முப்­பது வரு­டங்­களுள் எத்­த­னையோ இழப்­பு­களைச் சந்­தித்து தற்­போது எமது போராட்டம் சர்­வ­தேச மயப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும் நிலையில் மீண்டும் பின்­னோக்கிச் செல்­ல­மு­டி­யாது.

எமது தாய­கத்­திற்­கான தீர்வு இந்த மண்­ணி­லேயே உள்­ளது. அதனை நாம் வெளி­நா­டு­களில் தேட­மு­டி­யாது. அதை நோக்­கிய பய­ண­மாக எமது தரப்பு செயற்­ப­டு­மென ஜன­நா­யகப் போரா­ளிகள் அமைப்பின் ஊட­கப்­பேச்­சா­ளரும் அக்­கட்­சியின் யாழ். மாவட்ட வேட்­பா­ள­ரு­மான கணே­ச­லிங்கம் சந்­தி­ர­லிங்கம் (துளசி) தெரி­வித்தார்.

கேள்வி :- தமி­ழீழ விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பு உரு­வான காலம் முதல் தனித் தமி­ழீ­ழமே இலக்கு என்ற நிலைப்­பாட்­டி­லி­ருந்த அவ்­வ­மைப்பின் உறுப்­பி­னர்கள் ஜன­நா­யகப் போரா­ளிகள் அமைப்பின் ஊடாக ஜன­நா­யக அர­சி­யலில் பிர­வே­சிக்­க­வேண்டும் என்ற தீர்­மா­னத்தை எடுத்­த­மைக்­கான காரணம் என்ன?

பதில் :- எமது மக்­களின் அவ­லமே காரணம். ஒவ்­வொரு யுத்­தத்­திலும் நாம் அடைந்த வெற்­றிகள் பல. அதனை கொண்­டா­டி­யி­ருக்­கின்றோம். அந்த கொண்­டாட்­டங்­களின் போது எமது மக்கள் அடைந்த பொரு­ளா­தார இழப்­புக்கள், உயி­ரி­ழப்­புக்கள் தொடர்­பாக பாரிய அளவில் வெளியில் தெரி­யாத நிலையே இருந்­தது. இறுதி யுத்­தத்தைத் தவிர ஏனை­ய­வற்றை மிகச் சரி­யாக செய்­தி­ருந்தோம்.

விடு­த­லைப்­பு­லிகள் நேர­கா­லத்­துடன் நேர­டி­யாக ஜன­நா­யக அர­சி­யலில் ஈடு­பட்­டி­ருந்தால் எவ்­வ­ளவோ இழப்­புக்­களை தவிர்த்­தி­ருக்க முடியும். தற்­போ­தைய நிலையில் நாம் கொள்­கையின் அடிப்­ப­டையில் நிலை­யாக இருக்­கின்றோம் என்ற செய்­திக்­காக எமது மக்­களை பிரச்­சி­னைக்குள் கொண்டு செல்­ல­மு­டி­யாது. கொள்­கையின் அடிப்­ப­டையில் இலக்­குகள் தீர்­மா­னிக்­கப்­பட்­டி­ருந்­தாலும் அதனை அடைந்து கொள்­வ­தற்­காக அவ்­வி­லக்கு நோக்கி சுற்­றிப்­ப­ய­ணிக்க வேண்­டி­யுள்­ளது.

2001ஆம் ஆண்டு அண்ணன் (வே.பிர­பா­கரன்) பேச்­சு­வார்த்­தைக்கு இணங்கிச் செல்­லும்­போது தமி­ழீழம் தான் முடிந்த முடிவு என பேச்­சு­வார்த்தை நிகழ்ச்சி நிரலில் ஏற்­ப­டுத்­தப்­ப­ட­வில்லை. அக்­கா­லப்­ப­கு­தியில் எம்­மிடம் இவ்­வா­றான கேள்­வி­யொன்றை எவ­ருமே கேட்­க­வில்லை.

முப்­பது வருட போராட்­டத்தில் நாம் நேர­டி­யாக யுத்­தத்தில் பங்­கு­பற்­றி­ய­வர்கள் என்­பதை விட எம்­மோடு இணைந்து செயற்­பட்ட வட­கி­ழக்கு மக்கள் பொரு­ளா­தாரம், அடிப்­ப­டைக்­கட்­டு­மா­னங்கள், முற்­றாக சிதைந்து போயுள்­ளன. வன்­னியைப் பொறுத்­த­வ­ரையில் இழப்­புக்கள் இல்­லாத வீடு­களே இல்லை. 12ஆயிரம் போரா­ளிகள் பாது­காப்­பின்றி இருக்­கின்­றார்கள். இதனால் மிகப்­பா­ரிய தலை­முறை இடை­வெ­ளி­யொன்று ஏற்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளது.

