின் மூலம் இணைப்பு பெற்ற தொங்குபாலமாகவும் இருக்கிறது.
நீளமான கண்ணாடி பாலம்
இந்த பாலம் 1,410 அடி நீளமும், 984 அடி உயரத்தில் தொங்கும் வகையில் உருவாக்கியிருக்கின்றனர்.
டிசைனர்
இஸ்ரேல் நாட்டை சேர்ந்த பிரபல கட்டிட கலை நிபுணர் ஹெய்ம் டோட்டன் இந்த பாலத்தை வடிவமைத்துள்ளார். எடை தாங்கும் வசதி இந்த கண்ணாடி பாலத்தில் ஒரே நேரத்தில் 800 பேர் வரை நிற்க முடியும்.
இந்த கண்ணாடி பாலத்தை பேஷன் ஷோ நடத்துவதற்கான மேடை போன்றும் பயன்படுத்த முடியும் என்று ஹெய்ம் தெரிவித்துள்ளார்.