இந்த நிலையில் வீம்­பாக நின்று எமது மக்­களை ஏமாற்ற நாம் தயா­ரில்லை. எங்­களால் உரு­வாக்­கப்­பட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உட்­பட ஏனைய அர­சியல் கட்­சிகள் மக்­களை வெறு­மனே உசுப்­பேற்­றி­வி­டு­வதால் எத­னையும் செய்ய முடி­யாது. அதே­நேரம் அபி­வி­ருத்­தியை மட்டும் இலக்கு வைத்து செயற்­பட்ட கட்­சி­களும் தோல்­வி­ய­டைந்­ததே வர­லா­றா­க­வுள்­ளது. தீர்வு நோக்­கிய பய­ணத்­தின்­போது எமது சமூ­கத்தின் பொரு­ளா­தார கட்­ட­மைப்பு பலம் வாய்ந்­த­தாக சம­த­ளத்தில் பய­ணிக்க வேண்­டிய இலக்கு நோக்கி நகர்­வதை நோக்­காக கொண்டே எமது பிர­வேசம் அமைந்­துள்­ளது.

கேள்வி :- தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை தமி­ழீழ விடு­தலைப் புலிகள் ஒருங்­கி­ணைத்­த­மைக்­கான காரணம் என்ன?

பதில் :- மூன்றாம் கட்ட ஈழப்­போரை நிறைவு செய்து வெற்றி பெற்ற பலம்­பொ­ருந்­தி­ய­வர்­க­ளாக இருக்­கும்­போது சர்­வ­தேசம் பேச்­சு­வார்த்­தைக்­காக எம்மை அழைத்­தது. 2001ஆம் ஆண்டு மல்­லா­விக்கு வருகை தந்­தி­ருந்த நோர்வே தூதுவர் எரிக்­சொல்ஹெய்ம், யசூசி அகாசி ஆகியோர் எம்­மீ­தான ஒரு குற்­றச்­சாட்­டாக விட­ய­மொன்றை முன்­வைத்­தனர். அதா­வது, அனைத்து கட்­ட­மைப்­புக்கள் காணப்­பட்­டாலும் ஜன­நா­யக ரீதி­யாக உங்­க­ளு­டைய பேச்­சு­வார்த்­தையை முன்­னெ­டுக்க வேண்­டு­மாக இருந்தால் ஏனைய தமிழ் கருத்­தி­யல்­க­ளுக்கு சந்­தர்ப்பம் அளிக்­க­வேண்டும் எனக் கூறி­யி­ருந்­தனர்.

அத­ன­டிப்­ப­டை­யாக வைத்து சிரேஷ்ட ஊட­க­வி­ய­லாளர் தராக்கி சிவ­ராமின் பங்­க­ளிப்பு யுக்தி முக்­கி­ய­மா­னது. அவர் முக்­கிய விட­யத்தை கூறினார். அதா­வது, அண்ணன் (வே.பிர­பா­கரன்), பல­மில்­லா­தி­ருந்த தமிழ் அர­சியல் தலை­மை­களை மூத்த அர­சி­யல்­வா­தியை தலை­மை­யாக வைத்து உங்­க­ளு­டைய குர­லாக ஒருங்­கி­ணைக்க வேண்டும். அதன் பின்னர் சர்­வ­தே­சத்­திற்கு அர­சியல் ரீதி­யாக இவ்­வா­றான அமைப்­பொன்றை வைத்­தி­ருக்­கின்றோம் என கூற­மு­டியும் எனக் குறிப்­பிட்டார். அதன் அடிப்­ப­டை­யி­லேயே தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பு உரு­வக்­கப்­பட்­டது. எமது அர­சியல் பணி­க­ளுக்­காக தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பை உரு­வாக்­க­வில்லை. சர்­வ­தேச ரீதியில் சில விட­யங்­களை கூறு­வ­தற்­கா­கவே அவர்­களை உரு­வாக்­கினோம்.

கேள்வி :- அவ்­வா­றி­ருக்­கையில் இந்தப் பாரா­ளு­மன்ற தேர்­தலில் கள­மி­றங்க வேண்டும் என்ற தீர்­மானம் எடுத்­த­மைக்­கான காரணம் என்ன?

பதில் : இதில் ஒரு விட­யத்தை நாம் கவ­னத்தில் கொள்ள வேண்டும். தற்­போது தென்­னி­லங்­கையில் குழப்­ப­க­ர­மான சூழல் காணப்­ப­டு­கின்­றது. நிச்­ச­ய­மாக யாரும் பெரும்­பான்மை பலம்­பெ­ற­மு­டி­யாத நிலை­மை­யொன்று காணப்­ப­டு­கின்­றது. தொங்கு பாரா­ளு­மன்­ற­மொன்று அமை­வ­தற்­கான சூழலே காணப்­ப­டு­கின்­றது.

தென்­னி­லங்­கையில் பலம் பெற்ற அமைப்­புக்கள் உரு­வாக்­கப்­ப­டு­மா­க­வி­ருந்தால் இங்கு பேரம்­பேசும் சக்­தி­க­ளையே அவர்கள் தீர்­மா­னிக்­க­வி­ரும்­பு­வார்கள். இங்கு விலை­போகும் அர­சியல் தலை­மை­க­ளுடன் இணைந்து செய­லாற்­றவும் தெற்கு தயா­ராவே உள்­ளது. ஆனால் தற்­போது அதனை தீர்­மா­னிக்க முடி­யாத நிலையில் தெற்கு தளம்­ப­ல­டைந்­துள்­ளது. ஆகவே நாம் பிர­வே­சிப்­ப­தற்கான தக்க தருணம் இதுவே.

கேள்வி :- -தமி­ழீழ விடு­தலைப் புலி­களின் ஆயுத ரீதி­யி­லான விடு­த­லைப்­போ­ராட்டம் தோற்­க­டிக்­கப்­பட்­ட­மைக்­கான பிர­தான காரணம் என்ன?

பதில் :- 2001ஆம் ஆண்டு உல­கத்தின் ஒழுங்கில் பாரிய மாற்றம் ஏற்­பட்­டது. உரி­மைக்­காக போரா­டிய இயக்­கங்கள், தாய­கத்­திற்­காக போரா­டிய அமைப்­புகள் ஆகி­யவை அமெ­ரிக்­காவில் இடம்­பெற்ற இரட்­டைக்­கோ­புர தாக்­கு­தலின் பின்னர் தடை­செய்­யப்­பட்­டன. அந்த உலக ஒழுங்­கின்­படி பங்­க­ர­வாத அமைப்­புக்­க­ளாக கருதி தடை­செய்­யப்­பட்­ட­தற்கு எதி­ராக அந்தந்த நாடு­களின் அர­சுகள் முன்­னெ­டுத்த போராட்­டங்­க­ளுக்­காக சர்­வ­தே­சத்தின் உதவி தேவைக்கு அதி­க­மாக வழங்­கப்­பட்­டது. எத்­த­னையோ யுத்த தந்­தி­ரோ­பா­யங்­களை கொண்­டி­ருந்­தாலும் சர்­வ­தே­சத்­துடன் போரி­ட­மு­டி­யாது. அவ்­வா­றான இக்­கட்­டான நிலை­மையே எமக்கு ஏற்­பட்­டது. அதன் கார­ணமாகவே எமது ஆயு­த­ரீ­தி­யி­லான போராட்டம் முடி­வுக்கு கொண்­டு­வ­ர­ப்பட்­டுள்­ளது. சர்­வ­தே­சத்தின் நிகழ்ச்சி நிரலே காரணம்.

கேள்வி :- விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பில் மிகப்­பெரும் பிள­வாக கரு­தப்­படும் கருணா அம்­மானின் பிரிவு விடு­த­லைப்­போ­ராட்­டத்தின் போக்கை பல­வீ­னப்­ப­டுத்­தி­யதா?

பதில் :- விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பின் தோற்­று­வாயில் மாத்­தை­யாவின் பிரிவு எனப்­ப­டு­வது பார­தூ­ர­மாக பார்க்­கப்­பட்­டது. அப்­போது குறிக்­கப்­பட்ட அமைப்­பா­கவே விடு­த­லைப்­பு­லிகள் அமைப்பு இருந்­தது. அப்­போது இரண்டாந் தலைமை என்ற தர நிலை­யி­லி­ருந்த மாத்­தையா அமைப்­புக்கு எதி­ராக பார­தூ­ர­மான துரோ­கத்தை இழைத்தார். அப்­போது நாம் நட­வ­டிக்கை எடுத்தோம்.

அவ்­வா­றான தரு­ணத்­தி­லேயே முறி­ய­டிக்­கப்­ப­ட­மு­டி­யாத அமைப்­பாக நாம் எழுச்சி அடைந்து வளர்ந்து வந்­தி­ருந்தோம். கருணா என்­ப­வரின் பிரிவு இயக்­கத்­திற்கு பாரி­ய­ளவில் தாக்­கத்தை ஏற்­ப­டுத்­த­வில்லை. கரு­ணாவை ஒரு போர்த்­த­ள­ப­தி­யாக பார்த்­தி­ருக்­கின்­றார்கள். கரு­ணாவை விட அனு­பவம் வாய்ந்த திற­மை­யான பல்­வேறு தள­ப­திகள் அமைப்பில் இருந்­தார்கள். முகம் தெரி­யாத எத்­த­னையோ தள­ப­திகள் இருந்­தார்கள். ஆகவே இரா­ணுவ ரீதி­யாக எமது பின்­ன­டை­வுக்கு கரு­ணாவின் பிளவு நிச்­சயம் கார­ண­மல்ல.

கேள்வி :– தமி­ழீழ விடு­தலைப் புலிகள் அமைப்பு சாத­க­மான சந்­தர்ப்­பங்­களை தவ­ற­விட்­டு­விட்­டார்கள் என விமர்­சிக்­கப்­ப­டு­கின்­றதே?

பதில் : எமது தலைமை கொள்கை ரீதி­யாக குறிக்­கப்­பட்ட இலக்கை நோக்கி நகர்ந்­து­கொண்­டி­ருந்­தது. எமது கொள்­கைக்கு எதி­ரான எந்தச் சந்­தர்ப்­பத்­தையும் பயன்­ப­டுத்­திக்­கொள்­ள­வில்லை. சலு­கைகள் ஏனைய விட­யங்­க­ளுக்­காக எமது இலக்கை நாம் மாற்­றி­ய­மைக்க இய­லா­த­வொன்று.

கேள்வி :- இறு­திக்­கட்ட யுத்­தத்தின் போது தமிழ் நாட்டின் நிலைப்­பாடு எவ்­வா­றி­ருந்­தது?

பதில் :- முள்­ளி­வாய்க்கால் முற்­று­கையின் போது எம்­மக்கள் மீது கொண்ட பேர­பி­மா­னத்தின் கார­ண­மாக தமிழ் நாட்டு மக்கள் தீக்­கு­ளித்­தார்கள். ஆனால் எங்­களால் தெரிவு செய்­யப்­பட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் ஆகக்­கு­றைந்­தது தமது பாரா­ளு­மன்ற உறுப்­பினர் பத­வியைக் கூட இரா­ஜி­னாமாச் செய்ய முன்­வ­ர­வில்லை.

தமிழ் நாட்டு மக்­களின் போராட்டம் காத்­தி­ர­மாக இருந்­தது. இடையில் கடல் இருந்­ததன் கார­ணத்தால் அவர்­களால் நேர­டி­யாக கரம் நீட்­ட­மு­டி­யா­தி­ருந்­தது. அப்­போது தமிழ் நாட்டின் ஆட்­சியில் இருந்த தி.மு.க அரசு மத்­தி­ய­ அர­சுடன் இணைந்து அவர்­களின் நிகழ்ச்சி நிர­லுக்கு ஏற்ப செயற்­பட்­டது. தமிழ் நாட்டு மக்­களின் போராட்டம் இந்­தி­யாவில் தாக்கம் செலுத்­தா­த­வ­கையில் செயற்­பட்­ட­தற்­கான தண்­ட­னையை கரு­ணா­நிதி தற்­போது பெற்­றுக்­கொண்­டி­ருக்­கின்றார்.

கேள்வி :- நெருக்­க­டி­யான நிலை­மை­யின்­போது தமிழ் நாட்டு தலை­வர்கள் விடு­தலைப் புலி­களின் முக்­கி­யஸ்­தர்­க­ளுடன் பேசி­னார்­களா? தொடர்­பாடும் நிலை­மை­யொன்று காணப்­பட்­டதா?

பதில் : தற்­போது தேர்தல் காலம். பொதுத்­தேர்­தலில் எமது அமைப்­புக்கு ஜன­நா­யக பல­மான மக்கள் ஆணை கிடைக்கும். அதன் பின்னர் உங்­க­ளு­டைய வினா­வுக்கு நிச்­சயம் பதி­ல­ளிப்போம்.

கேள்வி :- புனர்­வாழ்­வ­ளிக்­கப்­பட்ட பின்னர் அல்­லது சிறைச்­சா­லை­க­ளி­லி­ருந்து விடு­தலை செய்­யப்­பட்ட பின்னர் முன்னாள் விடு­த­லைப்­புலி உறுப்­பி­னர்கள் என்ற அடிப்­ப­டையில் இருந்த நபர்கள் சுதந்­தி­ர­மாக நட­மா­ட­மு­டி­யாத நிலை இருந்து வந்­துள்­ளது. இது தொடர்­பாக த.தே.கூ பிர­தி­நி­திகள் பாரா­ளு­மன்றில் கூறி­யி­ருக்­கின்­றார்கள். அவ்­வா­றி­ருக்­கையில் தற்­போது உங்­களால் எவ்­வாறு சுதந்­தி­ர­மாக ஒன்று கூட முடிந்­துள்­ளது?

பதில் : 2009ஆம் ஆண்டு மே 18ஆம் திக­திக்கு முன்னர் மிகப்­ப­லம்­பெற்ற அமைப்பு. உல­கத்தின் எப்­ப­கு­தி­யிலும் தயா­ரிக்­கப்­பட்ட எவ்­வ­கை­யான நவீன ரக ஆயு­தத்­தையும் கையாளும் வல்­லமை கொண்ட நபர்கள். அவ்­வா­றான 12ஆயிரம் தேர்ச்சி பெற்ற ஆயு­தப்­பா­வ­னை­யா­ளர்­கள் சமூ­கத்தில் இணைக்­கப்­பட்­டுள்­ளார்கள். இரா­ணு­வத்தை விட்டு தப்பிச் சென்­ற­வர்கள் தென்­னி­லங்­கையில் மேற்­கொள்ளும் செயற்­பா­டு­களைப் போன்று இவர்­களால் வட­ப­கு­தியில் அச்­சு­றுத்­தல்கள் நிக­ழலாம் என்ற ஐயப்­பாடு அவர்­க­ளுக்கு இருந்­தது.

அதே­நேரம் இங்கு பாலியல் கொடு­மைகள், கள­வுகள் போதைப்­பொருள் பாவ­னைகள், காயப்­பட்ட போரா­ளிகள், பொது­மக்கள் கீழ்ப்­ப­டுத்­தப்­பட்ட நிலை என எம்மை சீற்றம் கொள்ள வைக்கும் செயற்­பா­டுகள் இடம்­பெற்­றன. எனினும் நாம் ஆயு­தங்கள் மீது நம்­பிக்கை வைக்­க­வில்லை. அவ்­வா­றான குற்­றச்­சாட்­டுக்குள் சென்­று­வி­டக்­கூ­டாது என்­பதில் தெளி­வாக இருந்தோம். எனினும் நாம் ஆயு­த­ரீ­தி­யாக செயற்­பா­டு­களை முன்­னெ­டுப்போம் என்ற நோக்கம் இருந்­த­மையால் எம்மை பின்­தொ­டரும் நிலைமை இருந்­தது. குறிப்­பாக வன்­னியில் நெருக்­கடி நிலை­யி­ருந்­தது.

அந்த நிலை­மையை மாற்­றி­யமைப்­ப­தற்­கான பாதையை பெற்­றுத்­த­ர­வேண்­டி­யது எம்மால் உரு­வாக்­கப்­பட்ட தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் கடமை. எமக்­கான அர­சியல் அங்­கீ­காரம் வழங்­கப்­படும் பொழுது எம்­மீ­தான சந்­தேகப் பார்­வைகள் துடைத்­தெ­றி­யப்­பட்­டி­ருக்கும்;. ஜே.வி.பி, ஈ.பி.ஆர்.எல்.எப்,புளொட், ரெலோ ஆகி­யன அவ்­வாறே வந்­துள்­ளன. ஆகவே எமக்­கான அர­சியல் அங்­கீ­கா­ரத்தை கடந்த ஆறு­வ­ருட காலத்­தினுள் பெற்­றுக்­கொ­டுத்­தி­ருக்­க­வேண்­டி­யது தமிழ்த் தலை­மை­களின் பணி. அவர்கள் அதனை கையி­லெ­டுக்­க­வில்லை. ஈற்றில் நாமே எமது அர­சியல் களத்தை திறக்க வேண்­டிய நிலைக்குள் தள்­ளப்­பட்­டு­விட்டோம்.

கேள்வி :- விடு­தலைப் புலிகள் அமைப்பின் முக்­கி­யஸ்­தர்­களை வேட்­பா­ளர்­களாக இணைத்­துக்­கொள்­ளா­மைக்­கான கார-ணம் என்ன?

பதில் : நாம் அனை­வ­ருக்கும் அழைப்பை விடுத்­தி­ருந்தோம். முக்­கி­ய­மான மக்கள் அறி­முகம் பெற்ற போரா­ளிகள் கடு­மை­யாக விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்­ட­வர்கள். அவர்கள் அந்த அழுத்­தங்­க­ளி­லி­ருந்து விடு­ப­ட­வில்லை. அவர்கள் பாது­காப்பு, காயங்கள், வலி­க­ளி­லி­ருந்து விடு­ப­ட­வில்லை. நூறு முதல் இரு­நூறு பேர் வரை­யி­லா­ன­வர்­களே விடு­த­லைப்­பு­லிகள் கட்­ட­மைப்பு ஜன­நா­யக ரீதி­யாக மாற்­றப்­பட்­டி­ருக்­கின்­றது என்ற செய்­தியைச் சொல்­வ­தற்­காக எமக்கு என்ன நடந்­தாலும் பர­வா­யில்லை என்ற தற்­து­ணி­வுடன் மக்கள் முன் நிற்­கின்றோம்.

கேள்வி :- இறுதி யுத்­தத்தின் போது நிகழ்த்­தப்­பட்­ட­தாகக் கூறப்­படும் மனித உரிமை மீறல்கள், மனி­தா­பி­மா­னச்­சட்­டங்கள் தொடர்­பாக விசா­ரணை எவ்­வாறு அமைய வேண்டும் எனக் கரு­து­கின்­றீர்கள்? இதற்கு உங்­க­ளு­டைய தரப்பின் பங்­க­ளிப்பு என்ன?

பதில் : யுத்தம் செய்த தரப்பு என்ற அடிப்­ப­டையில் அவர்கள் எங்­க­ளுக்கும் நாங்கள் அவர்­க­ளுக்கும் எதி­ரி­க­ளாக இருந்தோம். யுத்­தத்தின் கோர­மு­கத்தை நேர­டி­யாக சந்­தித்­தி­ருந்தோம். யுத்­தத்தின் இறு­தியில் தோற்று விட்ட தரப்­பாக நாம் கைது செய்­யப்­பட்டோம், சர­ண­டைய வைக்­கப்­பட்டோம். சிறைச்­சா­லை­களில், புனர்­வாழ்வு நிலை­யங்­களில் ஐ.நா.வில் அங்கம் வகிக்கும் இறை­மை­யுள்ள நாடொன்றின் அதி­காரம் படைத்த தரப்பின் நீதித்­து­றை­யி­னரால் விசா­ரணை செய்­யப்­பட்டோம். தண்­ட­னைகள் வழங்­கப்­பட்­டன. புனர்­வழ்வு அளிக்­கப்­பட்­டுள்­ளது. பொது­மன்­னிப்பு வழங்­கப்­பட்­டுள்­ளது. எமது குடி­யு­ரிமை பறிக்­கப்­ப­டாது இந்த நாட்­டினுள் நாம் இருக்­கின்றோம். எமது யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பாக அர­சாங்­கத்­தினால் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்­கின்றோம். ஆகவே இறை­மை­யுள்ள ஒரு தரப்பால் விசா­ரணை நிறை­வுற்ற நிலையில், ஏனைய தரப்பால் விசா­ரணை முன்­னெ­டுக்கத் தேவை­யில்லை.

இக்­குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பான பொறி­முறை யுத்தம் நிறை­வ­டைந்து இரண்டு வரு­ட­கா­லப்­ப­கு­திக்குள் ஏற்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்க வேண்­டி­ய­தொன்று. இன்று அதன் தாக்கம் குறை­வ­டைந்­துள்­ளது. ஆறு ஆண்­டு­க­ளா­கின்ற நிலையில் மார்ச், செப்­டெம்­பரில் ஜெனீ­வாவில் வெறு­மனே பேசு­பொ­ரு­ளாக மட்­டு­மே­யுள்­ளது.

யுத்­தத்தில் பங்­கெ­டுத்த தரப்­புகள் பதில் சொல்­ல­வேண்­டிய பொறி­மு­றைக்குள் கொண்டு சென்­றி­ருக்க வேண்­டி­யது அர­சியல் தலை­மை­களின் கடமை. இரண்டு மூன்று வரு­டங்­க­ளுக்குள் இறுக்­க­மான நிலைப்­பாட்டை எடுத்து தமிழ்த் தலை­மைகள் செயற்­பட்­டி­ருப்­பார்­க­ளாக இருந்தால் அந்த விசா­ர­ணைகள் காத்­தி­ர­மா­ன­தாக இருந்­தி­ருக்கும். ஆட்­சி­மாற்­றத்தின் பின்னர் யார் யார் எவ்­வாறு என்ற நிலையில் செப்டெம்­பரில் அறிக்­கைக்­காக எதிர்­பார்த்­தி­ருக்­கின்றோம்.

ஐக்­கிய நாடுகள் சபையில் கொண்­டு­வ­ரப்­படும் தீர்­மா­னத்தின் பிர­காரம் பதில் சொல்­வ­தற்கு தயா­ராக இருக்­கின்றோம். குறிப்­பாக குற்றம் சாட்­டப்­பட்ட தரப்­புக்­க­ளாக இருக்கும் நாமும், அர­சாங்­கமும் சர்­வ­தேச நீதி­மன்­றத்தின் முன்னர் நிறுத்­தப்­ப­டு­வார்­க­ளாக இருந்தால், பாதிக்­கப்­பட்ட எமது மக்­க­ளுக்கு உண்­மை­யான நீதி வழங்­கப்­ப­டு­மா­க­வி­ருந்தால் குற்­றச்­சாட்டு தொடர்பில் பதி­ல­ளிக்கத் தயா­ராக இருக்­கின்றோம்.

கேள்வி :- தேசிய இனப்­பி­ரச்­சி­னைக்­கான நிரந்­தர அர­சியல் தீர்வு என்­பது தொடர்­பாக உங்­க­ளு­டைய நிலைப்­பாடு என்ன?

பதில் : தமி­ழர்­க­ளுக்­கான தாயகம், சுய­நிர்­ணயம் என்­பன நிறு­வப்­ப­ட­வேண்­டு­மென்­ப­தற்­காக மிகப் பலம்­வாய்ந்த செயற்­பாட்டை நாமே மேற்­கொண்­டி­ருந்தோம். அந்த உரி­மையை கோரு­வ­தற்கு யாருக்கும் எந்­த­வி­த­மான தகு­தி­யு­மில்லை. எமது உழைப்பை எவ­ருமே சீர்­தூக்கிப் பார்க்க முடி­யாது.

திம்பு கோட்­பா­டுகள், இலங்கை இந்­திய ஒப்­பந்தம், அதற்குப் பின்­ன­ரான காலப்­ப­கு­தியில் படிப்­ப­டி­யாக எட்­டப்­பட்ட தீர்­மா­னங்கள் என பல காணப்­ப­டு­கின்­றன. 1985ஆம் ஆண்டு திம்புக் கோட்­டு­பா­டுகள் இயற்­றப்­பட்­ட­போது எமது போரா­ளிகள் 650இற்கு குறை­வான போரா­ளி­களே வீரச்­சா­வ­டைந்­தி­ருந்­தனர். 1958, 1983 இன்­க­ல­வ­ரங்கள், சுற்­றி­வ­ளைப்­புக்­களில் 10ஆயி­ரத்­திற்கும் குறை­வான மக்­களே சாவைத் தழு­வி­யி­ருந்­தனர். இதற்­கான நிவா­ர­ண­மா­கவே அக்­கோட்­பா­டுகள் அமைந்­தி­ருக்­கின்­றன.

தற்­போது 30வரு­டங்கள் கடந்து இவ்­வ­ளவு இழப்­புக்­களை சந்­தித்­தி­ருக்கும் நிலையில், எமது போராட்டம் சர்­வ­தேச­ம­யப்­ப­டுத்­தப்­பட்­டி­ருக்கும் நிலையில் மீண்டும் பின்­னோக்கிச் செல்­ல­மு­டி­யாது. எமது தாய­கத்­திற்­கான தீர்வு இந்த மண்­ணி­லேயே உள்­ளது. அதனை நாம் வெளி­நா­டு­களில் தேட­மு­டி­யாது. அதை நோக்­கிய பய­ண­மாக எமது தரப்பு செயற்­படும்.

கேள்வி :- உங்­க­ளுக்­கான மக்கள் ஆணை கிடைக்கும் பட்­சத்தில் தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்­புடன் இணைந்து பணி­யாற்­று­வீர்­களா?

பதில் :- மக்கள் ஒன்றுபட்ட தமிழ்த் தேசி-யக் கூட்டமைப்புக்கே வாக்க-ளிக்க வேண்டுமென தமிழ்த் தலை-மை-கள் கூறுகின்றார்கள். கடந்த ஐந்து வருடங்களாக கூட்டமைப்பு ஒன்று-பட்டு வலுவான கட்டமைப்பாக மாற-வேண்டும் என்பதற்காக பதிவு செய்யு-மாறு மக்கள் கோரியிருந்தனர். அப்போது செவிடன் காதில் ஊதிய சங்காகவே இருந்தனர்.

எனினும் எமக்கான ஆணை கிடைக்க-ப்பெறும் பட்சத்தில் தமிழீழ தேசியத் தலை-வரால் உருவாக்கப்பட்ட தமிழ்த் தேசி-யக் கூட்டமைப்பை எம்முடன் இணைத்து தமிழர்களின் பேரம்பேசும் சக்தி-யாக புதிய செல்நெறியில் பயணிக்க தயா-ரா-கவுள்ளோம்.

கேள்வி :– ஜனநாயகப் போராளிகள் மக்கள் முன் வைக்கும் கோரிக்கைகள் என்ன?

பதில் : மீள்குடியேற்றம் நிறைவடை-ய-வில்லை, அரசியல் கைதிகள் விடு-விக்க-ப்ப-டவில்லை, உயர்பாதுகாப்பு வலயங்கள் அகற்றப்படவில்லை. இந்நிலையில் நாட்டில் 12ஆயிரம் விடுதலைப்புலிகள் இருக்கின்றார்கள். வெளிநாடுகளில் அவர்க–ளின் கட்டமைப்புகள் இயங்கி-யவண்ணமுள்ளன. ஆகவே அரசியல் தீர்வை வழங்கி-னால் விடுதலைப்புலிகள் பலம்பெற்று-விடுவார்கள் என்பதால் அதனை வழங்கமுடியாது. இதுவே தென்னி-லங்கையின் நிலைப்பாடு.

தொடர்ந்தும் புலி வருது புலி வருது எனக் கூச்சலிட முடியாது. தமி-ழீழ விடுதலைப்புலிகள் 30வருட ஆயுத-ப்போராட்டத்திலிருந்து ஜனநாயக வழி-யில் மக்களின் இலக்குகளை நோக்கி நகர்த்து-வதற்காக வந்துவிட்டோம். தமிழீழ விடுதலைப்புலிகள் வந்து விட்டார்கள். உரிமைக்காக போராடும் அமைப்பை புனர்வாழ்வின் முகாமிலோ அல்லது சிறை-ச்சாலையிலோ வைத்திருப்பதால் அவர்க-ளின் இலக்குகளை தடுத்து விட்டதாக கருதமுடியாது.

17ஆம் திகதி எமது மக்கள் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கான அரசியல் அங்-கீக-ாரத்தை சிறப்பாக வழங்குவார்கள் என்ற பெருநம்பிக்கை எமக்குள்ளது. நாம் யாழ். மாவட்டத்தில் ஏழு ஆசனங்களையும் பெறுவதற்கான ஆணையை மக்கள் வழங்குவார்கள் என எதிர்பார்க்கின்றோம். மக்களுக்காக எவ்வளவு விடயங்களை செய்திருக்கின்றோம். 12ஆயிரம் போராளி-க-ளுக்காக அவர்கள் சொல்லப்போகும் செய்தி-க்காக தீர்க்கமான ஆணையை மக்கள் வழங்க வேண்டும். அதனைச் செய்வார்கள் என்ற நம்பிக்கையுள்ளது.

Share.
Leave A Reply

Exit mobile version